நிலநடுக்கம், சுனாமி வருவதை சில உயிரினங்கள் மட்டும் முன்கூட்டியே அறிகிறதே அது எப்படி தெரியுமா?

how do animals predict earthquakes in tamil

நிலநடுக்கம், சுனாமி வருவதை சில உயிரினங்கள் மட்டும் முன்கூட்டியே அறிகிறதே அது எப்படி தெரியுமா?

how do animals predict earthquakes in tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு சுவாரசியமான தகவலை பற்றி தான் அறிய போகிறோம். அது என்ன தகவல் என்று யோசிக்கிறீங்களா? நிலநடுக்கம் வருவதை மனிதர்களாகிய நம்மால் அறிய முடிவதில்லை, விஞ்ஞானிகள் கூட அதனை கண்டறிய பலவகையான தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி தான் தோராயிரமாக அறிகின்றன. 6 அறிவு கொண்ட மனிதர்கள் அறியமுடியாத விஷயத்தை. 5 அறிவு கொண்ட பறவைகள், விலங்குகளால் அதனை அறிய முடிகிறது. அது எப்படி தெரியுமா? அதனை அறிவதற்கு தான் இந்த பதிவு.. வாங்க அதனை படித்து தெரிந்து கொள்வோம்..

பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நிலநடுக்கம், சுனாமி வருவதை முன்கூட்டியே அறிவது எப்படி?

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பது ஐந்து அறிவு தான் என்று நாம் குறைத்து எடைபோடுகிறோம். ஆனால் அந்த ஐந்து அறிவுதான் விலங்குகள் பறவைகளுக்கு மிகவும் சென்சிடிவான ஒன்று என்று உங்களுக்கு தெரியுமா?

ஆம் பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு இருக்கும் அந்த ஐந்து அறிவு அவர்களுக்கு மிகவும் சென்சிடிவான ஒன்றாகும், அந்த சக்தியை பயன்படுத்தி இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன் ஐந்தறிவு கொண்ட உயிரினங்களுக்கு இருக்கிறது.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? 

அதனை அறியலாம் வாங்க.. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த பூமியில் கிட்டத்தட்ட 15 tectonic plates இருக்கிறது. இந்த Tectonic Plates ஒன்றோடு ஒன்று உரசும்போது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

ஆக ஒரு நிலநடுக்கம் ஏற்படும் போது சில அதிர்வுகள் பூமியின் மேல் பரப்பை நோக்கி செல்லும். ஆனால் ஒரிஜினல் அதிர்வு பூமியை நோக்கி செல்வதற்கு முன், சில குறைவான அதிர்வுகள் பூமியை நோக்கி மிக வேகமாக செல்லும். இந்த அதிர்வுகள் பூமியை நோக்கி என்னதான் அதிவேகமாக என்றாலும் இதனுடைய சவுண்ட் 20Hz-க்கு கீழ் தான் இருக்கும். இந்த சவுண்டை மனிதர்களாகிய நம்மால் உணர முடியாது.

மனிதர்களாகிய நமக்கு 20Hz-க்கு முதல் 20,000 Hz-க்கு உள் இருக்கும் சவுண்டை தான் காதால் கேட்க முடியும். இந்த 20Hz-க்கு கீழ் இருக்கும் சவுண்டை Infrasonic Sounds என்று அழைக்கின்றன. இந்த Infrasonic Sound-ஐ விலங்குகள், பறவைகள் என்று ஐந்து அறிவு கொண்ட உயிரினங்களால் உணர முடியும். 

அது என்னென்ன உயிரினங்கள் என்றால் மாடு, காண்டாமிருகம், கொக்கு இது போன்ற உயிரினங்களால் உணரமுடியுமாம்.

அதேபோல் யானை மற்றும் பாம்புகளாலும் உணர முடியும். யானை தனது கால்களால் உணருமாம், அதேபோல் பாம்புகள் அதன் தோலினால் உணருமாம்.

இந்த இயற்கை சீற்றங்கள் நடைபெற இருக்கும் போது புவி காந்த விசையில் சில மாற்றங்கள் நிகழுமாம். அத்தனையும் சில விலங்குகள் மற்றும் பறவைகளால் உணரமுடியுமாம். அது எந்த உயிரினம் என்றால் பூனை, நாள், பறவைகள்.

அதேபோல் இயற்கை சிற்றம் நிகழும் பொது கடலிலும் சில அழுத்தங்கள் ஏற்படும் அதனை அந்த கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரங்களால் உணரமுடியும், ஆக கடலில் இருக்கும் உயிரினங்களும் அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுமாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மழை எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information