50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்

Advertisement

50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | 50 Proverbs in Tamil and English

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காணப்போகிறோம். பழமொழி என்றாலே ஞாபகத்திற்கு வருவது நம் தாத்தா, பாட்டிகள் தான். எப்படி.? என்று நினைக்கிறீர்களா..? அவர்கள் தான் நாம் எதாவது ஒரு செயல் செய்யும் போது அவர்கள் அசால்ட்டா பழமொழி சொல்வார்கள்.

நாம் சிரித்துக்கொண்டே செல்வோம். சில பழமொழி சிரிப்பது போலவும், சிந்திப்பது போலவும் இருக்கும். ஆனால் அதில் பல அர்த்தங்கள் இருக்கு ம். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும். சரி வாங்க பிரண்ட்ஸ் பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துகொள்வோம்.                  

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் pdf:

Tamil proverbs  English proverbs 
தோல்வியே வெற்றிக்கு முதல்படி  Failures are stepping stones success
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி   Faith is the force of life 
பழக பழக பாலும் புளிக்கும்  Familiarity breeds contempt 
வைத்தியனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு  Feed by measure and defy the physician 
சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே  Every man is mad on some point 
எல்லா இன்பத்துக்கும் பின்பு ஒரு துன்பம் உண்டு  Every pleasure has a pain 
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்  Delay is dangerous 
இக்கரைக்கு அக்கறை பச்சை  Distance lends enchantment to the view  
அடக்கம் ஆயிரம் பொன் தரும் Humility often gains more than pride 

கல்வி பற்றிய பழமொழிகள்

50 பழமொழிகள் தமிழ் | 50 Proverbs in Tamil and English For Students

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது  What won’t bend at five will not bend at fifty 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு  A drunkard words are gone by the next dawn 
தனி மரம் தோப்பு ஆகாது  A single tree does not make on orchard 
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்  A thorn can only be removed with another thorn (literal) fight fire with fire 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்  Face is the index of the mind 
ஆழம் பார்க்காமல்காலை விடாதே  Don’t step in the river without knowing its depth.
யானைக்கும் அடி சறுக்கும். Even elephants do slip
எறும்பு ஊற கல்லும் தேயும் Even ants can wear out a rock (literal)

Persistence never fails

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு Even a crow thinks its child is golden.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு Even when throwing in the river, measure what you throw

50 Proverbs in Tamil and English:

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் Only when in the sun do you miss the shade.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது The mustard its small, but it is still too spicy
மூர்த்தி சின்னதனாலும் கீர்த்தி பெரியது The idol may be small, its fame is big
புலி பசித்தாலும் புல்லை தின்னாது Even hunger wont make tiger eat grass
சிறு நுணலும் தன் வாயால் கெடும் The frog that talks is soon dead
மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தல் பொன்குடம் If the mother-in-law breaks it, it is a mud pot. If the daughter-in-law breaks it, it is a golden pot
மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல. All that glitters is not gold.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் There is no downward journey for those who keep trying
நாய் வாலை நிமிர்த்த முடியாது. A dog’s tail can’t be straightened
பசி ருசி அறியாது  Hunger is best source 

ஒரு வரி பழமொழிகள் இதோ உங்களுக்காக..!

20 பழமொழிகள் in Tamil and English

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தேவையா  Don’t lock the  stable door when 
அடிக்கிற கைதான் அணைக்கும்  The hand that beats alone will embrace 
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்  A guilty conscience needs no answer   
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்  A hungry man is angry man  
சிறு துளி பெருவெள்ளம்  A penny saved is a penny earned 
பாம்பென்றால் படையும் நடுங்கும்  A snake could make an army panic 
பாம்பின் கால் பாம்பறியும்  A thief knows thief  
மின்னுவதெல்லாம் பொன்னல்ல  All that glitters is not gold 
பொறுத்தார் பூமி ஆழ்வார்  All things come to those who wait 
ஆபத்துக்கு பாவமில்லை  All this fair in love and war

Palamoligal in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் PDF 

வினை விதைத்தவன் விதை  அறுப்பான்  As you sow, so you reap  
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை  Ass loaded with gold still eats thistles 
கத்தியின் முனையை விட பேனாவின் முனை வலிமை வாய்ந்தது  A pen is mightier than a  
இளங்கன்று பயமறியாது  A young calf knows no fear 
கல்வி கரையில் கற்பவர் நாள் சில  Art  is long and life is shot 
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே  April showers bring forth may flowers  
உருவத்தை கண்டு ஏமாறாதே  Appearance is deceitful   
ஏழை என்றால் மொழையும் பாயும்  A low hedge is easily leaped over 
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்  A friend in deed is a friend 
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு  A constant guest is never welcome 
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்  A cat may look at a king 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement