20 எளிமையான திருக்குறள் | 20 Easy Thirukkural in Tamil

Advertisement

 20 எளிமையான திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் | 20 Easy Thirukkural in Tamil With Meaning

எளிமையான திருக்குறள்: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் உலக பொதுமறை நூல் என அனைவராலும் போற்றப்படும் திருக்குறளில் 20 எளிமையான திருக்குறளை பற்றி பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், திருக்குறள் போட்டிகளுக்கு கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இருபது எளிமையான திருக்குறளை அதன் விளக்கத்துடன் படித்தறியலாம் வாங்க.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முதல் விஷயம் திருக்குறள். ஒவ்வொரு திருக்குறளும் ஒரு கருத்தினை வெளிப்படுத்துகிறது. ஒழுக்கம் முதல் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பது வரை அனைத்தையும் திருக்குறள் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, குழந்தைகள் எளிதில் புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் மிகவும் ஈஸியான திருக்குறளை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

20 Easy Thirukkural in Tamil With Porul – திருக்குறள் 10 to 20:

  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலானது. அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

2.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

விளக்கம்: ஒருவரிடம் இருக்கும் அடக்கமானது அவரை உயர்த்தி இறைவனடி சேர்க்கும், அடக்கம் இல்லாத மாந்தர் வாழ்வில் பல துன்பங்களை அடைவார்.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

விளக்கம்: மலர் போன்ற மனத்தில் நிறைந்த கடவுளை பின்பற்றுவோரின் புகழ்  உலகில் நெடுங்காலம் வரை நிலைத்து நிற்கும்.

4. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

விளக்கம்: அடக்கத்துடன் இருப்பது தான் அறிவுடைமை என்று அறிந்து வாழ்ந்தால் அந்த அடக்கம் நற்பண்பு உள்ளவர்களால் அறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

5. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

விளக்கம்: எந்த விதமான தீமைகளை செய்தவருக்கும் அந்த தீமையில் இருந்து விடுபடுவதற்கான வழி இருக்கும், ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்தவருக்கு அந்த பாவத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி கிடையாது

6. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

விளக்கம்: பணிவுடன் வாழ்வது அனைவருக்கும் நன்மையை கொடுக்கும், ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

திருக்குறள் விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்

20 Easy Thirukkural in Tamil – திருக்குறள் 20:

7. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

விளக்கம்: ஒரு பிறப்பில் தன்னுடைய ஐம்புலன்களையும் அடக்கி ஆமையை போல் ஒரு மனிதன் வாழ்ந்தால், அது அவன் அடுத்து எடுக்க போகும் அனைத்து பிறவிகளுக்கும் காவலாக இருக்கும்.

8. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

விளக்கம்: ஒரு மனிதன் தன் வாழ்வில் எதை காக்காவிட்டாலும் நாவையாவது அடக்கி கொள்ள வேண்டும், நாவடக்கம் இல்லையெனில் அவர் சொன்ன சொல்லே அவருக்கு துன்பமாக மாறிவிடும்.

20 Easy Thirukkural in Tamil With Meaning:

9.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

விளக்கம்: எந்த ஒரு பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்யும் உதவி கடலை விட பெரியதாக இருக்கும்.

10. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

விளக்கம்: தீயினால் சுட்ட புண் தோலின் மேற்புறத்தில் வடுவாக இருந்தாலும் அந்த புண் ஆறி விடும், ஆனால் ஒருவன் பேசிய தீய சொற்கள் அவன் வாழும் காலம் வரை ஆறாது.

11. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

விளக்கம்:  ஒருவர் செய்த நன்மையை எப்பொழுதும் மறக்க கூடாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.

20 எளிமையான திருக்குறள்:

12. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்

விளக்கம்:  நம் உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அதேபோல், அன்புக்குரியவரின் துன்பமான சூழ்நிலை கண்டபோது கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

13. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம்: இந்த உலகில் கிடைக்க கூடிய செல்வங்களுள் அறிய செல்வமானது உயர்ந்த மனிதர்கள் தங்களின் மனதை எப்போதும் ஆளும் “அருள்’ எனப்படும் செல்வமே ஆகும். மற்றபடி அழிந்து போகும் நிலையற்ற பொருட் செல்வங்கள் இந்த உலகில் இழிவான மனிதர்களிடம் கூட இருக்கின்றன.

14. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

விளக்கம்: எந்த கருத்தை யார் சொன்னாலும் அந்த கருத்தில் உள்ள உண்மையைக் காண்பது அறிவு.

15.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்வியில் உள்ள கருத்துக்களை ஏற்று வாழ்க்கையில்  நல் வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும். 

16. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்: மணலை தோன்ற தோன்ற தோன்றிய அளவிற்கே தண்ணீர் சுரக்கும். அதேபோல், மனிதர்கள் கல்வியை கற்க கற்க தான் அறிவு பெருகும். 

20 Easy Thirukkural in Tamil :

17. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

விளக்கம்: அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்வார்கள், அறிவில்லாதவர் அதனை அறிய இயலாதவர்களாக இருப்பார்கள்.

18. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்

விளக்கம்: அறிவில்லாதவர்கள் பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பார்கள், அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

20 Easy Thirukkural in Tamil:

19. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

20. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்

விளக்கம்: அறிவுடையவர் இடத்தில் செல்வம் இல்லையெனிலும் அவர்கள் எல்லாம் உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள், அறிவு இல்லாதவர்கள் இடத்தில் செல்வம் இருந்தாலும் அவர்கள் இல்லாதவராகவே கருதப்படுவார்கள்.

தொடர்புடைய பதிவு
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement