முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு | CM Cell Petition Model in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் முதலமைச்சருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இதனை ஆங்கிலத்தில் Chief Minister Special cell Tamilnadu என்று பெயர். இது மக்களின் கோரிக்கைகள் நேரடியாக முதலமைச்சரை சென்றடைவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இது முதலமைச்சரின் நேரடி பார்வையில் இருப்பதால் உங்களுடைய கோரிக்கை நியாயமானதாக இருப்பின் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனுவை cmcell.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
CM Cell Petition Online Apply in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் முதலமைச்சரின் தனிப்பிரிவு தமிழ்நாடு (Chief Minister Special cell Tamilnadu) என்று திரையில் தோன்றும். அவற்றில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் இருக்கும். அதில் தங்களுக்கு எது ஏற்றதோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் – ஸ்டேப்: 2
- பின் அவற்றில் தமிழை தேர்வு தேர்வு “முதலமைச்சரின் தனிப்பிரிவு” என்பதை click செய்யுங்கள் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்தால் “About Cm Cell” என்பதை Click செய்யுங்கள்.
முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு – Cm Cell Petition Online Apply in Tamil:
முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் – ஸ்டேப்: 3
- பின் அவற்றில் மேலே உள்ள “புதிய பயனாளர் பதிவு” (New User Registration) என்பதை Click செய்யுங்கள்.
CM Cell Petition Model in Tamil – ஸ்டேப்: 4
- பின் அவற்றில் தங்களது சரியான விவரங்களை உள்ளிடவும். தங்களது அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு “சேமி” (submit) என்று திரையில் தோன்றும். அதை click செய்ததும் உங்களுக்கான லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு திரையில் தோன்றும். தங்களது password-ஐ நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
முதலமைச்சர் புகார் மனு – ஸ்டேப்: 5
- பிறகு அந்த படிவத்தின் மேலே இருக்கும் உள் நுழைக (Login) என்பதை Click செய்யவும். பிறகு தங்களது லாக் இன் ஐடி மற்றும் Password உள்ளிடவும். பாதுகாப்பான குறியிடு (Secure Code) என்ற இடத்தில் அருகில் இருக்கும் எண்களை உள்ளிடவும். இதன் பிறகு கீழே இருக்கும் உள் நுழைக (login) என்பதை click செய்யவும்.
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி |
விண்ணப்பம் முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு – ஸ்டேப்: 6
பின் கோரிக்கை வகை என்ற option-ஐ click செய்தால் ஒரு பட்டியல் தோன்றும். அவற்றில் தாங்கள் எந்த கோரிக்கையை அளிக்க விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- முதலமைச்சர் புகார் மனு: மேலே குறிப்பிட்டுள்ள தொடர்பு முகவரியும் பாதிக்கப்பட்ட முகவரியும் ஒன்றா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும் (ஆம்/இல்லை) என இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில் உங்களுக்காக புகார் அளித்தால் அதில் ஆம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்பதை செலக்ட் செய்தால் நீங்கள் வேறு ஒருவருக்காக புகார் அளிக்கலாம். வேறு ஒருவருக்காக புகார் அளித்தால் அதில் அவர்களது விவரங்களை உள்ளிடவும்.
- பின் கோரிக்கை (Grievance) என்ற பகுதியில் தங்களது கோரிக்கைகள் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் இருக்கலாம். உங்கள் புகார் 4,000 வார்த்தைகளுக்கு அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் %,&,$,@ போன்ற சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்த கூடாது.
- Cm Manu Format in Tamil: புகாரை தமிழில் பதிவு செய்ய`Unicode Font’-ல் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்பதும் அவசியம். உங்களது புகாரை உள்ளிட்டவுடன் சமர்ப்பி (Submit) என்ற option-ஐ click செய்தவுடன் உங்கள் புகார் சமர்ப்பிக்கபட்டுவிடும் மற்றும் உங்களுக்கான கோரிக்கை எண் கொடுக்கப்படும் அதனை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
- தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு கோரிக்கை எண் பயன்படும்.
முதலமைச்சர் மனு – CM Cell Petition Model in Tamil – ஸ்டேப்: 7
- கோரிக்கை நிலையை பார்ப்பதற்கு கோரிக்கை நிலவரம் (Track Greviance) என்பதை click செய்து தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள கோரிக்கை எண் மற்றும் பாதுகாப்பான குறியீடை உள்ளிட்டால் தெரிந்து கொள்ளலாம்.
- இணையத்தளத்தில் புகார் அளிக்க இயலாதவர்கள் 044-25671764 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது 044-25676929 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் மூலமாகவோ உங்களது புகாரை அளிக்கலாம். சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு காணப்படும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |