வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி..! EC Certificate Download Tamilnadu..!
EC certificate download online / வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி: பொதுநலம். காம் பதிவில் ஆன்லைன் வழியாக நாம் எப்படி EC Certificate அதாவது வில்லங்க சான்று ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வில்லங்க சான்றை வீட்டில் இருந்தபடியே சுலபமாக டவுன்லோடு செய்யலாம். சரி வாங்க இப்போது விரிவாக வில்லங்க சான்றை எப்படி டவுன்லோடு செய்வதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
ஆன்லைனில் வில்லங்க சான்று (tamilnadu ec download) பெறுவது எப்படி:
Step 1:
முதலில் வில்லங்க சான்றை பெற tnreginet.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அவற்றில் கீழே இருக்கும் மின்னணு சேவைகள் என்பதை கிளிக் செய்யவும்.
Step 2:
அடுத்து மின்னணு சேவையை க்ளிக் செய்த பிறகு வில்லங்க சான்று என்ற ஆப்ஷன் வரும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
Step 3:
இப்போது வில்லங்க சான்று, ஆவணம் வாரியாக என்று இரண்டு ஆப்ஷன்ஸ் இருக்கும்.
Step 4:
இவற்றில் ஆவணம் வாரியாக என்பதை நீங்கள் க்ளிக் செய்தால் பத்திரத்தின் நம்பர் மற்றும் வருடத்தை வைத்து வில்லங்க சான்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அடுத்து வில்லங்க சான்றை க்ளிக் செய்தால் நீங்கள் வசிக்கும் மண்டலம், மாவட்டம் அனைத்தும் தெரிந்திருத்தல் அவசியம். குறிப்பாக அவற்றில் குறிப்பிட சார்பதிவாளர் அலுவலகம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆவணம் வாரியத்தில் இவற்றையெல்லாம் குறிப்பிட தேவையில்லை. பத்திரத்தின் பின் பகுதியில் முகவரி, ஆண்டு, ஆவண எண் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அவற்றை கொடுத்து கேப்ச்சாவில் சரியானவற்றை என்டர் செய்து தேடுக என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இப்பொது சான்றிதழ் டவுன்லோடு ஆகிவிடும்.
Step 5:
தேடுக என்பதை கொடுத்த பிறகு வில்லங்க சான்று உருவாக்க என்று வரும். அவற்றை க்ளிக் செய்யவும்.
Step 6:
இப்போது வில்லங்க சான்றிதழ் டவுன்லோடு ஆகிவிடும்.
வில்லங்க சான்று பெற ஆப்ஷன் 2:
வில்லங்க சான்று டவுன்லோடு செய்ய அனைத்து விவரங்களும் தெரிந்தவர்கள் நேரடியாகவே மண்டலம், மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், கிராமம், ஆரம்ப நாள் கொடுக்கும் போது பதிவு செய்த நாளில் இருந்து 1 அல்லது 2 வருடம் வரை உள்ள தேதியை குறிப்பிடலாம்.
அடுத்து முடிவு நாள் கொடுக்கும் போது அன்றைய தேதியை குறிப்பிடாமல் 2 அல்லது 3 நாட்கள் கணக்கை வைத்து கொடுக்க வேண்டும்.
அடுத்து உங்களுடைய பத்திரத்தில் சர்வே எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த எண்ணை கொடுத்து சேர்க்க என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து கேப்ச்சாவில் சரியானவற்றை கொடுத்து தேடுக என்பதை கொடுக்க வேண்டும். இப்போது வில்லங்க சான்று டவுன்லோடு ஆகிவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |