சணல் விதை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Hemp Seeds in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் சணல் விதைகள் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சணல் விதைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? சணல் விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது பல பொருட்கள் தயாரிப்பதற்கு உதவுகிறது. இந்த சணல் விதைகளின் வரலாற்றை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சணல் விதைகளை சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.!

சணல் விதைகள்:

 சணல் விதை என்றால் என்ன

சணல் விதை என்பது வேகமாக வளரகூடிய பயிர்களில் ஒன்றாகும். இந்த சணல் விதைகள் சணவிசு சத்தைவா ( Cannabis sativa ) என்ற சிற்றினத்தின் தாவர வகைகளில் ஒன்றாகும்.

இந்த விதைகள் சணல் அல்லது தொழில்சார் சணல் என்று அழைக்கப்படுகிறது. இது தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் ஒரு தாவரமாகும். இந்த சணல் தாவரமானது வேகமாக வளரக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.

மூங்கிலுடன் பூமியில் வேகமாக வளரக்கூடிய தாவரங்களில் இந்த சணல் விதைகளும் ஓன்று. 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தக்கூடிய இழைகளாக மாற்றப்பட்ட தாவரங்களில் சணல் விதைகளும் ஓன்று.

மேலும் இது 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார் திரிக்கப் பயன்படுத்தப்பட்ட  பயிராக சணல் விளங்கியது. இந்த சணல் பலவணிகப் பொருள்களைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சணல் பொதுவாக ஒரு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சணல் காப்பு இயற்கையாகவே இலகுரக மற்றும் நச்சுத் தன்மையற்றதாக இருக்கிறது.

இந்த சணல் இலைகள் உலகின் பல பகுதிகளில் நுகரப்படுகின்றன. இந்த சணல் விதைகள் மேற்கு ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமான தாவரமாக திகழ்கிறது. மற்ற நாடுகளில் இந்த சணல் விதைகளை “ஈவேடு” மற்றும் “பாக்கோஹோய்” என்று அழைக்கப்டுகிறது.

மேலும் இந்த சணல் விதைகள் சூப் அல்லது சாஸ் என்று சில மேற்கு ஆப்பிரிக்க சமையல் மரபுகளில் அழைக்கப்படுகிறது. அதேபோல எகிப்து நாட்டில் முலுக்கியா என்றழைக்கப்பட்டு தேசிய உணவாகக் கருதப்படுகிறது.

இந்த சணல் விதைகள் பிலிப்பைன்ஸ்சின் வடக்கு மாகாணங்களில் பிரபல உணவாக கருதப்படுகிறது.

சணல் விதைகளின் அமைப்பு:

தெளிவான மற்றும் வறண்ட மண் உள்ள நிலத்தில் இந்த சணல் விதைகள் பயிரிடப்படுகின்றன. இந்த சணல் விதைகளுக்கு அதிகப்படியான தண்ணீரும் தேவைப்படுகிறது.

சணல் விதைகள் பெரும்பாலும் மழைக் காலங்களில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இவை மிதமான தட்பவெப்பம் மற்றும் ஈரப்பதமுள்ள தட்பவெப்ப சூழலில் பயிரிடப்படுகின்றன.

வெப்ப அளவுகள் 20˚ C லிருந்து 40˚ C ஆக இருக்க வேண்டும். சணல் விதைகளை விதைக்கும் போது அதிகமான மழையளவு தேவைப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement