கார் ஓட்டும் போது எச்சரிக்கை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடுகள் என்ன சொல்கிறது..?

Car Indicator Symbols Meaning in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று பலருக்கும் பல கனவுகள் இருக்கும். அதுபோல கார் வைத்திருப்பவர்கள் காரை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். கார் ஓட்டும் போது நம்மை எச்சரிக்கை செய்வதற்காக Dashboard -ல் சில குறியீடுகள் இருக்கும். அந்த குறியீடுகள் என்ன சொல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அந்த குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் குறியீடுகள் சொல்லும் கதை என்ன..?

கார் எச்சரிக்கை குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன..? 

Brake Fluid Warning Light in Tamil:

Brake Fluid Warning Light

பிரேக் காரின் மிக முக்கியமான பாகம் என்று சொல்லலாம். கார் ஓட்டும் போது பிரேக்கில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் இந்த குறியீடு வெளிச்சத்தை ஏற்படுத்தும். அதனை அறிந்து உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். இதற்காகத் தான் இந்த குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.

Engine Warning Light in Tamil:

Engine Warning Light

இந்த குறியீட்டை எஞ்சின் எச்சரிக்கை விளக்கு என்று சொல்லலாம். இந்த குறியீடு ஒளி காட்ட தொடங்கினால் இயந்திர நிர்வாகத்தில் ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதாவது வாகனத்தில் சேதம் ஏற்பட்டால் இந்த குறியீடு வெளிச்சத்தை ஏற்படுத்தும்.

Airbag Warning Light in Tamil:

Airbag Warning Light

இதை ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு என்று கூறுகிறார்கள். இந்த குறியீடு வெளிச்சத்தை ஏற்படுத்தினால், விபத்து ஏற்படும் போது ஏர்பேக் பயன்படாது என்பதை கூறுகிறது என்று அர்த்தம். அதாவது, ஏர்பேக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!

Power Steering Warning Light in Tamil:

Power Steering Warning Light

இந்த குறியீட்டை பவர் ஸ்டீயரிங் எச்சரிக்கை விளக்கு என்று சொல்வார்கள். இந்த குறியீடு வெளிச்சத்தை ஏற்படுத்தினால் உங்கள் கார் பவர் ஸ்டீயரிங் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது பவர் ஸ்டீயரிங் கனமானதாக மாறுகிறது என்பதை குறிக்கிறது.

Diesel Particulate Filter Warning Light in Tamil:

Diesel Particulate Filter Warning Light

இதை டீசல் துகள் வடிகட்டி எச்சரிக்கை விளக்கு என்று சொல்லலாம். பெரும்பாலும் ( Diesel Particulate Filter ) இது அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் துகள் வடிகட்டியில் சேதம் ஏற்பட்டால் Dashboard -ல் இருக்கும் இந்த குறியீட்டில் ஒளி தோன்றும். இதை அறிந்து அதை நாம் சரி செய்ய வேண்டும்.

Coolant Warning Light in Tamil:

Coolant Warning Light

இந்த குறியீட்டை குளிரூட்டும் எச்சரிக்கை விளக்கு என்று சொல்லலாம். இந்த குறியீட்டில் ஒளி தோன்றினால், குளிரூட்டியின் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். அதாவது, வாகனத்தின் என்ஜின் அதிகமாக வெப்பமடைகிறது. அதனால் உங்கள் வாகனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறது.

Oil Warning Light in Tamil:

Oil Warning Light

இது எண்ணெய் எச்சரிக்கை விளக்கு என்று கூறப்படுகிறது. வாகனத்தில் எண்ணெய் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போதும் அல்லது எண்ணெய் அழுத்தம் குறைவாக இருக்கும் போதும் இந்த குறியீடு ஒளியை ஏற்படுத்தும். இந்த குறியீடு கடுமையான சேதத்தைத் தவிர்க்க வாகனத்தின் இயந்திரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறது.

டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..?

Battery Charge Warning Light in Tamil:

Battery Charge Warning Light

இதை பேட்டரி சார்ஜ் எச்சரிக்கை விளக்கு என்று சொல்லப்படுகிறது. கார் இயங்கி கொண்டிருக்கும் போது இந்த எச்சரிக்கை விளக்கு தோன்றும். ஆனால் என்ஜின் துவங்கிய சில நொடிகளில் இந்த விளக்கு அணையவில்லை என்றால், உங்கள் கார் மின் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

Seat Belt Reminder in Tamil:

Seat Belt Reminder

இது சீட் பெல்ட் நினைவூட்டல் குறியீடு ஆகும். இது வாகனங்களில் இருப்பவர்கள் சீட் பெல்ட் போடும் வரை இந்த குறியீட்டில் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். இந்த குறியீடு சீட் பெல்ட் போட வேண்டும் என்று எச்சரிக்கிறது.

Open Door Indicators in Tamil:

Open Door Indicators

இந்த குறியீட்டை திறந்த கதவு குறிகாட்டிகள் என்று சொல்லலாம். டிரைவர் கார் ஓட்டும் போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படாமல் இருந்தால் இந்த குறியீட்டில் ஒளி தோன்றும். நீங்கள் அனைத்து கதவுகளையும் சரியாக மூடினால் குறியீட்டில் ஏற்பட்ட ஒளி அணைந்து விடும்.

Hazard Warning Light in Tamil:

Hazard Warning Light

இதை அபாய எச்சரிக்கை விளக்கு என்று கூறலாம். வாகனத்தில் ஏதும் சிக்கல் இருந்தால் இந்த குறியீட்டில் ஒளி தோன்றும். இது கவனமாக வாகனத்தை கடக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது.

உங்கள் போன் Charger -ல் இது போன்ற Symbols இருக்கிறதா..? அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Powertrain Malfunction in Tamil:

Powertrain Malfunction

இந்த குறியீட்டை பவர்டிரெய்ன் செயலிழப்பு என்று கூறலாம். எஞ்சினில் ஏதும் சேதம் ஏற்படும் போது இந்த குறியீட்டில் ஒளி தோன்றுகிறது. இந்த குறியீட்டில் ஒளி ஏற்பட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்.

Low Fuel Notification in Tamil:

Low Fuel Notification

இதை குறைந்த எரிபொருள் அறிவிப்பு குறியீடு என்று சொல்லலாம். எரிபொருள் மிகவும் குறைவாக இருக்கும் போதும் மற்றும் எரிபொருள் நிரப்புதல் அவசியமாகும் போது இந்த குறியீட்டில் ஒளி தோன்றும். இது எரிபொருள் குறைவதை எச்சரிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளது.

Glow Plug Warning in Tamil:

Glow Plug Warning

இந்த குறியீட்டை ஒளிரும் பிளக் எச்சரிக்கை குறியீடு என்று கூறலாம். பெரும்பாலும் இந்த குறியீடு டீசல் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. Engine Management -ல் ஏதும் சேதம் ஏற்பட்டால் இந்த குறியீட்டில் ஒளி தோன்றும். இந்த குறியீட்டில் வெளிச்சம் மறையும் வரை வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கக் கூடாது.

சாலையில் கொடுக்கப்பட்டுள்ள அடையாள குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil