உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் | மே தின வரலாறு..!

May day wishes in tamil

உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் | May dinam wishes in tamil

May dinam wishes in tamil:- மே தினம் என்றும், உழைப்பாளர் தினம் என்றும், தொழிலாளர் தினம் என்றும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே மாதம், முதல் நாளை அனைவரும் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் உழைப்பாளர்களை வாழ்த்தும் வகையில் இந்த பதிவில் உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் உழைப்பாளர் தினம் கவிதைகள் போன்றவற்றை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். இந்த வாழ்த்து படங்களை தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தாங்கள் SHARE செய்து மகிழுங்கள்.

அதற்கு முன் மே மாதம் முதல் நாள் ஏன் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

மே தின வரலாறு / May day history in tamil:

மே தினமும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

1832 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் பத்து மணி நேர வேலை கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தார்கள். அதேபோல், பென்சில்வேனியாவிலும், பிலடெல்பியாவிலும் இந்த கோரிக்கைகள் முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Happy Labour Day

இந்தக் கூட்டமைப்பு “8 மணி நேர வேலை” கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ச்சியாக இயக்கங்களையும் நடத்தியது. இது  அனைத்து தொழிலாளர் ஒற்றுமைக்கு வழி வகுத்தது. இந்த இயக்கமானது அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பின்பே வலுப்பெற்றது.

அத்துடன் அந்தக் கூட்டமைப்பு, மே முதல் நாள், 1886 அன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணமாகும்.

1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரத்தில் 2.5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், மில்வாக்கி, பிலடெல்பியா, சின்சினாட்டி, பிட்ஸ்பர்க், பால்டிமோர், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.

Happy Labors Day in tamil

கோபம் அடைந்த தேசிய படையினர் தொழிலார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதில் ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டார். தேசிய படையினர் மீது யார் குண்டு வீசினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இதனையே காரணம் காட்டி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்கு முறை ஏவப்பட்டது.

தொழிலாளர் இயக்கத்தை முன்னின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த எட்டுபேர் மீது, கொலை சதித்திட்டம் தீட்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, தூக்குத் தண்டனையும் விதித்தது. மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக சில தொழிலாளர் இயக்கத்தை நடத்திய தலைவர்களுக்கு தூக்குத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பல போராட்டங்களுக்கு பின்புதான் உலகத் தொழிலாளர்கள் அனைவரும் எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.

May day wishes in tamil

இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டமும், சிகாகோ போராளியின் தியாகமும் தான் இன்றைக்கு நாம் மே தினமாக, உழைப்பாளர் தினமாக நாம் இன்று கொண்டாடி மகிழ்கின்றோம். அமெரிக்காவில் தான் அடிப்படை உழைப்பாளர் உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது.

May day wishes in tamil:-

May day wishes in tamil

May dinam wishes in tamil:

Happy may day wishes in tamil

உள்ளம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள்…

Ulaipalar dhinam Wishes in tamil

ulaipalar dhinam kavithai in tamil

இலவசம் வேண்டாம்.. எங்களுக்கு உழைப்பிற்கு உரிய வேலையும்.. உரிய மரியாதையும்.. உன்னத கூலியும் போதும்..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com