இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!

Advertisement

பாத்ரூம் சுத்தம் செய்வது எப்படி? – Bathroom Toilet Cleaning in Tamil 

ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் பாத்ரூம் மற்றும் டாய்லெட் பொதுவாக விடாப்பிடியான கறைகள் இருக்கும். அதனை சுத்தம் செய்தலும் அவ்வளவு எளிதாக போகாது. அதிலும் பாத்ரூமில் உள்ள டாய்லெட் பேஷனில் கால் வைக்கும் இடத்தில் அதிகளவு கறைகள் இருக்கும். அந்த என்னதான் பர்சை வைத்து தேய்த்தாலும் மறையவே மறையாது. அதிலும் சில இடங்களில் பயன்படுத்தும் தண்ணீர் கூட உப்பு தனியாகத்தான் இருக்கும். அதன் காரணமாகவும் பாத்ரூமில் கற்றைகள் பாடிய ஆரம்பித்துவிடும். இந்த கறைகளை மிக எளிமையாக சுத்தம் செய்துவிட முடியும் அதற்கு சில பொருட்கள் மட்டும் இருந்தால் போதும் அது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. விம் சோப்பு – ஒன்று
  2. பிளாஸ்ட்டிக் – கப் ஒன்று
  3. சூடான நீர் – 1/2 டம்ளர்
  4. வினிகர் – 1/2 டம்ளர்
  5. பேக்கிங் சோடா – ஒரு ஸ்பூன்

👉👉- பாத்திரம் கழுவும் கம்பி நார் நீண்ட நாள் உழைக்க – இதை try பண்ணுங்க..

செய்முறை:

விம் சோப்பை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றை நன்றாக துருவி கொள்ளுங்கள்.

பின் பிளாஸ்ட்டிக் கப்பில் துருவிய சோப்பை சேர்க்க வேண்டும்.

அதன் பின் 1/2 டம்ளர் வினிகர் சேர்க்க வேண்டும். வினிகர் சேர்க்கும் பொழுது ஒருவிதமாக பொங்கி வரும்.

பின்பு 1/2 டம்ளர் சூடான நீரை சேர்க்க வேண்டும்.

பின் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும்.

இப்பொழுது அனைத்து பொருள்களையும் குச்சியால் அல்லது கரண்டியால் ஏத்தவது ஒன்றை பயன்படுத்தி நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

இந்த கலவையை உங்கள் வீட்டில் அதிக கறைகள் உள்ள இடத்தில் ஊற்றிவிட்டு லேசாக தேய்த்துவிடுங்கள்.

அதிலும் டாய்லெட் பேஷனில் உள்ள கரைகள்மீது ஊற்றி லேசாக பிரஷை பயன்படுத்தி தேய்த்துவிடுங்கள்.

பின்பு ஒருமணி நேரம் கழித்து பிரஷை பயன்படுத்தி நன்றாக டாய்லெட் பேஷனை தேய்த்து கழிவிட்டால் போதும், கறைகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement