Human Rights Tamil
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை “மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக” கருதப்படுகின்றன. சரி இந்த பதிவில் மனித உரிமைகள் (Human Rights Tamil) பற்றிய சிறு குறிப்புகளை தெரிந்து கொள்வோம் வாங்க.
TNPSC மனித உரிமைகள் பாடக்குறிப்புகள்
மனித உரிமைகளுக்கான முக்கிய நாட்கள்:
- 1215 – மகாசாசனம்
- 1776 – அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் மற்றும் உரிமைகள் மசோதா
- 1787 – ஐக்கிய நாடுகளின் அமைப்புச் சட்டம்
- 1789 – மனிதனின் உரிமைகள் மீதான பிரெஞ்சு பிரகடனம்
- 1946 – மனித உரிமைகள் மீதான ஐ.நா. ஆணையம்
- 1948 – மனித உரிமைகளின் சர்வதேசப் பிரகடனம்
- 1949 – ஜெனீவா மாநாடு
- 1950 – மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களின் பாதுகாப்பான ஐரோப்பிய மாநாடு
- 1961 – ஐரோப்பிய சமூக சாசனம்
- 1966 – பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாடு (ஐசிசிஎஸ்சி): குடிமை மற்றும் அரசியல் உரிமைகளின் மீதான சர்வதேச உடன்பாடு (ஐசிசிபிஆர்): மற்றும் (முதலாவது) குடிமை மனிதத்தன்மையற்ற அல்லது தரக்குறைவாக நடத்துவதல் அல்லது தண்டித்தல் மீதான சர்வதேச உடன்பாட்டிற்கு தேர்வு முறை மரபொழுங்கு (யுஎன்சிஏடீ).
- 1993 மனித உரிமைகள் மீதான உலக மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல் திட்டம் மற்றும் வியன்னா பிரகடனம்
மனித உரிமைகள், மனித நேயத்தின் அடிப்படைக் கொள்கைகள்:
- இந்த மனித உரிமைகள் மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் மனித கௌரவத்தின் பொருட்டும் இவ்வுரிமைகள் அடிப்படையானவை என்று கருதப்படுகின்றன.
- இத்தகைய உரிமைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள், வாழ்க்கைக்கான உரிமை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை மற்றும் சித்தரவதையிலிருந்து விடுதலை போன்றவைகளாகும்.
- தேசிய எல்லைகளுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல
- மனித உரிமைகளின் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு என்பது தேசிய எல்லைகளுக்குட்பட்டது மட்டுமே என்பதல்ல மாறாக உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில இலட்சியங்களை அவை வலியுறுத்துகின்றன. இந்த மனித உரிமைகளுக்கான மரியாதை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு – போன்ற அம்சங்களை நிறைவு செய்து தர வேண்டிய கடமை நாடுகளுக்கு உண்டு என்பதை மனித உரிமைகள் கொண்டுள்ளன.
மனித உரிமைகளின் அம்சங்கள்
- மக்கள் மனிதர்களாக இருக்கிற ஒரு காரணத்தினாலேயே உரிமைகளைப் பெற்றிருப்பவர்களாகின்றனர்.
- அனைத்து மக்களும் ஒரு மதிப்புயர்ந்த மானுட வாழ்க்கையை நடத்திச் செல்லுவதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
- மேலும் எல்லா மக்களுக்கும் இந்த உரிமைகள், சாதி, நிறம், மதம் மற்றும் பாலின அடிப்படையில் மறுக்கப்படக் கூடாதவையாகும்.
மனித உரிமைகள் உலகம் முழுவதற்குமானவை:
தேசம், இனம், பால் அல்லது நிறம் ஆகிய எதையும் மனித உரிமைகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எல்லா நாடுகளையும் சேர்ந்த அனைத்து நிறத்தவர், இனத்தவர், மதத்தவர் அனைவரும் எல்லாப் பகதிகளிலும் ஒரே விதமான உரிமைகளைப் பெற்றிருப்பவர்களே. உலகின் எல்லாக் கண்டங்களிலும் உள்ள வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே வித உரிமைகளைக் கட்டாயம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மனித உரிமைகள் அனைத்து மக்களையும் சமமானவர்களாக நடத்துபவை:
“எல்லா மனித உயிர்களும் உரிமைகளிலும் – கௌரவத்திலும் சுதந்திரமாகவும், சமமாகவுமே பிறக்கின்றன” என்ற கருத்தாக்கத்தை இது பின்பற்றுவதாகும். ஆகவே அவர்களுடைய வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள், அரசியல் ஈடுபாடுகள், பாலியல், சமூக அடித்தளம், அந்தஸ்து, பிற போன்றவைற்றை மதிக்கிற அதே சம காலத்தில் ஒரே விதமான வாய்ப்புகளையும் – நடத்தப்படுதலையும் பெறுவதற்கு (அனைத்து மனித உயிர்களும்) தகுதி படைத்தவையுமாகும்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கங்கள் கட்டாயம் பணியாற்றியாக வேண்டும். மேலும் சமுதாயத்திலுள்ள சில மக்கள் பிரிவுகளுக்கு, உதாரணமாக, பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மேற்கண்டவாறு ஒரே விதமான வாய்ப்புகளை வழங்குவது என்பது கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் கொண்டிருக்கக்கூடும்.
இந்த உரிமைகள் அடிப்படையாக தனிநபர்களைச் சேர்ந்தவையே:
அதாவது இதனுடைய பொருள், அரசுக்கும், ஒரு தனிநபருக்குமிடையே நிலவுகிற உறவைப் பொறுத்தே இவை தொடர்புடையனவாகின்றன என்பதே. இதன் விளைவாக ஒவ்வொரு தனிநபரும் அவன் அல்லது அவளுடைய உரிமைகளை முழுமையாக அனுபவிக்கவும், சுதந்திரமாகச் செயல்படுத்தவும் முடிகிற ஒரு சமுதாயத்தை உருவாக்கித் தர வேண்டிய கடமையும் அரசுக்கே உரியதாகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |