அடிப்படை கடமைகள் யாவை? | Adipadai Kadamaigal in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய பொழுது அதில் குடிமக்களுக்கென அடிப்படை கடமைகள் எதுவும் உருவாக்க தேவையில்லை என்று முதலில் நினைத்தனர். பின்பு மக்களின் நலன் கருதியும் நாட்டின் நலன் கருதியும் உருவாக்கபட்டது தான் இந்த அடிப்படை கடமைகள். இந்திய மக்கள் எவற்றையெல்லாம் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் அடிப்படை கடமைகள். நாம் இந்த தொகுப்பில் எவையெல்லாம் அடிப்படை கடமைகள் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தகவல் அறியும் உரிமை சட்டம் |
Fundamental Duties in Tamil:
இது பகுதி 4-அ என்ற (Part 4-A) பிரிவில், விதி 51-அ (Article 51-A) என்பதன் மூலம் இந்த கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது. 1975 மற்றும் 1977 ஆகிய வருடங்களில் ஸ்வரன் சிங் குழுவின் தலைமையில் 1976-ம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
முதலில் 10 கடமைகள் தான் இருந்தது, பின்பு 2002-ம் ஆண்டு 86-வது சட்ட திருத்தத்தின் வாயிலாக கடமை ஒன்றை சேர்த்து இப்பொழுது 11 அடிப்படை கடமைகள் உள்ளது.
11 Fundamental Duties in Tamil – அடிப்படை கடமைகள் 11:
- அரசியலமைப்புக்கு கீழ்ப்படிந்து நடத்தல் மற்றும் நம்முடைய தேசியக்கொடி, தேசிய கீதத்தை மதித்து நடத்தல்.
- நம்முடைய சுதந்திரத்திற்கு காரணமாக இருந்த விடுதலை போராட்ட வீரர்களை நினைவில் வைத்து போற்றுதல்.
- இந்தியாவின் இறையாண்மையான ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.
- அனைத்து குடிமக்களும் நாட்டை பாதுகாப்பது, தேவைப்படும் போது நாட்டு நலப்பணிகளையும் செய்வது.
- சாதி, மதம், எல்லை, இனம் போன்றவற்றால் வேறுபடாமல் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
- பல்வேறு சிறப்புகளை உடைய நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும்.
- ஏரிகள், நிலங்கள், காடுகள், விலங்குகள் போன்ற நம்முடைய இயற்கை வளங்களை சீரழிக்காமல் பேணி பாதுகாத்தல் வேண்டும்.
- அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், புலனறிவு போன்றவற்றை மேம்படுத்த வேண்டும்.
- பேருந்து, நினைவிடங்கள் போன்றவற்றை சேதப்படுத்தாமல் அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், வன்முறையில் ஈடுபட கூடாது.
- நம் நாடு பல முயற்சியில் முன்னேற்றத்தை காணவும், சாதனைகள் படைக்கவும் பாடுபட வேண்டும்.
- 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
முக்கியத்துவம்:
- குடிமக்களின் கடமை: இந்த கடமைகள் இயற்றப்பட்டதற்கான முக்கிய காரணமே மக்கள் உரிமைகளை பயன்படுத்தும் அதே வேளையில் அதை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காக.
- சமூக நடவடிக்கைகளுக்கு எதிராக மற்றும் சட்டத்தை மீறி நடக்க கூடாது என்பதற்காகவும் இவை பின்பற்றப்படுகிறது. அடிப்படை கடமைகள் என்பவை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை.
- நம்முடைய அடிப்படைக் கடமைகள் பற்றித் தெரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்படுவோம்.
இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |