மாணவர்களுக்கான கல்வி கடன் நீங்களும் பெறலாம்..!

How To Get Education Loan Easily

கல்வி கடன் பெறுவது எப்படி..! How To Get Education Loan From Bank..!

How To Get Education Loan Easily: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் மாணவ செல்வங்களுக்கான கல்வி கடன் எப்படி எளிமையாக பெறலாம் என்று தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இப்போது உள்ள காலத்தில் உயர் படிப்பிற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. உயர் கல்வியின் வாய்ப்பு அதிகரித்து கொண்டிருந்தாலும் கல்வியின் செலவானது இரண்டு மடங்காக உள்ளது. இதன் விளைவாக பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்தும் போதிய பண குறைவினால் கல்வி செல்வத்தை பாதியில் விடும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையினை மாற்றுவதற்கே வங்கியின் மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அரசானது செயல்படுத்தி வருகிறது. இந்த செய்தி பலருக்கும் தெரிந்திருந்தும் இந்த கல்வி கடனை எப்படி முறையாக பெறுவது என்று தெரியவில்லை. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சென்று பயில எங்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடனை பெறுவதற்கு என்ன விதிமுறைகள் இருக்கிறது என்று விரிவாக படித்தறியலாம் வாங்க..!

newபுதிய கல்வி கொள்கை திட்டம் 2022..! New Education Policy 2022..!

 

வித்யாலட்சுமி கல்வி கடன்

எந்த படிப்புகளில் சேர கல்விக்கடன் வழங்கப்படுகிறது?

பல்கலைக்கழக மானிய குழுவை சார்ந்த யூ.ஜி.சி(UGC) நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்ற அனைத்து வித படிப்புகளுக்கும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.

தொழிற்பயிற்சி/ தொழில்நுட்ப படிப்பில் சேருபவர்களுக்கு கல்விக்கடன் பெறலாமா?

ஐ.டி.ஐ பிரிவில் கல்வி கடன் வழங்குவதற்கு ‘ஸ்கில் லோன் ஸ்கீம்(skill loan scheme)’, ‘வொகேஷனல் லோன் ஸ்கீம்(vocational loan scheme)’ என்று இரண்டு வகையாக பிரித்து உள்ளனர். ஐ.டி.ஐ சார்ந்த படிப்புகளில் 40 வயது வரையிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

அரசு வழங்கும் கல்வி கடனிற்கு எப்படி விண்ணப்பிப்பது? 

கல்வி கடன் பெறுவது எப்படி: ஒரே குடும்பத்தை சார்ந்த எத்தனை பேர் வேண்டுமானாலும் கல்வி கடனை ஒரே வங்கியின் மூலம் பெறலாம். வேறு எந்த கடன்களும் இந்த கல்வி கடன் வாங்குவதற்கு பாதிப்பாக இருக்காது.

இதற்காகவே மத்திய அரசின் ‘வித்யாலட்சுமி போர்டல்’ என்ற நிறுவனம் 40 வங்கிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் கல்வி கடன் பெற நினைப்பவர்கள் நேரடியாகவே சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் நம்முடைய விண்ணப்பத்தின் நிலையினையும் அவற்றில் தெரிந்துக்கொள்ளலாம்.

கல்வி கடனாக அரசின் மூலம் எவ்வளவு வழங்கப்படும்?

கடன் தொகை வழங்குவதற்கு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். முதலாம் பிரிவில் கல்வி கடன் தொகையாக ரூ.4 லட்சம் வரை பெறலாம். கடன் தொகை வாங்கும் பெற்றோர் மற்றும் மாணவர் கையொப்பம் இடவேண்டும். மைனராக இருந்தால் இணைக் கடன் தாரராவார். படிக்கும் மாணவர்க்கு திருமணம் நடந்திருந்தால் அவர்களுடைய பெற்றோர்/ மாமியார்/மாமனார் இவர்களில் யாரேனும் கையெழுத்து இடலாம். பங்குத்தொகை எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாம் பிரிவில் ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலும் இந்த பிரிவில் பெறலாம். மாணவரின் கடன் தொகை வாங்கும் சாட்சிக்காக மாணவர், பெற்றோர், மூன்றாம் நபரான ஜாமீன்தாரர் பிணைக் கையெழுத்து போடவேண்டும். எந்த பொருளும் கடன் தொகை வாங்குவதற்கு அடமானம் வைக்க தேவையில்லை.

மூன்றாம் பிரிவில் ரூ.7.5 லட்சம் முதல் எவ்வளவு கடன் தொகை கல்வி கடனிற்காக தேவைப்படுகிறதோ அந்த கடன் தொகைக்கு அடமானம் தேவை. அடமான பொருளான இடம், கட்டிடம், அரசு கடன் பத்திரம், தேசியப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்(Mutual Fund) இவைகளில் ஏதேனும் அடமான பொருளாக இருக்கலாம்.

வங்கியில் முன் பணம் செலுத்த வேண்டுமா?

வங்கியில் ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் தொகை பெரும் நபர்கள் 5% பயனாளியின் பங்குத்தொகை செலுத்த வேண்டும். 5% தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

அரசு அல்லது தனியாரால் கிடைக்கும் கல்வி உதவித் தொகை மூலமும் இதனை செலுத்தி வரலாம். வெளிநாட்டில் சென்று பயில்வதற்கு 15% பயனாளியின் பங்குத்தொகை செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்:

ஒவ்வொரு வங்கிகளுக்கும் தனிப்பட்ட முறையில் வட்டி விகிதமானது மாற்றம் அடையும். வருடத்திற்கு 15% முதல் 16% வரை வங்கிகளில் வட்டி வசூலித்து வருகின்றனர்.

கால அவகாசம்:

படிப்பு முடித்தவுடன் 1 வருடம் அல்லது வேலை கிடைத்து 6 மாதம் பின்னர் கல்வி கடனாக வாங்கிய தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற முடியுமா?

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்கும்.

கல்வி கடனில் வட்டி மானியம் கிடைக்குமா?

மத்திய அரசானது வட்டி மானியத்தினை அளித்து வருகிறது. ஆண்டிற்கு 4 லட்சம் வரை வருமானம் பெறுவோர் கடனுதவி பலனை அடையலாம். இந்த கல்வி கடனை அனைத்து சாதி மதம் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வி கடனிற்கு விண்ணப்பிக்கும் போது வருமான சான்றினையும் சேர்த்து வழங்க வேண்டும்.

கடன் தவணை காலம்:

கல்வி கடனிற்காக வாங்கிய ரூ.7.5 லட்சம் தொகையினை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன் தொகையாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையிலும் திருப்பி செலுத்தலாம்.

கல்வி கடனாக எதற்கெல்லாம் வாங்கலாம்?

பொறியியல் சார்ந்த படிப்பிற்கு 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒரே கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் கல்லூரி, விடுதி, தேர்வு, நூலகம், ஆய்வுக் கூடம், வெளிநாடுகளுக்கான பயண செலவு, காப்பீட்டுத்தொகை (திருப்பித்தரத்தக்க காப்புத்தொகைக்கான ரசீதுகளை இணைக்க வேண்டும்), உபகரணங்கள், சீருடை, படிப்பிற்கு கட்டாயமாக தேவைப்படும் எனில் கணினி அல்லது மடிக் கணினிக்கான கடன் தொகை, ப்ராஜெக்ட், இவற்றிற்கான பயண செலவினையும் சேர்த்தும் கூட கடன் தொகையாக கேட்கலாம்.

கல்வி கடன் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வாழ்வின் பலதரப்பட்ட மக்களுக்கும் கிடைக்கும். ஆடிட்டிங்(Auditing) சம்மந்தப்பட்ட துறையில் படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 50 வயது வரையிலும் கடன் தொகை கிடைக்கும்.

சில வங்கிகள் நர்சரி பள்ளி முதல் +2 வரையிலும் கடன் தொகை வழங்கி வருகின்றனர்.

மனு தள்ளுபடி செய்தால் என்ன செய்யலாம்?

கடன் தொகைக்கு தகுந்த காரணமின்றி நிராகரிக்கப்பட்டால் முதல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம். அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கடன் தொகை வாங்கிய வங்கிக்கு மனுவினை அனுப்பிவைப்பார்கள்.

மாவட்ட ஆட்சியர் அனுப்பிய பிறகும் பலன் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கித் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் விவரத்தினை அனுப்பலாம்.

அதுவும் தகுந்த காரணங்களின்றி நிராகரிக்கப்பட்டால், Chief general manager, RPCD , இந்திய ரிசர்வ் வங்கி, சென்ட்ரல் ஆபீஸ் பில்டிங், 10-வது தளம், சாகித் பகத்சிங் மார்க், மும்பை – 400001. போன்: 022-22610261 என்ற அஞ்சல் முகவரிக்குப் புகார் அனுப்பி சந்தேகங்களுக்கு தீர்வு தெரிந்துக்கொள்ளலாம்.

சரி நண்பர்களே இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஒரு ஷேர் செய்யவும். 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil