ஹெர்ரிங் மீன்கள் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

herring fish in tamil

Herring Fish in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் ஹெர்ரிங் மீன் பற்றிய சில பயனுள்ள தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். நம் சாப்பிடும் அசைவ உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல மீன் வகைகளை சாப்பிட்டு இருந்திருப்போம். அதேபோல் தான்  இந்த ஹெர்ரிங் மீன்கள் ஆகும். இந்த மீன்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த மீன்கள் எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கிறது என்றும் ஹெர்ரிங் மீன் பற்றிய சில அற்புதமான  தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கெளுத்தி மீன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

ஹெர்ரிங் மீன் பற்றிய தகவல்:

இந்த ஹெர்ரிங் மீன்கள் ஆனது மத்தி,  ஸ்பாட், நங்கூரம் போன்ற குடும்ப இனத்தை சேர்ந்தவையாகும். இந்த மீன்கள் 40 செ.மீ உயரம் வரை வளர கூடியவையாகும். இவை இருபது ஆண்டுகள் மட்டும் வாழக்கூடியவையாகும்.

இந்த மீன்களின் தோள்கள் பளபளக்கும் தன்மைகளை கொண்டவையாகும். நீருக்கு அடியில் இந்த மீன்கள் இருக்கும் பொழுது மீனின் பின் புறங்களில் மஞ்சள், பச்சை, நீளம் மற்றும் கருப்பு நிறங்களில் பிரதிபலிக்க கூடியவையாகும். அதோடுமட்டுமின்றி இந்த  மீனில் பக்கங்களில் வெள்ளி நிறம் உள்ளது, அவை மேலிருந்து கீழ் வரையும் மாறும் நிறத்தை கொண்டது.

இந்த ஹெர்ரிங் மீன்கள் பால்டிக் மற்றும் வட கடல்களிலும், நோர்வே முதல் கிரீன்லாந்து மற்றும் வட கரோலினா வரையிலான முழு வட அட்லாண்டிக் பெருங்கடலிலும் வாழும் பள்ளி மீன்களுக்கு  சொந்தமான மீன்களாகும்.

ஹெர்ரிங் மீன்கள் பொதுவாக மற்ற கடல் பகுதிகளுக்கு செல்லும் பொழுது சில மீன்களுக்கு இறையாகி விடுகிறது. இந்த ஹெர்ரிங் மீனின் சிறப்பானது முட்டைகள் இல்லாத செதில்கள்  என்றும் மென்மையான கில் கவர்கள்  போன்றவற்றை கொண்டவையாகும்.

இந்த மீன்கள் வட கடல்களிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும் நோர்வே முதல் கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரையிலும் அதிகமாக காணப்படுகின்றன.

இந்த ஹெர்ரிங் மீன்களில் அதிகமான சத்துக்கள் உள்ளன அதாவது  நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் 2.9 கிராம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் 5.9 கிராம், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் 3.3 கிராம், அதோடு இதில்  ஒமேகா -3 – 2.8 கிராம், ஒமேகா -6 – 0.2 கிராம், கொழுப்பு 68 மில்லி கிராம் உள்ளது.  அதோடு மட்டுமின்றி இதில் கனிமங்கள், வைட்டமின்கள் போன்ற சத்துக்களும் உள்ளது.

Herring Fish Health Benefits in Tamil:

இந்த ஹெர்ரிங்  மீனானது நல்ல கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இருதய நோய் பிரச்சனைகள் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

நீரழிவு போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் இந்த ஹெர்ரிங் மீன் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். அதோடு மட்டுமின்றி உடலில் அலர்ஜி மற்றும் ஆஸ்த்துமாவினால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஹெர்ரிங் மீன்களை சாப்பிடுவதினால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த மீன்கள் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் எலும்பு மண்டலங்களுக்கு பல ஆரோக்கியங்களை தருகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil