பிரிட்ஜில் வைக்க வேண்டிய பொருட்கள்
அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்றைய பதிவு என்னவென்று பார்த்தீர்கள் என்றால் பிரிட்ஜில் வைக்கவேண்டிய பொருட்கள் என்ன வைக்ககூடாத பொருட்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு. இப்போது அதிகளவு வீடுகளில் அடுப்பு இல்லாமல் கூட இருக்கும் பிரிட்ஜி இல்லாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அனைவரின் வீட்டில் பிரிட்ஜி என்னவோ நல்லது தான் அதுவே அவர்களுக்கு தீமையாக ஆகிவிட்டால் அது நல்லது அல்ல வாங்க இப்போது எந்த பொருட்களை பிரிட்ஜி வைக்கவேண்டும், வைக்க கூடாது என்று தெரிந்துகொள்வோம்.
பிரிட்ஜில் என்னென்ன வைக்கலாம்:
அனைவரும் செய்யும் தவறு என்ன தெரியுமா நாம் என்ன காய்கறிகள் பழங்கள் வாங்கிவந்தாலும் அதனை உடனே பிரிட்ஜியில் வைப்பது நம்முடைய பழக்கமாக மாறிவிட்டது அதேபோல் நாம் சமைத்த எந்த உணவாக இருந்தாலும் அதனை உடனே எடுத்து வைப்பது பழக்கமாக மாறிவிட்டது.
இப்படி செய்வதால் நல்ல பொருட்களும் கேட்டு போகும். கெட்ட பொருட்களை நல்ல பொருட்கள் என்று நினைத்து சாப்பிடுவோம்.
ஆரஞ்சு பழம் எலுமிச்சை பழம்போன்ற சிட்ரஸ் பழங்கள் பிரிட்ஜியில் வைக்க கூடாது காரணம் இந்த பழமானது சாதாரண வெப்பநிலையை இந்த பழங்களை பழுக்க செய்கிறது. அதனை பிரிட்ஜியில் வைத்தால் ககூடிய விரைவில் பழுக்க செய்யும். அதில் உள்ள குளிர்ச்சியான சூழல் பழத்தில் உள்ள அமில தன்மையை பாதித்து சுவையை மாற்றிவிடும்.
சூடான பொருட்களை சூடு தன்மை இருக்கும்பட்சத்தில் அதனை உடனே அதில் வைக்கக்கூடாது. அதே போல் இயற்கையில் கெட்டுபோதாக பொருட்களை வைக்க கூடாது உதாரணத்திற்கு தேன், காபிக்கொட்டை, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை வைக்கவே கூடாது. இது அனைத்தும் காற்று புகாத பாட்டிலில் போட்டுவைத்தால் போதுமானது.
முக்கியமான இதை அனைவரின் வீட்டிலும் செய்து இருப்பீர்கள். சமைக்காத பச்சை இறைச்சியை வாங்கி பிரிட்ஜியில் வைக்கவே கூடாது முடிந்தளவு அதனை வாங்கிய உடன் சமைப்பது நல்லது. இதை பிரிட்ஜியில் வைப்பதால் மற்ற பொருட்களையும் கெட்டுபோகவைக்கும். அதே போல் இதனை வாங்கி வைத்து நீண்ட நாட்களுக்கு பிறகு சாப்பிடால் உங்களின் உடலுக்கும் கேடு. வைத்து தான் ஆகவேண்டும் என்றால் அதனை காய்கறியில் பக்கத்தில் வைக்கவேண்டாம். பாலீத்தின் கவரின் போட்டு பிரீஸரில் வைக்கவும்.
இப்போது அதிகமாக வீட்டிலேயே துரித உணவுகளை செய்துவருகிறார்கள் அதற்கு முக்கிய தேவையாக உள்ளது சாஸ் தான் அதில் நிறைய விதமான சாஸ் வகைகள் உள்ளது. இதனை பிரிட்ஜியில் வைக்கவேண்டாம்.
முட்டையை பிரிட்ஜியில் வேண்டாம் ஏனென்றால் முட்டையின் மேல் பாக்டிரியாக்கள் இருக்கும். இதனை பிரிட்ஜியில் வைத்தால் பாக்டிரியாக்கள் வாழ்வதற்கு வழிவகுக்கிறோம்.
தக்காளியை பிரிட்ஜியில் வைக்கவேண்டாம் காரணம் தக்காளியை காற்றோட்டமான சுழலில் வைப்பதால் தக்காளி கெடாமல் சில நாட்கள் வரை இருக்கும் அதே பிரிட்ஜியில் வைத்தோம் என்றால் அது பலுக்கவும் செய்யாமல் வீணாக ஆகிவிடும்.
வாழை பழத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது அதில் வரும் குளிந்த காற்று வாழைப்பழத்தை அழுகச்செய்வதோடு மாற்றமில்லாமல் சீக்கிரம் வீணாக செய்துவிடும்.
அடிக்கடி பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் ⇒ அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
வெங்காயம் பூண்டு, உருளைக்கிழங்கு போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது இது அனைத்தும் கற்றோரமாக வெளியில் இருந்தால் நன்றாக இருக்கும். மீறி வைத்தால் விரைவாக கெட்டுவிடும் கெட்ட நாற்றம் அடிக்கும் அனைத்தும் பொருட்களிலும்.
அதே போல் சமைத்த பொருட்களை பிரிட்ஜியில் வைத்து அதனை மீண்டும் எடுத்து சூடு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் கேடு தரும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |