வெண்ணெய் பழம் பற்றிய தகவல் | Butter Fruit in Tamil

butter fruit in tamil

வெண்ணெய் பழம் பற்றிய தகவல்| Butter Fruit in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் புதுமையான மற்றும் சுவாரசியமான ஒரு தகவலைப் பற்றிதான் பார்க்க போகின்றோம். அது என்ன தகவல் என்றால் Butter fruit பற்றிய தகவல் தான். நம்மில் பலருக்கும் இந்த Butter fruit பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த Butter fruit என்பதன்  வேறுபெயர்கள், அதனின் பிறப்பிடம் போன்ற பல தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் => நாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

Butter fruit பற்றிய தகவல் :

avocado benefits in tamil

இது ஒரு பூக்கும் தாவரவகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும்.  இலவங்கம், கற்பூரம் மற்றும் புன்னைமரம் ஆகியவற்றுடன் இதுவும் பூக்கும் தாவரக் குடும்பமான லௌரசியேவினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்படுகிறது.

வேறுபெயர்கள் :

Butter fruit (வெண்ணெய் பழம்) என்பது ஆனைக்கொய்யா, பால்டா அல்லது அவகோடா, வெண்ணெய் பேரி அல்லது முதலை பேரி என்றும் அழைக்கப்படுகிறது.

பிறப்பிடம் :

இதன் பிறப்பிடங்கள் முறையே தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன் மற்றும்  மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த வெண்ணெய்ப் பழம் பயிரிடப்படுகிறது.

வரலாறு, வடிவம் மற்றும் வளர்ச்சி :

இந்த வெண்ணெய்ப் பழம் முட்டை அல்லது கோளவடிவததில் காணப்படுகிறது. வெண்ணெய்ப் பழங்கள் வணிக ரீதியில் மிகவும் மதிப்பு மிக்கவை. மேலும் அவை உலகம் முழுவதும் வெப்பமான காலநிலையில் பயிரிடப்படுகின்றன. இவை பச்சை நிற தோலினையுடைய ஒரு பழமாகும்.

இவற்றின் மரங்கள் தன்மகரந்தச் சேர்க்கையை கொண்டுள்ளன. மேலும் இவை பழத்தின் எண்ணிக்கையை நிலைநிறுத்த ஒட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்த தாவரம் கி.பி. 900 ஆம் ஆண்டுகளில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. பின்னர் இந்தத் தாவரம் 1750 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கும் , 1809 ஆம் ஆண்டில் பிரேசிலுக்கும், 1908 ஆம் ஆண்டில்  தென் ஆப்பிரிக்காவிற்கும் மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சத்துக்கள் மற்றும் பயன்கள்:

வெண்ணெய் பழம் மிகவும் சத்தான பழம் ஆகும். இந்த பழத்தில் 20 வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இந்த வெண்ணெய் பழமானது வாழைப்பழத்தை விட அதிக அளவிலான பொட்டாசியத்தை கொண்டுள்ளது.

வெண்ணெய் பழத்தில் இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய மோனோ சாச்சுரேட்டட் என்ற கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த வெண்ணெய் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு குறையும்.

வெண்ணெய் பழமானது சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆற்றல் மிக்கவை, இது கண்களைப் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள் => ஹாலா பழம் எப்படி இருக்கும் தெரியுமா…!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil