Generic Medicine பற்றி பலரும் அறியாத தகவல்கள்..!

Advertisement

Generic Medicine Meaning in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் Generic Medicine பற்றிய சில பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய நிலையில் 70 சதவிகித மக்கள் தங்கள் வருமானத்தை மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்கின்றனர். எந்த அளவிற்கு காலம் முன்னேறுகிறதோ அதே அளவுக்கு மருந்து மாத்திரைகளின் விலையும் ஏறுகிறது.

அப்படி மருந்து மாத்திரைகளின் விலையை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மருந்து தான் ஜெனரிக் மருந்துகள் ( Generic Medicine ). இன்றைய நிலையில் பல மக்களுக்கு ஜெனரிக் மருந்து பற்றி தெரியவில்லை. அது என்ன மருந்து..? அந்த ஜெனரிக் மருந்து எங்கு கிடைக்கும் என்று பல கேள்விகள் நம் அனைவரிடமும் இருக்கிறது. அதுபோல Generic Medicine பற்றி உங்களுக்கு தெரியுமா..? Generic Medicine பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன தெரியுமா..?

ஜெனரிக் மருந்து என்றால் என்ன..? 

ஜெனரிக் மருந்து என்றால் என்ன

ஒரு மருந்தை அதன் மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ஜெனரிக்” என்று சொல்லப்படுகிறது. நாம் கடைகளில் வாங்கும் மருந்துகளை விட இந்த ஜெனரிக் மருந்துகள் விலை குறைவாக கிடைக்கின்றன.

 ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனம் ஒரு மருந்தை முதன் முதலில் கண்டுபிடித்தால், அந்த நிறுவனம் மட்டுமே 20 ஆண்டுகள் வரை அந்த மருந்தை விற்பனை செய்ய வேண்டும்.  

இப்படி 20 ஆண்டுகள் வரை ஒரு நிறுவனம் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்யும் முறையை தான் நாம் “காப்புரிமைக் காலம்” என்று சொல்கிறோம்.

இதுபோல   20 ஆண்டுகளுக்கு பிறகு காப்புரிமை காலம் முடிந்தவுடன் அந்த மருந்துகள் பொதுவான மருந்துகளாக மாறிவிடும். அதன்  பிறகு அந்த மருந்துகளை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து விற்பனை செய்யலாம். அதுபோல விற்கும் மருந்துகளை தான் ஜெனரிக் மருந்துகள்” என்று சொல்கிறோம்.  

அதுபோல 20 ஆண்டுகளுக்கு பின் அந்த மருந்துகளை தயாரிக்கும் மற்ற நிறுவனங்கள் அந்த மருந்துகளுக்கு தங்களுக்கு பிடித்த பெயர்களை வைத்து விற்பனை செய்யலாம்.

அதாவது,  உதாரணமாக பாராசிட்டாமல் என்பது அந்த மருந்தின் பெயர் என்றால், அந்த மருந்தை தயாரிக்கும் மற்ற நிறுவனங்கள் குரோசின், மெட்டாசின், கால்பால் என்று தங்கள் விருப்பப்படி பெயர்களை சூட்டிக்கொள்ளலாம்.  

மாத்திரையின் நடுவில் ஏன் கோடு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

அதுபோல காப்புரிமைக் காலம் முடியும் வரை அந்த ஜெனரிக் மருந்துகளின் விலை அதிகமாக இருக்கும். காரணம், மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் மருந்தின் விலையையும், மூலப்பொருட்களின் விலை மற்றும் மருந்து கண்டுபிடிக்க ஆன செலவுகளையும் சேர்த்து நிர்ணயம் செய்கிறார்கள். அதனால் தான் 20 ஆண்டுகள் வரை அந்த மருந்துகளின் விலை அதிகமாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு பின் மருந்து தயாரிக்கும் மற்ற நிறுவனங்கள் குறைவான விலையில் மருந்துகளை தயாரித்து, அதை குறைவான விலையில் விற்பனை செய்கிறார்கள்.

இதுபோல மற்ற நிறுவனங்கள் மருத்துக்களை குறைவான விலையில் விற்பனை செய்வதால், மருந்து கண்டுபிடித்த நிறுவனமும் அந்த மருந்துகளை குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். அதன் காரணமாக மருந்தின் விலை குறைகிறது.

இதனால் தான் இந்த ஜெனரிக் மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கின்றன.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement