BMI கால்குலேட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

BMI Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதே போல் இந்த பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன பயனுள்ள தகவல் என்றால் BMI கால்குலேட்டர் என்றால் என்ன அதனை பயன்படுத்தி உங்களின் உடல் எடையை எவ்வாறு கணக்கிடுவது போன்ற தகவல்கள் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து BMI கால்குலேட்டர் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

BMI கால்குலேட்டர் என்றால் என்ன..?

BMI Calculator in Tamil

ஒருவரது உடல் எடையையும் உயரத்தையும் கணக்கிடும் முறை தான் BMI என்றழைக்கப்படுகிறது. அதிக உடல் எடையை கண்டறிய இந்த BMI முறை தான் உலகளவில் பின்பற்றப்படுகிறது.

இந்த BMI குறியீடானது 1830 மற்றும் 1850-க்கு இடையில் “சமூக இயற்பியல்” வளர்ச்சியின் போது பெல்ஜிய கல்வியாளரான அடால்ப் குவெட்லெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது இது ஒரு நபரின் எடைக்கும், உயரத்திற்கும் இடையிலான விகித மதிப்பாகும். இந்த BMI குறித்த அட்டவணையின் படி, ஒருவருக்கு 18.5-க்கு கீழ BMI அளவு குறைவாக இருந்தால் அவரது உடல் எடை குறைவானது. அவர்கள் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்ய வேண்டும்.

கல்பாசியை உணவில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க

இதுவே ஒருவர் 18.5 லிருந்து 24.9 க்குள் BMI அளவு இருந்தால் அது இயல்பான ஆரோக்கியமான எடை ஆகும். தினமும் 30 நிமிடங்களாவது மிதமான பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை இதே போன்று கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அதே போல் ஒருவருக்கு BMI அளவு 30 முதல் 34-9 வரை இருப்பது உடல் எடை அதிகரித்திருப்பதை காண்பிக்கிறது. இந்த நிலையில் விழித்து கொண்டால் வேகமாக உடற்பயிற்சி உணவு இரண்டையும் பின்பற்றி உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம். எனினும் இது உடல் பருமனை காண்பிக்கிறது.

ஒருவருக்கு 35 முதல் 39.9 வரை BMI அளவு இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அதிக அளவு பருமனாகத்தான் இருக்கிறீர்கள். இதை அலட்சியப்படுத்தம்மால் வெகு விரைவில் உடல் எடை குறையுங்கள்.

மேலும் ஒருவருக்கு 40 க்கு மேல் BMI அளவு இருந்தால் நிச்சயம் அது மிக அதிகப்படியான உடல் எடை தான். அதனால் உங்களுக்கு பல வகையான நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் மிகவும் கடினமாக முயற்சித்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும்.

இந்த டிப்ஸ் மட்டும் போதும் 10 நாட்களில் உடல் எடை குறையும்

BMI கணக்கிடும் முறை:

இந்த BMI முறை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். அதாவது இந்த BMI முறையில் உடல் எடை உயரத்தின் வர்க்கத்தால் வகுக்கப்படும்.

BMI calculator endral enna in tamil

உதாரணத்துக்கு ஒருவருடைய உடல் எடை 50 கிலோவாக இருந்தால் அவரது உயரத்தையும் துல்லியமாக கணக்கிட வேண்டும். அவரது உயரமானது 160 சென்டி மீட்டர் இருக்கிறது. இப்போது அவரது BMI அளவை கண்டறிவோம்.

உயரத்தை சென்டி மீட்டரில் இருந்து மீட்டருக்கு மாற்றும் போது 160 சென்டி மீட்டர் ஆனது 100 ஆல் வகுக்கப்பட்டு 1.6 மீட்டர் என கிடைக்கும்.

எடை = 50 (1.60 X 1.60 )

இப்பொழுது அவரது BMI கணக்கீடு =50/2.56 =19 ஆகும்.

30 நாட்களில் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்போ வாழைப்பழத்துடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க போதும்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement