மீன் கனவில் வந்தால் என்ன பலன் | Fish Kanavu Palangal in Tamil

Fish Dream Meaning in Tamil

மீன்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Meen Kanavil Vanthal Palan

Fish Dream Meaning in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! நாம் காணும் கனவிற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. கனவானது அனைவருக்கும் ஒரே மாதிரியாக வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் பல வகையான கனவுகள் வருவது இயல்பான ஒன்று. சிலருக்கு இறப்பு பற்றிய கனவு, சிலருக்கு நீர் பற்றிய கனவு, இயற்கை சம்பந்தமான கனவுகள் போன்ற பல கனவுகள் வருவது வழக்கம். அந்த வகையில் உங்களுடைய கனவில் மீன்கள் வந்தால் என்ன பலன் என்று இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..!

மீன் கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் மீனை கண்டால் பகைவருடைய பலம் குறையும். கனவில் மீன் சிக்குவது போல வந்தால் அதிகமாக பொருள் சேரும் என்பது அர்த்தமாகும்.

கனவில் மீன் வாங்குவது போல் கண்டால் என்ன பலன்:

கனவில் மீன் மீனை பிடிப்பது போலவோ, மீன் வலையில் மாட்டிக்கொள்வது போலவோ, அல்லது மீன் வாங்குவது போல் கனவில் வந்தால் அதிகமாக பணவரவு வரும்.

கனவில் மீன் நீந்துவது போல் கண்டால் என்ன பலன்:

உங்களுடைய ஆழ்ந்த கனவில் மீன் நீந்துவது போல கண்டால் நீங்கள் மனதில் நினைத்த காரியங்களில் காரிய சித்தி உண்டாகும் என்று இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

ஊர்வன கனவில் வந்தால் என்ன பலன்..!

சுத்தமான நீரில் மீன் நீச்சல் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் மீன் சுத்தமான நீரில் நீச்சல் செய்வது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் பெறவிருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நல்ல ஆச்சரியங்களையும் குறிக்கும்.

சேற்றில் மீன் இருப்பது போல் கண்டால் என்ன பலன்:

கனவில் மீன் சேற்று நீரில் இருப்பது போல் கண்டால் எதிலோ ஏமாற்றம் அடையப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

மீன்கள் கூட்டமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் மீன்கள் கூட்டமாக செல்வது போன்றோ அல்லது கூட்டத்துடன் மீன் இருப்பது போல் கனவில் வந்தால் உங்களை தேடி நல்ல தகவல் வரப்போகிறது என்று அர்த்தம்.

கனவில் பெரிய மீனை பிடிப்பது போல் கண்டால் என்ன பலன்:

பெரிய மீனை பிடிப்பது போல் கனவு கண்டால் அதிகமாக பொருள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மனதில் நினைத்த காரியத்தில்தோல்வி இல்லாமல் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil