திரிகடுகம் நூல் குறிப்பு

Advertisement

திரிகடுகம் நூல் குறிப்பு

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் தமிழ் நூலான திரிகடுகத்தின் சிறப்புகளை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். திரிகடுகமானது தமிழில் சிறந்து விளங்கும் நூலாகும். திரிகடுகமானது மூன்று மூலிகை பொருட்களை உள்ளடக்கியது. உடலுக்கு எந்த ஒரு தீங்குகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும் என்பதற்காக இந்த பாடல்களின் கருத்து அமைந்துள்ளது. மேலும் நம் பதிவில் திரிகடுகத்தின் ஆசிரியர் குறிப்பு மற்றும் நூல் குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஏலாதி பாடலின் நூல் குறிப்பு

 

திரிகடுகம் சிறப்பு:

காரம், கார்ப்பு என்று சொல்லப்படும் கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற மூலிகை பொருள்கள்  உடலுக்கு நன்மை தரக்கூடியது என்று இந்தப் பாடல்கள் அமைந்துள்ளது. இம்மூன்றையும் உணர்த்தும் பொழுது திரிகடுகம் என்று சொல்லப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு:

திரிகடுகம் என்ற நூலை இயற்றியவர் நல்லாதனார் ஆவர். நல் என்பது அடைமொழியை குறிக்கும். ஆதனார் என்பது இவருடைய இயற்பெயர் ஆகும். இவரின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு ஆகும். காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தை உடையவர் என்று கூறப்படுகிறது. இவர் திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர் ஆவார்.

திரிகடுகம் நூல் குறிப்பு:

திரிகடுகம் நூலானது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். மருந்தின் பெயரால் புகழ்பெற்ற நூலாகும்.

இந்த நூலானது 101 வெண்பாக்களை கொண்ட நூலாகும்.

இந்த நூலானது மனித சமுதாயத்திற்கு இம்மையும், மறுமையும் நல்ல வழியில் காட்ட கூடியதாக இருக்கிறது.

திரிகடுகம் நூலானது நாலடியார் மற்றும் திருக்குறளின் கருத்துக்களை பெரிதும் பின்பற்றியது.

இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடல்கள் திருமாலை பற்றி கூறியுள்ளது. அதோடு இந்நூலின் ஒவ்வொரு பாடல் வரிகளிலும் இம்மூவர் அல்லது இம்மூன்று என்றும் சொல்கள் தொடர்ந்து வருகிறது.

திரிகடுகம் பாடல்களில் 66 பாடல்களில் நன்மை தருபவை பற்றியும் 34 பாடல்களில் தீமை தரக்கூடியதை பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.

கணவன் மனைவி வாழ்க்கையில் சிறந்து வாழ வேண்டும் என்பதற்காக 35 பாடல்கள் உள்ளன.  அதுமட்டுமின்றி 300 அறக்கருத்துக்களையும் இந்த பாடல் கூறியுள்ளது.

முக்கிய பாடல் அடிகள்:

  • வேளாளன் என்பான் விருந்திருக்கஉண்ணாதான்
  • நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
  • நட்பின்கொழுநனை பொய் வழங்கின்இல்லாகும்
  • கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி
  • தாளாளன் என்பான் கடன்படவாழாதான்
  • நிறை நெஞ்சம் உடையானைநல்குரவுஅஞ்சும்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement