பேங்க் ஸ்டேட்மென்ட் வேண்டி மேலாளருக்கு விண்ணப்பம் | Bank Statement Request Letter in Tamil

Bank Statement Request Letter in Tamil

Bank Statement Letter in Tamil 

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக வங்கிகளில் பணம் போடுவதற்கோ அல்லது பணம் எடுப்பதற்கோ செல்லான் (Chellan) ஃபில் பண்ணுவது இப்போது கட்டாயமாகிவிட்டது. படித்தவர்கள் ஈசியாக செல்லானில் உள்ள கேள்விகளுக்கு சரியாக நிரப்பிவிட்டு பணத்தை பெற்றுக்கொள்வார்கள். படிக்காதவர்களுக்கு இந்த முறையானது மிகவும் கஷ்டமாக இருக்கும். வங்கிகளில் செல்லான் நிரப்ப தெரிந்தவர்களிடம் இதை கொஞ்சம் ஃபில் பண்ணி கொடுங்க என்று கேட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். வங்கிகளில் செல்லானை நிரப்ப தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்த பதிவில் பேங்க் ஸ்டேட்மென்ட் வேண்டி (bank statement request letter in tamil) வங்கி மேலாளருக்கு எப்படி விண்ணப்பம் எழுதுவது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

முறையான கடிதம் எழுதுவது எப்படி?

 

Bank Statement Request Letter in Tamil

அனுப்புநர்

XXX
கதவு எண் / தெரு பெயர்
உங்கள் ஊர் பெயர்.

பெறுநர்

உயர்திரு வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
உங்கள் ஊர் பெயர்.

ஐயா,

பொருள்: பேங்க் ஸ்டேட்மெண்ட் வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம், நான் தங்கள் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்———-. நான் லோன் போட்டுள்ளேன் அதனால் எனக்கு இரண்டு வருடத்திற்கான பேங்க் ஸ்டேட்மெண்ட் தேவைப்படுகிறது. எனவே எனக்கு இரண்டு வருடத்திற்கான பேங்க் ஸ்டேட்மெண்ட் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி கணக்கு எண்:—–.

தங்களுடைய மொபைல் எண்:——.

இப்படிக்கு,
தங்களுடைய பெயர்

தொடர்புடைய கடிதங்கள்
காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி?
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil