பெயிண்ட் வகைகள் மற்றும் பயன்கள் | Paint Types in Tamil
பண்டிகை நாட்களில், இல்லத்தில் விசேஷங்கள் நடைபெறும் போது பெயிண்ட் அடிப்பது வழக்கம். வீட்டிற்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்கலாம், எந்த பெயிண்ட் அடித்தால் வீடு அழகாக இருக்கும் என்று பலருக்கும் ஆர்வமும், யோசனையும் இருக்கும். பெயிண்டில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான பெயிண்டுகளுமே ஒவ்வொரு விதமான நன்மையை தருகின்றன. பெயிண்டின் வகைகள் மற்றும் அதன் பயன்பாட்டை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெயிண்ட் வகைகள்:
Types of Paint in Tamil: பெயிண்டின் தன்மையை பொறுத்து அதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று Water Based Paint மற்றும் Oil Based Paint.
White Wash/ Colour Wash:
புதிதாக கட்டிய வீடுகளில் White Wash/ Colour Wash அடிப்பார்கள். சுண்ணாம்பில் தண்ணீர் கலந்து அடிப்பதற்கு White Wash என்று பெயர். செங்கல் சுவர், கான்கிரீட் சுவறில் இதை நாம் பயன்படுத்தலாம். சுண்ணாம்பை 3 Coat அடிக்க வேண்டும்.
Distemper Paint:
- Types of Paint in Tamil: இந்த பெயிண்ட்டுடன் நீங்கள் Chalk, Lime மற்றும் தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதனை சிமெண்ட் பெயிண்ட் என்றும் அழைப்பார்கள். சிமெண்ட் சுவரில் இந்த பெயிண்டை பயன்படுத்தும் போது பேஸ் பெயிண்ட் அல்லது Primer Paint கொடுக்க தேவையில்லை.
- இது 3 முதல் 4 வருடம் வரை உழைக்கும். இதை நீங்கள் உட்புற சுவர், வெளிப்புற சுவர் என இரண்டு சுவற்றிலும் பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் இது Water Resistant கிடையாது. கோட்டிங் 2 முறை கொடுக்க வேண்டும். இதன் விலை 25/- Per Litter.
Emulsion Paint:
- பெயிண்ட் வகைகள்: மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் பெயிண்டில் இது முதலிடம் வகிக்கிறது. இந்த பெயிண்டை தயாரிப்பதற்கு அதிகமான வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. Pigments – 25%, Solvent – 45%, Binders – 25%, Other Additives – 5% உபயோகப்படுத்தப்படுகிறது.
- இந்த பெயிண்டை சுவரில் அடிப்பதற்கு முன்பு Primer அடிக்க வேண்டும். இதன் விலை Rs.125/- முதல் Rs.600/- Per Litter வரை கிடைக்கிறது. இதில் Vinyl Soft Sheen, Vinyl Mate, Vinyl Silk போன்ற வகைகள் உள்ளன.
Asbestos Paint:
- Types of Paint in Tamil: பைபர் மெட்டீரியல் வைத்து Asbestos Paint தயாரிக்கப்படுகிறது. இதனை மெட்டல் பைப், இரும்பு பைப் போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். இது பைப்புகளில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.
அலுமினியம் பெயிண்ட்:
- அலுமினியத்தை பேஸ் மெட்டீரியலாக வைத்து இந்த பெயிண்ட் உருவாக்கப்படுகிறது. மெட்டல், Street lamp போன்றவற்றில் பயன்படுத்தலாம். இது Water Resistant.
சிமெண்ட் பெயிண்ட்:
- Types of Paint in Tamil: அதிகமாக Floor-ல் இந்த பெயிண்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. Water Resistant. இதனுடைய பேஸ் மெட்டீரியல் சிமெண்ட்.
Graphite Paint:
- இந்த பெயிண்ட் கிராபைட்டை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. வாகனங்களின் டயர்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
Casein Paint:
- பெயிண்ட் வகைகள்: பால் மற்றும் தயிரிலிருந்து இந்த பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது. இதில் White Pigment சேர்க்கப்படுகிறது. சீலிங் மற்றும் சுவரில் பயன்படுத்தப்படுகிறது. சுவரில் பெயிண்ட் அடிக்கும் போது 3 கோட்டிங் கொடுக்க வேண்டும்.
Oil Paint:
- பெயிண்ட் வகைகள்: இது அனைத்து இடத்திலும் பயன்படுத்தப்படும் பெயிண்ட். சுவர், கதவு, Window Frame Work போன்ற இடத்தில் உபயோகப்படுத்தலாம்.
ஏசியன் பெயிண்ட் கலர் |
நிப்பான் பெயிண்ட் கலர் குறியீடு |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |