நகைச்சுவை விடுகதைகள் | Funny Riddles in Tamil With Answers

Funny Riddles in Tamil 

தமிழ் நகைச்சுவை விடுகதைகள் With Answer | Funny Riddles in Tamil 

நகைச்சுவை விடுகதைகள்: விடுகதைகள் கேட்டு விளையாடுவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடும் விளையாட்டுகளில் விடுகதைகள் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இவை விளையாடுவதற்கு மட்டும் பயன்படுவது இன்றி குழந்தைகளின் யோசிக்கும் திறனை வளர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. இப்படி பல நன்மைகளை தரும் விடுகதைகளில் சிலவற்றை நகைச்சுவை விடுகதைகளாக படித்து அறியலாம் வாங்க.

Vidukathaigal in Tamil With Answer:

  1. கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு இருந்த கொசு திடிர்னு செத்து போச்சி, ஏன்?

விடை: இந்தியா டீம் All Out ஆயிடுச்சா

2. ஒரு யானை வேகமா ரேஷன் கடைக்கு ஓடுது, யானை ரேஷன் கடையில என்ன வாங்கும்?

விடை: மூச்சி வாங்கும்

3. எலிக்கு ஏன் வால் இருக்கு?

விடை: செத்து போச்சுனா தூக்கி போட தான் எலிக்கு வால் இருக்கு

4. எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது?

விடை: ஐயர் ஆத்துல

5. எந்த எழுத்தை எழுத முடியாது?

விடை: தலை எழுத்து

Tamil Funny Vidukathaigal – நகைச்சுவை விடுகதைகள் விடைகள்:

6. எந்த கடிகாரம் கரெக்ட்- ஆ டைம் காட்டும்

விடை: எந்த கடிகாரமும் காட்டாது நாம தான் பாக்கணும்

7. கடற்கரையில வீடு கட்டுனா என்ன ஆகும்?

விடை: பணம் செலவாகும்

8. கதவ மூடிட்டு தான் மருந்து குடிக்கணுமாம் ஏன்?

விடை: டாக்டர் மருந்து அறை (ரை) மூடி குடிக்கணும்னு சொன்னாராம்.

9. மேலே மேலே செல்லும் ஆனால் கிழே வரவே வராது அது என்ன?

விடை: வயது

10. எந்த காட்டுலையும் கிடைக்காத பூச்சி எந்த பூச்சி?

விடை: கண்ணாம்பூச்சி

Funny Vidukathai in Tamil With Answer – Answers நகைச்சுவை விடுகதைகள்

11. டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தானாம் ஏன்?

விடை: ஏன்னா, அது தடுப்பூசியாம்

12. ஒருத்தர் 15 மணி நேரம் நாற்காலி (Chair) -ல உட்காந்து இருந்தாராம் ஏன்?

விடை: அவர் Chair Man

Funny Riddles in Tamil – தமிழ் நகைச்சுவை விடுகதைகள்:

13. இந்த உலகத்தில் இரண்டு பேர் மட்டும்தான் நல்லவங்கலாம் அது யார்?

விடை: ஒருத்த செத்து போய்ட்டான், இன்னொருத்தர் இன்னும் பொறக்கலயாம்.

14. ஒருத்தன் தேர்வறைக்கு (Exam Hall) போய்ட்டு திரும்பி வந்துட்டானாம் ஏன்?

விடை: ஏன்னா அது Return Exam – ஆ

Tamil Funny Questions and Answers – நகைச்சுவை விடுகதைகள் விடைகள்:

15. பண்ணுல (Bun) தண்ணீர் ஊத்தினா என்ன ஆகும்?

விடை: பன்னீர் ஆகும்

16. எல்லா பெட்டியிலும் துணி வைக்கலாம் ஒரு பெட்டியில் மட்டும் துணி வைக்க முடியாது ஏன்?

விடை: தீப்பெட்டி

Funny Riddles in Tamil – நகைச்சுவை விடுகதைகள் With Answer

17. மரியாதை தெரியாத பூ எது?

விடை: வாடா மல்லி

18. ஒரு தாடிய மட்டும் சேவ் (Shave) பண்ணவே முடியாது ஏன்?

விடை: காத்தாடி

நகைச்சுவை விடுகதைகள் – Funny Riddles in Tamil:

19. ஒரு விமானம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் விபத்துக்கு உள்ளானது. விபத்தில் தப்பியவர்களை எந்த நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும்.

விடை: உயிர் தப்பியவர்களை அடக்கம் செய்ய மாட்டார்கள், உயிரிழந்தவர்களையே அடக்கம் செய்வார்கள்.

20. ஒரு ஆப்பிள் மரக்கிளையில் 12 ஆப்பிள்கள் இருந்தன, அவ்வழியே 12 பேர் நடந்து செல்கின்றனர். அவர்களில் தலா ஒரு பழம் பறிக்க 11 ஆப்பிள்கள் மீதம் இருந்தன எப்படி?

விடை: தலா என்பது ஒருவரின் பெயராகும், மீதம் இருந்த 11 பேர் பழம் பறிக்கவில்லை.

21. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழமாட்டான் அவன் யார்?

விடை: பந்து

22. தண்ணீரிலே நீந்தி வருவான், தரையிலே நீந்தி வருவான் அவன் யார்?

விடை: தவளை

23. குண்டு முழி ராஜாவுக்கு குடல் எல்லாம் பற்கள் அது என்ன?

விடை: மாதுளை

மேலும் படிக்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
விடுகதைகள் | Vidukathaigal
பாட்டி விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil