சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும் | CIBIL Score Meaning in Tamil

Advertisement

சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி..?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன அது எதற்கு தேவைப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். சிபில் ஸ்கோர் எங்கயோ கேள்விப்பட்ட வார்த்தை போல் உள்ளது என்று சிலர் இந்த பதிவை படிப்பீர்கள். இன்னும் சிலர் சிபில் ஸ்கோர் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள படிப்பீர்கள். நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு சிபில் ஸ்கோர் பற்றிய விவரத்தை தரும் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளவும்.

CIBIL Score Full Form:

 Credit Information Bureau (India) Limited 

நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

இந்த வார்த்தையை அதிகமாக எங்க கேட்டிருப்போம் என்றால்? நீங்கள் கிடிட்கார்டு வாங்க வேண்டும் என்று அப்ளை செய்யவே வங்கிக்கு சென்றால் அங்கு உங்களின் சிபில் ஸ்கோர் சரி பார்த்த பிறகு உங்களுக்கு அந்த கார்டை வழங்குவார்கள்.

இல்லையென்றால் வீட்டில் இருக்கும். அம்மா எதாவது குழு கடன் வணங்க சென்றால் அங்கு இந்த சிபில் ஸ்கோர் செக் செய்வார்கள். சிலர்க்கு அதிகமாக இருக்கும் சிலருக்கு குறைவாக இருக்கும். அதிகமாக இருந்தால் அவர்களுக்கு கடனை வழங்குவார்கள் இல்லயேற்றால் 6 மாதத்திற்கு பிறகு வழங்குவார்கள் ஏன் அப்படி என்று யோசித்திருப்பார்கள், வாங்க அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

  சிபில் ஸ்கோர் என்பது கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம் ஆகும். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் (சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன. .

இந்த சிபில் கணக்கில் உங்களுடைய சேமிப்பு கணக்கு எதுவும் கணக்கில் வாராது இதில் முழுமையாக நீங்கள் வாங்கிய கடன் கணக்குமட்டுமே வரும்.

சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?

ஒருவருக்கு கடன் பெறுவதற்காக வங்கிக்கு செல்வீர்கள் அப்போது உங்களுக்கு சிபில் ஸ்கோர் செக் செய்வார்கள். செக் செய்த பிறகு அவர்கள் 300 மிகவும் குறைவாக உள்ளது அதனை உங்களுக்கு கடன் வழங்க முடியாது என்று சொல்வார்கள். அப்போ சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும் என்றால் 300 மேல் அதிகம் இருந்தால் மட்டுமே கடன் வழங்குவார்கள். நல்ல சிபில் ஸ்கோர் என்றால் எவ்வளவு இருக்க வேண்டும். இந்த அளவு சிபில் ஸ்கோர் இருந்தால் நிச்சயம் கடன் வழங்குவார்கள் என்றால் அதிகபட்சகமாக 800, 900 இருந்தால் உங்கள் கணக்கு நன்றாக உள்ளது என்பார்கள் நிச்சயம் உங்களுக்கு லோன் அல்லது வேறு என்னவாக இருந்தாலும் கடன் வழங்குவார்கள்.

சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?

நீங்கள் இதுவரை எங்கும் கடனோ அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் இருந்தால் அதனை பெற்று சரியாக அதனை திரும்பி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயம் சிபில் ஸ்கோர் அதிகமாகும்.

அல்லது நீங்கள் முன்பு வாங்கியிருந்த கடன் செலுத்தாமல் இருந்தால் அதனை சரியாக செலுத்தினால் சிபில் ஸ்கோர் அதிகமாகும்.

வங்கியில் ஏதேனும் நகை கடன் பெற்றாலும் அதனை சரியான தேதியில் செலுத்த வேண்டும் அதனை செலுத்தாமல் இருந்தாலும் அதன் மூலம் சிபில் ஸ்கோர் குறையும் வாய்ப்புள்ளது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement