பெரிய வியாழன் என்றால் என்ன? | What is Maundy Thursday in Tamil

What is Maundy Thursday in Tamil

பெரிய வியாழன் சிறப்பு | Periya Viyalan in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் பெரிய வியாழன் என்றால் என்ன என்பதையும் அதன் தொடர்பான சில விஷயங்களையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் கிறிஸ்தவ இனத்தவர்கள் கொண்டாடுகின்ற மிகப்பெரிய விழாவாகும். சரி வாங்க பெரிய வியாழன் பற்றிய தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

புனித வெள்ளி 2023

பெரிய வியாழன் என்றால் என்ன?

பெரிய வியாழன் என்பது கிறிஸ்தவ இனத்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாட்களை நினைவு கூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

இந்த நாளினை பெரிய வாரம் அல்லது புனித வாரம் அழைக்கப்படுகிறது.

பெரிய வியாழன் விழா:

இந்த விழா வருடந்தோறும் மார்ச் 19-ல் இருந்து ஏப்ரல் 22 முடிய உள்ள ஏதாவது ஒரு வியாழனன்று கொண்டாடப்படும்.

இயேசு உயிர் பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும.

இயேசு பெரிய வியாழன் அன்று தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாள் தம் சீடர்களோடு இரவு உணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவு கூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க விதிமுறை:

கத்தோலிக்க திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும். மாலை வேளையில், வசதியான நேரத்தில் இரவுணவுத் திருப்பலி கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள்.

தமிழ் பைபிள் வசனங்கள்

பெரிய வியாழன் விழாக்கள்:

பெரிய வியாழன் அன்று மூன்று விழாக்கள் நடத்தப்படுகிறது.

  • இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல்
  • இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுதல்
  • இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்

இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல்:

இயேசு தன்னுடைய வாழ்நாள்களில் பல முறை சாதாரண மக்களோடு, குறிப்பாக தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார்.

யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடிய “பாஸ்கா” விழாவின்போது ஒன்றாகக் கூடி வந்து விருந்து கொண்டாடி, தம்மை எகிப்து நாட்டு அடிமை நிலையிலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இட்டுச்சென்ற கடவுளுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இயேசுவும் பாஸ்கா விழாவைத் தம் சீடரோடு சேர்ந்து கொண்டாடினார்.

அப்போது இயேசு அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, அதைப் பிட்டுத் தம் சீடருக்குக் கொடுத்து, “இது எனது உடல்” என்று கூறினார். அதுபோலவே இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, தம் சீடர்களுக்குக் கொடுத்து, “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்” என்றார். பின்னர் சீடர்கள் அந்த அப்பத்தை உண்டு, இரசத்தைப் பருகினார்கள்.

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுதல்:

இயேசு தம் சீடர்களின் காலடிகளை கழுவிய நிகழ்ச்சியை யோவான் கூறுகிறார். இயேசு தம் சீடர்களின் மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவராக இருந்த போதிலும், ஓர் அடிமையின் பணியாகிய காலடி கழுவும் செயலைச் செய்தார். இதன் மூலம் ஒருவர் ஒருவருக்குப் பணி செய்கின்ற மனநிலையைத் தம் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு இந்த செயல் முறையில் காட்டினார்.

இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்:

பணி செய்வதே கிறிஸ்துவின் சீடருக்கு அடையாளமாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு விதத்தில் கிறித்தவ சபைகளால் கொண்டாடப்படுகிறது.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் கத்தோலிக்க குருக்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி வழங்கும் பழக்கத்தைத் தொடங்கிவைத்தார். அவருக்குப் பின் பதவி ஏற்ற பதினாறாம் பெனடிக்டும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்தார்.

திருத்தந்தை காலடிகளைக் கழுவிய நபர்களுள் சிலர்:

  • கேப் வர்டி நாட்டைச் சார்ந்த 16 வயது இளைஞர். சென்ற ஆண்டு வாகன விபத்தில் இவருக்கு கால் அசைவு இல்லாமல் போய் விட்டது.
  • 19 வயது நிறைந்த ஒரு ஊனமுற்றவர்.
  • 39 வயதான, மூளை இயக்கம் சார்ந்த வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்.
  • 86 வயதான, நடக்க இயலாத முதியவர்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil