ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி? | 1 Acre to Square Feet in Tamil

1 Acre to Square Feet in Tamil

ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி? | 1 acre in sq ft in Tamil

நண்பர்களுக்கு வணக்கம். இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்ள போவது என்னவென்றால் ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி என்றுதான். இந்த நில அளவுகள் என்பது அனைவருக்கும் அவ்வளவு சீக்கிரம் தெரிந்துவிடாது. நில சம்மந்தமான அளவுகளானது நிலம் வைத்திருக்க கூடிய ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. நாம் இவற்றையெல்லாம் தெரிந்துவைத்திருந்தால் தெரியாத நான்கு பேருக்கு நாம் விளக்கி எடுத்துரைக்க முடியும். வாங்க இந்த பதிவில் ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி என்று தெரிந்துக்கொள்ளலாம்..

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

நில அளவைகள்:

ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். அந்த காலத்தில் உள்ள நிலங்களின் அளவுகளை மக்கள் பெரும்பாலும் குழி, வேலி, மா, ஹெக்டேர், ஏக்கர் என்று பேச்சு வழக்கில் சொல்லிவந்தார்கள். இப்போது உள்ள நடைமுறையில் வீடு மனைகளை சதுர அடி கணக்கில் சொல்லி வருகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் சென்னை போன்ற நகர்புறத்தில் கிரவுண்டு என்ற அளவீட்டில் நடைமுறையில் கூறப்படுகிறது.

ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி?

விடை: ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும்.

பொதுவாக, ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாக கணக்கீடு செய்யப்படுகிறது. அதையே சதுர அடியில், ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் கொண்டதாகும்.

ஒரு குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் அளவானது அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும்.

அதாவது 1326 சதுர அடி கொண்ட மனையின் அளவை 435.6 என்ற அளவால் வகுத்து கிடைக்கும் 3.04 (3 சென்ட்) என்பதுதான் மனையின் சென்ட் அளவாகும்.

ஒரு கிரவுண்ட் எத்தனை சதுர அடி:

விடை: ஒரு கிரவுண்டு என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும்.

எனவே, குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது மனைக்கான கிரவுண்டு அளவு ஆகும்.

மேற்கண்ட மனையின் மொத்த சதுர அடியான 1326 என்பதை 2400 என்ற அளவால் வகுத்தால் வரக்கூடிய 0.55 என்ற விடை (அரை கிரவுண்டுக்கு சற்று கூடுதல்) மனையின் கிரவுண்டு அளவாகும்.

சதுர அடி கணக்கிடுவது எப்படி

ஏக்கரின் நீளம், அகலம் அளவுகள்:

 • 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
 • 1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

ஏக்கர் அளவுகள்:

 • 1 ஏக்கர் – 100 சென்ட்
 • 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
 • 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
 • 1 ஏக்கர் – 43560 ச.அடி
 • 1 ஏக்கர் – 4046 ச மீ

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்:

ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான நில அளவுகள் பயன்படுத்தப்படுகிறது.

 • பாரம்பரிய முறை அளவீடு: குழி, மா, வேலி, காணி, மரக்கா.
 • பிரிட்டிஷ் முறை அளவீடு: சதுர அடி, சென்ட், ஏக்கர்.
 • மெட்ரிக் வழக்கு அளவீடு: ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
 • ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil