Ice Apple in Tamil
பொதுவாக உறவுகளை அழைக்கும் போது முறைகளை சொல்லி அழைக்கின்றோம். இந்த முறைகளை நம் பெற்றோர்கள் இவர்களை இப்படி தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி தருவார்கள். அப்பா உடைய அப்பாவை தாத்தா என்று அழைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் நமக்கு மூன்று தலைமுறைகளின் உறவுகளின் பெயர்கள் மற்றும் உறவு முறைகள் பற்றி தெரியுமா என்றால் கட்டாயம் தெரியாது. அதனால் தான் உறவு மட்டுமில்லை நாம் அன்றாடம் கடைபிடிக்க கூடிய விஷயங்களின் முழு சரித்திரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அது போல தான் சாப்பிடும் உணவுகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை மட்டும் அறிந்து கொள்ளாமல் அதன் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஐஸ் ஆப்பிள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Ice Apple Meaning in Tamil:
ice apple என்பதை நுங்குவை குறிக்கிறது.
ஐஸ் ஆப்பிள் என்றால் என்ன.?
ஐஸ் ஆப்பிள் என்பது தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மற்றும் கிழக்கு இந்தயாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இவை இனிப்பு சுவை உடையதாக இருக்கும்.
இந்த பழமானது விதை வடிவத்தில் சற்று பெரியதாகவும், மஞ்சள் நிறத்துடனும் காட்சியளிக்கும். உட்புறத்தில் ஜெல்லி போன்று இருக்கும். மேலும் அதில் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
உலர் திராட்சை பற்றி தெரியுமா உங்களுக்கு.?
ஐஸ் ஆப்பிளை மராத்தியில் தட்கோலா என்றும், இந்தி மற்றும் தமிழில் நுங்கும் என்றும் அழைக்கப்படுகிறது.
ஐஸ் ஆப்பிள் என்பது பனைமரத்தில் காய்க்க கூடிய ஒரு பழமாக இருக்கிறது. இவை கோடைகாலத்தில் காய்க்க கூடியது.
ஐஸ் ஆப்பிளில் உள்ள சத்துக்கள்:
இதில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும் மற்றும் பாரம்பரியமாக காய்ச்சல் மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
நுங்கை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம்:
தமிழ்நாட்டில், நுங்கு பொதுவாக பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் நுங்கு சர்பத் என்ற புத்துணர்ச்சியூட்டும் பானத்தை தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த பழத்துடன் சர்க்கரை, தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து தயாரித்து பானமாக விற்கலாம். நுங்கு பாயசம் போன்ற இனிப்பு வகைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
நுங்கை சாப்பிட்ட பிறகு அதன் ஓடுகளை சிறிய குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்துவார்கள்.
நுங்கு கனவில் வந்தால் என்ன பலன்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |