யானை வேறு பெயர்கள் | Elephant Other Names in Tamil

Advertisement

யானைக்கு வேறு பெயர்கள் | Elephant Names in Tamil

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..! விலங்கின வகைகளில் மிகப்பெரிய விலங்கினத்தை சேர்ந்தது யானை. யானையின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள். யானைகளுக்கு ஞாபக திறன் அதிகம் கொண்டவை. காடுகளில் கூட்டமாக வாழும் உயிரினங்களில் ஒன்று. ஆண் யானையை களிறு என்றும், பெண் யானைக்கு பிளிறு என்றும் பெயர் வைத்து அழைப்பார்கள். இது போன்று யானைகளுக்கு 60 வகையான பெயர் வகைகள் உள்ளன. அந்த பெயர் வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..! 

உலகம் வேறு பெயர்கள்

யானையின் வேறு பெயர்:

யானை (கரியது) வேழம் (வெள்ளை யானை)
களிறு களபம்
மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர் உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி அரசுவா
அல்லியன் அறுபடை
ஆம்பல் ஆனை
இபம் இரதி
குஞ்சரம் இருள்
தும்பு வல்விலங்கு

 

தூங்கல் தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி
பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
பூட்கை (துளையுள்ள கையை உடையது) ஒருத்தல்
ஓங்கல் (மலை போன்றது) நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது) கும்பி
தும்பி நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது) கரேணு
உவா (திரண்டது) கரி (கரியது)
கள்வன் (கரியது) கயம்

 

சிந்துரம் வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது) தந்தி
மதாவளம் தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது) வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா மருண்மா
மதகயம் போதகம்
விரமலி மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள். பிடி
அதவை வடவை
கரிணி அத்தினி (பெண் யானை பெயர்)

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் தமிழ்
Advertisement