சதுர அடி கணக்கிடுவது எப்படி | How To Calculate Square Feet in Tamil

how to calculate square feet in tamil

 சதுர அடி கணக்கு | How To Calculate Land Square Feet in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சதுர அடியை கணக்கிடுவது எப்படி என்பதை பார்க்கலாம். முன்னோர் காலத்தில் நிலங்களை மா, காணி, மனை, ஏக்கர் என்றெல்லாம் அழைத்து வந்தார்கள். இப்பொழுது சதுர அடி, கிரவுண்ட், சென்ட் என்று கூறுவார்கள். நாம் ஒரு மனை வாங்கும் போது அதன் விலையை தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த மனையின் சதுர அடியை கணக்கிடுவதற்கும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். புதிதாக மனை வாங்க நினைப்பவர்களுக்கு அதன் சதுர அடியை கணக்கிட இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நாம் எவ்வாறு மனையை கணக்கிடலாம் என்று பார்க்கலாம்.

How To Calculate Square Feet in Tamil:

 • சதுர அடி என்பது பரப்பளவை அளவிடும் ஒரு அலகாகும்.
 • நீளம்*அகலம் = பரப்பளவு.
 • ஒரு சதுரத்தின் நீளம் மற்றும் அகலம் இரண்டையும் பெருக்கி வரும் விடையே ஒரு சதுர அடி அல்லது பரப்பளவு ஆகும்.
 • ஒரு மனை அதன் நீளம், அகலம் இரண்டும் சமமாக இருக்கலாம் அல்லது வெவ்வேறு அளவுகளை கொண்டும் இருக்கலாம். அப்படி இருக்கும் அளவுகளை எளிதான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Formula-வை வைத்து கணக்கிடலாம்.

How To Calculate Land Square Feet in Tamil:

சம அளவு மனை:

 • ஒரு வீட்டு மனையின் அகலம் மற்றும் நீளம் சமமாக இருந்தால் அதனை சுலபமாக கணிக்கிடலாம். உதாரணத்திற்கு ஒரு சதுரத்தை வரைந்து கொள்ளுங்கள் அதன் இரு பக்கவாட்டில் இருக்கும் நீளம் 20 ஆகவும் மற்றும் அதன் அகலம் 60 ஆகவும் இருந்தால் அதன் சதுர அடி 1200 ஆகும்.

how to calculate square feet in tamil

நீளம் * அகலம் = சதுர அடி 

20*60= 1200

வேவ்வேறு அளவு மனை:

 • வீட்டுமனை அளவு நீளம் மற்றும் அகலம் சமமாக இல்லையெனில் வெவ்வேறு அளவை கொண்டிருந்தால் அதை எவ்வாறு கணக்கிடலாம் என்று பார்ப்போம். உதாரணத்திற்கு அகலத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள அளவை கூட்டி கொள்ளவேண்டும். கூட்டி வரும் விடையை 2-ல் வகுத்து கொள்ள வேண்டும். அதே போல நீளத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள அளவை கூட்டி கொள்ளவேண்டும். கூட்டி வரும் விடையை 2-ல் வகுத்து கொள்ள வேண்டும்.

how to calculate land square feet in tamil

உதாரணத்திற்கு: அகலத்தின் ஒருபக்கம் (20) மற்றும் அதன் எதிர்பக்கம் (20) என்று எடுத்துக்கொள்ளலாம்.

20+20=40

40/2=20

உதாரணத்திற்கு: நீளத்தின் ஒரு பக்கம் (76) என்றும் அதன் எதிர்பக்கம் (63) என்றும் வைத்துக்கொள்வோம்.

76+63=139

139/2=69.5

 • இப்பொழுது நீளம் மற்றும் அகலம் இரண்டிலும் வகுத்து வரும் விடையை பெருக்கி கொள்ள கிடைக்கும் விடையே சதுர அடி ஆகும்.

40*69.5=1390 Square Feet 

சதுர அடி கணக்கிடுவது எப்படி:

how to calculate land area in square feet in tamil

 • அகலம் மற்றும் நீளம் ஒரு பக்கத்தில் குறுகலாக இருந்தால் அதையும் மேலே கூறப்பட்ட அந்த Formula வைத்தே கணக்கிடலாம்.
 • நீளம் 48 அதன் எதிர்பக்கம் 40 என்று எடுத்துக்கொள்ளுங்கள்

48+40=88

88/2=44

 • அகலம் 20 அதன் மறுபக்கம் 27 என்று எடுத்துக்கொள்வோம்.

20+27=47

47/2=23.5

 • நீளம் மற்றும் அகலம் இரண்டிலும் வகுத்து வரும் விடையை பெருக்கி கொள்ள வேண்டும்.

44*23.5=1034 Square Feet.

1 சென்ட் எத்தனை சதுர அடி:

 • ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடி ஆகும். ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் ஆகும்.
 • பழைய காலத்தில் Tape இல்லாததால் 20m Chain பயன்படுத்தப்பட்டு வந்தது. மீட்டர் என்பதற்கு பதிலாக feet என்ற சொல் உபயோகத்தில் இருந்தது. 20m செயின் 66 feet ஆகும்
 • ஒரு சதுரத்தின் நீளம் மற்றும் அகலம் 66′ என எடுத்துக்கொண்டு அதை பெருக்கி கொள்ள வேண்டும்.
 • 66’*66’=4356
 • பின் 4356 எனும் விடையை 10-ல் வகுத்து கொள்ள வேண்டும்.
 • 4356/10=435.6 இதுவே ஒரு சென்டின் சதுர அடி ஆகும்.

1200 சதுர அடி எத்தனை சென்ட்:

 • ஒரு மனையின் மொத்த சதுர அடியை 435.6 சதுர அடியால் வகுக்க கிடைப்பது அந்த மனையின் சென்டாகும். உதாரணத்திற்கு ஒரு மனையின் மொத்த அளவு 1200 என எடுத்துக்கொண்டால் 2.754 என்பது அதன் சென்ட் ஆகும்.
 • 1200/435.6=2.754
 • 100 சென்ட் என்பது ஒரு ஏக்கர் ஆகும்.

கிரவுண்ட் அளவு:

 • வீடு கட்டும்பொழுது அதிக வசதி தேவைப்படுவதால் Rectangle Type- ல் கட்டுவது சிறந்தது. 1 கிரவுண்ட் 2400 சதுர அடியை கொண்டுள்ளது. அதன் நீளம் 60 அகலம் 40.
 • அரை கிரவுண்ட் 1200 சதுர அடியை கொண்டுள்ளது. அதன் நீளம் 30 அகலம் 40.
 • 1/4 கிரவுண்ட் 600 சதுர அடியை கொண்டுள்ளது. அதன் நீளம் 30 அகலம் 20.
 • இவ்வாறு தான் ஒவ்வொரு மனையின் சதுர அடி கணக்கிடப்படுகிறது.
கிசான் கடன் அட்டை பெறுவது எப்படி? மற்றும் அதன் பயன்கள்
தாட்கோ திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil