விளித்தொடர் என்றால் என்ன? | Vili Thodar Endral Enna

Advertisement

விளித்தொடர் விளக்கம் | Vili Thodar in Tamil

தமிழ் மொழியில் இயல், இசை, நாடகம் என மூன்று தமிழ் உள்ளது, இதை தான் நாம் முத்தமிழ் என்று அழைக்கிறோம். இவற்றிற்கு நம் முன்னோர்கள் தனித்தனியாக இலக்கணம் வகுத்துள்ளனர். நம்முடைய மொழியை பேசுவதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிவது தான் இலக்கணம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இலக்கணத்தில் ஒன்றான விளித்தொடர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இந்த பதிவு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். சரி வாங்க விளித்தொடர் என்றால் என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்.

தொகாநிலைத் தொடர் என்றால் என்ன:

  • இந்த விளித்தொடர் தொகாநிலை தொடர்களில் ஒன்று. தொகாநிலை தொடர் என்பது ஒரு தொடரில் இரண்டு சொற்கள் அமைந்து அதற்கு இடையில் சொல் அல்லது உருபு மறையாமல் வருவது தொகாநிலை தொடர் எனப்படும்.

தொகாநிலைத் தொடர்:

  1. எழுவாய்த்தொடர்
  2. விளித்தொடர்
  3. வினைமுற்றுத்தொடர்
  4. பெயரெச்சத்தொடர்
  5. வினையெச்சத்தொடர்
  6. வேற்றுமைத்தொடர்
  7. இடைச்சொற்றொடர்
  8. உரிச்சொற்றொடர்
  9. அடுக்குத்தொடர் ஆகிய ஒன்பது தொடர்கள் தொகாநிலை தொடர்களாகும்.
அணி இலக்கணம்

விளித்தொடர் என்றால் என்ன?

  • Vili Thodar Endral Enna? விளியுடன் வினை தொடர்ந்து வருவது விளித்தொடர் ஆகும். ஒருவரை அழைத்தல் பொருளில் வருவது விளி எனப்படும். அவ்வாறு விளியேற்கும் போது பெயர்ச்சொல்லில் கடை எழுத்து நீண்டு ஒலிக்கும்.
  • படர்க்கை பெயரை முன்னிலை பெயராக மாற்றி அழைப்பதை விளி வேற்றுமை எனலாம். படர்க்கை என்பது தன்னையும் தனக்கு முன்னால் இருப்பவரையும் குறிக்காமல் மற்றொருவரை குறிப்பது படர்க்கை எனப்படும்.
  • தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிட பெயர்களாகும். இந்த மூவிட பெயர்களுள் ஒன்று தான் படர்க்கை.
  1. தன்மை – நான் 
  2. முன்னிலை – நீ 
  3. படர்க்கை – அவன் 

Vili Thodar in Tamil Example:

உதாரணத்திற்கு: நண்பா எழுது

இதில் நண்பா எனும் விளிப்பெயர் எழுது எனும் பயனிலையை கொண்டு முடிந்துள்ளது.

விளித்தொடர் எடுத்துக்காட்டு:

  • இந்த தொடர்களில் வேற்றுமையின் உருபுகள் படர்க்கை பெயரின் கடைசியில் மிகுதல், திரிதல், கெடுதல், இயல்பு மற்றும் ஈற்றில் எழுத்து திரியும்.
  • மிகுதல் – தம்பீ, கேளாய் – இதில் தம்பீ என்பது ஈகாரம் பெற்றுள்ளது.
  • திரிதல் – செல்வ, கேளாய்
  • கெடுதல் – அம்மா, கேளாய், இயல்பு – முருகா, கேளாய்
  • இதில் முருகன் என்பதன் ஈற்று எழுத்து கெட்டு க, கா ஆயிற்று

விளித்தொடர் – சான்று தருக:

  • கண்ணா வா
  • மாதே செய்
  • அமுதா எழுது
  • மழையே வா
  • வனிதா படி
  • முருகா வா
  • அண்ணா விளையாட வா
  • அக்கா வா
  • கண்ணா சாப்பிட வா
  • இந்த தொடரில் உள்ள சொற்களில் விளியுடன் வினை தொடர்ந்து வந்ததால் இதை விளித்தொடர் என்கிறோம்.
தொடர்புடைய பதிவுகள் – லிங்கை கிளிக் செய்து படித்து பாருங்கள் 
இலக்கணம் என்றால் என்ன?
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
வினா எத்தனை வகைப்படும்?
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement