புறநானூறு குறிப்பு வரைக | Purananuru Nool Kurippu

புறநானூறு குறிப்பு வரைக – Purananuru Kurippu in Tamil

சங்கத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புற நூல்களுள் ஒன்று. புறநானூறு எனப்படும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இந்த நூலை தொகுத்தவர் பெயரும்.. தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சரி புறநானூறு பற்றி சிறு குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம் வாங்க..!

புறநானூறு குறிப்பு வரைக:

இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல். இந்நூலில் உள்ள பாடல்கள், பல்வேறு சமயங்களில் பலரால் பலரைப் பற்றிப் பாடப் பட்டவையாகும். இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இது எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் சங்க கால மக்களின் வாழ்வு நிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வீரம், வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது. தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டு உயர்வையும் அறிய பெரிதும் உதவுகிறது.

புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும் கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டைய போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன.

புறநானூறு விளக்கம்:

இந்த நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை ஆகும். அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்த நூலில் அரசன் முதல் எளிய குயவன் மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர்.

ஆறாம் வகுப்பு சிலப்பதிகாரம் வினா விடை

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil