மழலை பாடல்கள் | Baby Tamil Rhymes Lyrics in Tamil
சின்ன குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அது சின்ன குழந்தையாக இருந்தால் நல்லது. ஏனென்றால் அந்த குழந்தைகள் பேச ஆரம்பித்தால் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்லவே முடியாது. அதேபோல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதிலே இருக்காது. அந்த அளவிற்கு கேள்விகள் இருக்கும். அந்த குழந்தைகள் சின்னதாக இருக்கும் போது நிறைய பாடல்களை நாம் சொல்லிக் கொடுப்போம். அதனை அவர்களும் மனதில் பதித்து நமக்கு பாடிக் காட்டுவார்கள். அதேபோல் சிறிய வயதில் நிறைய பாடல்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம். ஆனால் நமக்கு தான் சிறிய குழந்தைகளுக்கு சொல்லித்தரும் வகையில் எந்த பாடல்களும் தெரிவதில்லை. உடனே நாம் அதற்கு போன் மூலம் பாடல்கள் படிப்பது வழக்கம். மேலும் அது பாடல் போல் தான் வரும். அதனை பார்க்க முடியாது இனி கவலையை விடுங்க. இந்த பதிவின் வாயிலாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்களை பார்க்கலாம் வாங்க..!
Baby Tamil Rhymes Lyrics in Tamil:
அ இதோ பார் அத்திப்பழம்
ஆ என்பவன் ஆசைப்பட்டான்
இ என்பவன் இதோ என்றான்
ஈ என்பவன் ஈ என்றான்
எனத் தொடங்கி,
ஔ என்பவன் கௌவிக் கொண்டான்
என முடியும் அப் பாடல்.
சின்ன குழந்தை பாடல்:
அம்மா, இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றிச் சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
மழலை பாடல்கள்:
மாமி சுட்ட பிட்டு
மடியில் வாங்கிக் கட்டு
சீனி சர்க்கரை இட்டு
சிறிது நெய்யும் சொட்டு
உண்டு ஏப்பம் விட்டு
ஓடி வா நீ பட்டு
நத்தை அம்மா பாடல் வரிகள்:
நத்தை யம்மா, நத்தை யம்மா,
எங்கே போகிறாய் ?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்
கொண்டு போகிறேன்.
எத்தனை நாள் ஆகும் அத்தை
வீடு செல்லவே ?
பத்தே நாள் தான் வேணுமானால்
பார்த்துக் கொண்டிரு
குழந்தை யானை பாடல்கள்:
யானை வருது. யானை வருது
பார்க்க வாருங்கோ.
அசைந்து, அசைந்து நடந்து வருது
பார்க்க வாருங்கோ.
கழுத்து மணியை ஆட்டி வருது
பார்க்க வாருங்கோ.
காதைக் காதை அசைத்து வருது
பார்க்க வாருங்கோ.
நெற்றிப் பட்டம் கட்டி வருது
பார்க்க வாருங்கோ.
நீண்ட தங்தத் தோடே வருது
பார்க்க வாருங்கோ.
தும்பிக் கையை வீசி வருது
பார்க்க வாருங்கோ.
தூக்கி ‘சலாம்’ போட்டு வருது
பார்க்க வாருங்கோ.
குழந்தை ஆப்பிள் பாடல்கள்:
தங்கம் போலப் பளப ளென்றே
ஆப்பிள் இருக்குது.
தங்கைப் பாப்பா கன்னம் போலே
ஆப்பிள் இருக்குது.
எங்கள் ஊருச் சங்தையிலே
ஆப்பிள் விற்குது.
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன
ஆசை இருக்குது.
Veedu Enge Tamil Rhymes:
வண்ணக் கிளியே, வீடெங்கே?
மரத்துப் பொந்தே என்வீடு.
தூக்கணங் குருவி, வீடெங்கே:
தொங்குது மரத்தில் என்வீடு.
கறுப்புக் காகமே, வீடெங்கே ?
கட்டுவேன் மரத்தில் என்வீடு.
பொல்லாப் பாம்பே, வீடெங்கே ?
புற்றும் புதருமே என்வீடு.
கடுகடு சிங்கமே, வீடெங்கே?
காட்டுக் குகையே என்வீடு.
நகரும் நத்தையே, வீடெங்கே?
நகருதே என்னுடன் என்வீடு !
குழந்தை பாடல் வரிகள்:
பசுவே, பசுவே, உன்னைநான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.
வாயால் புல்லைத் தின்கின்றாய்.
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.
சேர்த்து வைக்கும் பாலெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.
கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம்.
தென்னை மரம் பாடல்:
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.
மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.
புளியமரத்தில் ஏறலாம்,
புளியங்காயைப் பறிக்கலாம்.
நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக் காயைப் பறிக்கலாம்.
வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கி வழுக்கி விழுகலாம் !
அனைத்து பாடல்களும் PDF வேண்டுமென்றால் லிங்கை கிளிக் செய்யவும் 👉👉 | Baby Rhymes Tamil pdf |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |