Broccoli in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் ப்ரோக்கோலியை பற்றிய தகவல்கள் தான். பொதுவாக நாம் அனைவருமே இந்த ப்ரோக்கோலியை பல வகையான உணவாக தயாரித்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
அப்படி உங்களுக்கு ப்ரோக்கோலி பற்றி இவை அனைத்தும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து இவை அனைத்தையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Broccoli Information in Tamil:
பொதுவாக இந்தியா முதல் மேலை நாட்டு சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான காய்கறிகளில் ஒன்றான இந்த ப்ரோக்கோலி Brassicaceae (or Cruciferae) குடும்பத்தைச் சார்ந்தது.
இந்த ப்ரோக்கோலியானது பிராசிகா ஒலரசியா இனத்தின் உட்பிரிவான கல்டிவர் இனத்தில் வகைப்படுத்தப்படுகிறது. ப்ரோக்கோலி என்ற இந்தப் பெயரானது முட்டைகோஸின் மேலேயுள்ள பூக்கும் பகுதியைக் குறிப்பிடும் இத்தாலியச் சொல்லான ப்ரோக்கோலோ Broccolo-வின் பன்மைச் சொல்லில் இருந்து பிறந்தது.
பொதுவாக ப்ரோக்கோலி நன்கு செழிப்பான மரத்தின் வடிவத்திலும், பச்சை நிறமாகவும் இருக்கும். பொதுவாக இது பார்ப்பதற்கு பெருந்திரளான மலரின் தலைப்பகுதிகள் ஏராளமான இலைகளால் சூழப்பட்டிருப்பது போல் இருக்கும்.
வெண்டைக்காயை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் ப்ரோக்கோலி பெரிதான 10 இருந்து 20 செமீ வரை நீளமுள்ள பச்சைத் தலைப்பகுதிகள் மற்றும் தடிமனான தண்டுகள் உடையது. இதில் மொத்தம் மூன்று வகைகள் இருக்கின்றன. ப்ரோக்கோலி, காலி பிளவருடன் மிகவும் நெருங்கிய அளவில் ஒத்திருக்கும்.
ஆனால் ப்ரோக்கோலி பச்சை நிறத்தில் இருக்கும். காலிபிளவர் வழக்கமான வெள்ளை வகையுடன் ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும்.
பிறப்பிடம்:
ப்ரோக்கோலி ஐரோப்பா கண்டத்தில் கட்டற்ற முட்டைக்கோஸ் தாவரத்திலிருந்து தோன்றியது என்று கூறப்படுகிறது. மேலும் இதனை 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தாலியர்கள் தங்களின் உணவுகளில் பயன்படுத்திருக்கிறார்கள் என்று சில சான்றுகள் கூறுகின்றது.
அதனால் இத்தாலிதான் இதன் தாயகம் என கூறப்படுகிறது. இங்கிருந்து சென்று குடியேறியோரால் ப்ரோக்கோலி அமெரிக்காவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவில் 1806 ஆம் ஆண்டிலேயே பச்சை ப்ரோக்கோலி என்று பெயரிடப்பட்டு இது ஒரு காய்கறியாக முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.
டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வேறுபெயர்கள்:
இது ப்ரோக்கோலி தமிழில் பச்சை பூக்கோசு என்றும், பிரிட்டனில் காலப்ரெஸ் என்றும், வட அமெரிக்காவில் ப்ரோக்கோலி என்றும், இது இத்தாலியில் காலப்ரியா என்றும் அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
சமைத்த ஒரு கப் ப்ரோக்கோலி பின்வரும் முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது:
- வைட்டமின் K – 100 மிகி
- வைட்டமின் சி – 101 மிகி
- வைட்டமின் ஏ – 120 மிகி
- ஃபோலேட் – 165 மிகி
- வைட்டமின் B6 மற்றும் மாங்கனீசு – 4 மிகி
- பொட்டாசியம் – 457 மிகி
- பாஸ்பரஸ் – 105 மிகி
- மெக்னீசியம் – 33 மிகி
- கால்சியம் – 62 மிகி
பயன்கள்:
புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
இதய ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுகிறது.
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைச் சீராக்கும்.
கொழுப்பைக் குறைக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்.
கண்களின் ஆரோக்கியத்தை காக்கும்.
கல்பாசியை உணவில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |