Gas Stove vs Induction Stove Which is Better
இன்றைய காலத்தில் கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை. சமையலை ஈசியாக முடிப்பதற்கும், கஷ்டப்படாமல் சமைப்பதற்கும் உகந்ததாக கருதப்படுகிறது. இன்னும் சிலர் வீட்டில் கரண்ட் அடுப்பும் இருக்கிறது. இதையும் சமைப்பதற்கு ஈசியாக இருக்கிறது என்று கருதுகின்றனர். அதனால் இந்த பதிவில் கேஸ் அடுப்பு மற்றும் கரண்ட் அடுப்பு இவற்றில் எது சமைப்பதற்கு உகந்தது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
கேஸ் அடுப்பு பயன்படுத்துவதன் நன்மைகள்:
கேஸ் அடுப்பு சமைப்பதற்கு உகந்ததாக இருக்கிறது. மேலும் எந்த பாத்திரத்தை வைத்து வேண்டுமானாலும் சமைக்கலாம்.
அடுப்பை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைத்து கொள்ளும் வசதி உள்ளது.
கேஸ் அடுப்பில் சமைத்து முடித்ததும் வெப்பம் பரவி விடும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இண்டக்ஷன் அடுப்பு வெப்பத்தை சுற்றி வெளியாகும். ஆனால் கேஸ் அடுப்புகள் அடுப்பைச் சுற்றியுள்ள காற்றில் நுழையும் வெப்பத்தை வீணாக்காது. இதனால், குறைந்த வெப்பத்தை வெளியிடுகிறது.
கேஸ் சிலிண்டர்ல இனி இந்த நம்பரை செக் பண்ணாமல் சிலிண்டர் வாங்கிடாதீங்க..!
கேஸ் அடுப்பு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகம்:
கேஸ் அடுப்பில் இருக்கும் பர்னர் மீது சமைக்கும் உணவுகள் தெளிப்பதால் சுத்தம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் கேஸ் சிலிண்டர் புதிதாக மற்ற வேண்டியிருக்கும். அப்போது கேஸ் சிலிண்டர் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வாயு வெளியாகி ஆபத்தை ஏற்படுத்தும்.
கேஸ் அடுப்பில் சமைக்கும் போது பேன்( FAN) போட முடியாது. மேலும் இவை அதிகமாக கார்பன்டை ஆக்ஸைடை உற்பத்தி செய்கிறது.
இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவதால் நன்மைகள்:
இண்டக்ஷன் அடுப்பு நேரடியாக காந்தப்புலத்தின் மூலம் சமையல் பாத்திரத்திற்கு ஆற்றல் வழங்குகிறது. இதனால் வெப்பம் வீணாகாது.
இண்டக்ஷன் இருந்து வெப்பம் சமையல் பாத்திரத்திற்கு மாற்றப்படுவதால் குளிர்ச்சியாக இருக்கும்.
எரிவாயு கசிவு ஏற்படும் கேஸ் அடுப்பைப் போலல்லாமல், பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது வெப்பத்தை உற்பத்தி செய்யாது மற்றும் எரிவாயு அடுப்புகளுடன் ஒப்பிடும்போது குறைவான ஆரோக்கிய அபாயங்களைக் கொண்டுள்ளது.
இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவதால் பாதகம்:
இண்டக்ஷன் அடுப்பில் அதற்கேற்ற சமையல் பாத்திரங்களை மட்டும் தான் வைக்க முடியும்.
இந்த அடுப்பில் மின்சாரம் இருந்தால் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
நீங்கள் எரிவாயு அடுப்பு அல்லது தூண்டல் அடுப்பைப் பயன்படுத்தினாலும், இரண்டிலும் சில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.
உடலுக்கு கேடு தரும் சமையல் பாத்திரங்கள் என்ன தெரியுமா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |