ஆம்புலன்ஸில் ஏன் ஆங்கில வார்த்தை தலைகீழாக எழுதிருக்கிறார்கள் அதற்கு காரணம் என்ன?

ambulance meaning in tamil

ஆம்புலன்ஸ் யார் கொண்டு வந்தது

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு முக்கியமான பதிலாக இந்த பதிவு இருக்கும். அப்படி என்ன பதிவு என்று யோசிப்பீர்கள். ஆம்புலன்ஸ் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதனை பார்த்தவுடன் பயந்துகூட சிலர் இருப்பார்கள் இன்னும் சிலர் அந்த வாகனத்தில் எழுத்திற்கும் வார்த்தையை பார்த்து யோசிப்பார்கள் எதற்காக ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை மட்டும் தலைகீழாக எழுத்திருக்கிறார்கள் என்று யோசிப்பார்கள் அப்படி யோசித்தவர்களுக்கு இதுவரை யோசிக்காமல் இருந்தவர்களுக்கும் இந்த பதிவு உதவியாகவும் பதிலாகவும் இருக்கும்.

ஆபத்தில் இருக்கும் உயிர்களை தக்க நேரத்தில் உயிரை காக்கும் நோக்கத்தில் முதலிடத்தை பிடித்துள்ளன. அதுபோலத்தான் இந்த ஆம்புலன்ஸில் உள்ள ஆங்கில (ECNALUBMA) வார்த்தையும் இருக்கிறது. வாங்க இப்போது ஏன் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை தலைகீழாக எழுதுகிறார்கள் என்று படித்து தெரிந்துகொள்வோம்.

ஆம்புலன்ஸ் யார் கொண்டு வந்தது:

ஆம்புலன்ஸ் சேவை முதன் முதலாக பிரிட்டனில் உள்ள “ஆங்கிலோ சாக்ஸன்” என்ற குழு கி.பி.900 -ம் ஆண்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1487-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டிலுள்ள “பெர்டினார்ட் இசபெல்லா” அவர்கள், ஸ்பெயின் இராணுவத்திற்காக போர்க்களத்தில் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தினர்.

பெரும்பாலும் மக்களின் பயன்பாட்டுக்காகத்தான் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்கக் காலகட்டத்தில் இருந்த ஆம்புலன்ஸ்கள் இராணுவத்திற்க்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

காரணம் என்ன என்று காண்போம்:

 power call siren meaning

ஆம்புலன்ஸில் உள்ளவர்களில் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு மிகவும் விரைவாக மருத்துவ உதவி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்புலன்ஸிற்கு  முன்னால் செல்லக்கூடிய வாகனத்திற்கு பின்னால் வருவது ஆம்புலன்ஸி என்பதை தெரிவிக்கும் நோக்கத்திற்காக Ambulance என்ற வார்த்தையை தலைகீழாக (ECNALUBMA) எழுதிருப்பார்கள். அப்படி எழுதினால் எப்படி தெரியும் அனைவரும் யோசிப்பீர்கள்? பொதுவாக நாம் எந்த வார்த்தையை கண்ணாடியில் பார்த்தாலும் அது தலைகீழாக தெரியும் அதனால் முன்னால் செல்லும் வாகனத்திற்கு பின்னால் வருவது ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை தலைகீழாக  எழுதி இருந்தால் அதனை பார்க்கும் போது சரியாக தெரியும் என்பதற்காக (ECNALUBMA) இந்த வார்த்தையை அப்படி பயன்படுத்தி எழுதுகிறார்கள்.

ஏன் சிவப்பு  நிறத்தில் எழுதப்பட்டுள்ளன:

ஆம்புலன்ஸ்  என்ற வார்த்தை சிறிய எழுத்துக்களாக இல்லாமல், சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்தாக பயன்படுத்துவதற்கு  ஒரு காரணம் உள்ளது.  தூரத்தில்  வரும்போது ஆம்புலன்ஸில்  உள்ள எழுத்துக்கள்  சிறியதாக  இருந்தால் எளிதில் அதை கண்டு பிடிக்க முடியாது என்பதற்காக  மிகப்பெரிய  எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அதிக வெளிச்சத்தில் வரும் போது  அதன் நிறம் மங்கி  தெரியக்கூடாது என்பதற்காக  சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன

 

பெரும்பாலும் இதுபோன்ற அனைத்து நடவடிக்கையும் ஆம்புலன்ஸ் சாலையில் வருகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும், ஆம்புலன்ஸ் முன்னேறி செல்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்  என்பதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகின்றன.

ஆம்புலன்சில் உள்ள சைரன் ஒலிகளை பற்றி பார்ப்போம்:

ஆம்புலன்ஸ் செல்லும் போது  ஒரு ஒலியை எழுப்பிக் கொண்டுதான் செல்கிறது. அந்த ஒலி  நமக்கு ஓன்று போலத்தான் கேட்கிறது. ஆனால் ஆம்புலன்ஸில் எழுப்பப்படும் ஒலிகளில் பல வகைகள் இருக்கின்றன. அது என்னவென்று  பார்ப்போம்.

ஆம்புலன்ஸில் மொத்தம் ஆறு வகையான ஒலிகள் எழுப்பப்படுகின்றன. அதனை பற்றி தெளிவாக இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

அலறல் (Yelp):

இது அதிகமான மற்றும் குறைந்த  ஒலிகளுக்கு இடையில் வேகமாக மாறி மாறி கேட்கும் ஒலியாகும். ஆம்புலன்ஸிற்கு முன்னால் உள்ள ஓட்டுனர்களின்   கவனத்தை விரைவாகப் பிடிப்பதற்கு வேகமாக ஒளிரும் அவசர விளக்குகளுடன் இந்த யெல்ப் (yelp) என்ற சைரன் ஒளிக்கப்படுகிறது. இது “புல் ஓவர்” என்று பொருள்படும். மேலும் குறுகிய கூச்சல்  மற்றும் நீண்ட அழுகையுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் பயன்படுகிறது. இது பெரும்பாலும் நகரங்களில் எளிதாக கேட்கிறது.

புலம்பல் Meaning in Tamil:

இது  ஆம்புலன்ஸில் கூச்சலை போலவே, அதிக அழுகை மற்றும் குறைவான குறிப்புகளுக்கு  இடையில் மாறி மாறி கேட்கிறது. இது அவசரமாக ஒளிரும்  வாகன விளக்குகளுடன் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக (Woo-WOO-Woo) என்ற கூச்சலை எழுப்புகின்றது. பெரும்பாலும் இந்த ஒலி கிராமப்புற  மற்றும் வெறுமையான சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஹாய் -லோ:

இந்த ஹாய்-லோ அலறல் மற்ற அலறல் சைரன்களிலிருந்து  மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. இந்த ஒலி ஒரு “வூ” ஒலியைக்  கொண்டிருக்கவில்லை, இதற்கு மாறாக “ee-oo-ee-oo” என்ற ஒலியை எழுப்புகிறது. இதை “ஐரோப்பிய பாணி ” சைரன் என்றும் அழைக்கப்படுகிறது.  ஹாய் -லோ  என்பது அடிக்கடி  கூச்சல் அல்லது அழுகை என்ற அர்த்தத்தில் ஒலிக்கப்படுகிறது.

Power Call Siren Meaning:

இது ஒரு விதமான சைரன் சத்தத்தை கொண்டுள்ளது. இதை சக்தி அழைப்பு என்று கூறப்படுகிறது. இந்த சைரன்  மேலே குறிப்பிட்டுள்ள மூன்றை விடவும் அறியதாகவே கேட்கிறது. இது ஒரு சலிப்பான “வூ-வூ-வூ-வூ-வூ” என்ற ஒலியை  எழுப்புகிறது. இந்த ஒலியை  அடிக்கடி பயன்படுத்துவதில்லை.

காற்று ஒலிப்பான்கள்:

காற்று ஒலிப்பான் என்பது ஒருவிதமான நீண்ட துளையிடும் ஒலியாகும். இது ஒலியில் விரைவாக எழுகிறது, பின்னர் மீண்டும் மெதுவாக கீழே இறங்கி அமைதியாகிறது. மற்ற சைரன்களை  போல இது அடிக்கடி பயன்படுத்துவதில்லை. இது ஒரு மின்னணு ஒலி அல்ல. இருப்பினும்  இது காற்றில் இயங்குகிறது. ஏனென்றால் சில காரணங்களால் எலக்ட்ரானிக்  சிஸ்டம் வேலை செய்யவில்லை என்றால், இந்த ஏர் ஹார்னை பயன்படுத்தமுடியும். எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Howler Meaning in Tamil:

ஹவ்லர் என்பதற்கு அலறுபவர் என்று பொருள். ஹவ்லர் ஒலி அழுகையை போலவே ஒலிக்கிறது. இது ஒரு தனித்துவமான ஒலியை கொண்டிருக்கும். இது ஒரு குறைந்த அதிர்வெண் ஒலியாகும். போலீஸ் கார்களுக்கு நேராக வாகனங்கள் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவசர நிலையில்  இருக்கும் போது டிராஃபிக்கை அகற்ற இந்த ஒலி  பயன்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil