இந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..! Indian Bank News Tamil..!

இந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..! Indian Bank News in Tamil Today..!

How to Indian Bank ATM Card Block:- இப்போது உள்ள காலகட்டத்தில் ATM Card ஒரு இன்றியமையாத ஒரு அம்சமாகும். பொதுவாக இந்த ATM கார்டினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றன. அதாவது இப்போதேல்லாம் நாம் ஒரு சிறிய ஷாப்பிங் ஸ்டோரிற்கு சென்றாலும் சரி கண்டிப்பாக ATM Card-யினை கையோடு எடுத்து செல்வோம். இந்த ATM Card-யினை நாம் மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவேளை நாம் நம்மளுடைய ATM Card தொலைந்துவிட்டால், அதை நாம் அலட்சியமா விட்டுவிடக்கூடாது. அந்த  ATM Card-யினை உடனே ப்ளாக் செய்ய வேண்டும். இல்லையென்றால் வேறு ஒருவர் உங்களது கார்டை தவறுதலாக பயன்படுத்த பலமடங்கு வாய்ப்புள்ளது. இருந்தாலும் இந்த ATM கார்டினை பயன்படுத்த அவர்களுக்கு தேவைப்படுவது உங்கள் கார்டில் இருக்கும் 16 டிஜிட் நம்பர் மற்றும் CVV நம்பர் மட்டுமே அது இருந்தால் போதும் உங்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் அபேஸ் போட்டுவிடுவார்கள்.

newதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..!

சரி இந்த பதிவில் Indian Bank ATM Card Block செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Indian Bank News Tamil

உங்களின் ATM CARD-ஐ எப்படி ப்ளாக் செய்வது?

How to Indian Bank ATM Card Block ? மூன்று வழிகளிகளில் தங்களுடைய ATM கார்டினை ப்ளாக் செய்யலாம் அதனை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..

Indian bank net banking மூலம் எப்படி ப்ளாக் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்:-

Indian bank net banking மூலம் பிளாக் செய்யலாம். அதற்கு உங்களின் Username மற்றும் Password உடன் Indian Bank Net Banking-ஐ லாகின் செய்ய வேண்டும்.

  1. பின் அவற்றில் ATM Card Services செலக்ட் செய்யுங்கள்.
  2. பின் E-Services யின் கீழ் Block ATM Card என்று இருக்கும் அந்த லிங்கில் செல்லுங்கள்.
  3. அவற்றில் தாங்கள் ATM Card சேவையை நிறுத்த வேண்டும் என்றால், அதை செலக்ட் செய்யுங்கள்.
  4. இப்பொழுது அனைத்து ஆக்டிவ் மற்றும் ப்லோக் கார்டுகள் உங்களுக்கு தெரியவரும் அங்கு உங்களின் ATM கார்டின் முதல் நான்கு நம்பரும் கடைசி நான்கு நம்பரும் அங்கு தெரியும்.
  5. நீங்கள் ப்லோக் செய்ய விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும், அதைத் தேர்ந்தெடுத்து, SUBMIT என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. பிறகு தங்களுடைய விவரங்களை சரிபார்க்கவும்
  7. Authentication mode அலட் செய்து அதில் SMS OTP அல்லது Profile Password கொண்டிருக்கும்.
  8. தேர்ந்தெடுக்கப்பட்ட OTP / Profile password இரண்டாவது ஸ்க்ரீனில் உள்ளிடவும் பின் Confirm என்பதை க்ளிக் செய்யுங்கள்
  9. அதன் பிறகு கார்ட் ப்லோக் ஆன பிறகு உங்களுக்கு ஒரு success மெசேஜ் தெரியவரும்.
  10. இந்த success மெசேஜ் உடன் உங்களுக்கு ஒரு Ticket Number கிடைக்கும். இந்த நம்பரை தாங்கள் சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த நம்பர் இருந்தால் தான் தங்கள் மீண்டும் புதிதாக ATM கார்ட் வாங்க முடியும்.

Indian Bank ATM Card Block for SMS 

நீங்கள் SMS மூலம் உங்களின் தொலைந்து போன இந்தியன் பேங்க் ATM கார்டை ப்ளாக் செய்ய விரும்பினால், இது உங்களுக்கு மிகவும் எளிதான முறையாக இருக்கும். அதாவது தாங்கள் இந்தியன் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்த தொலைபேசி எண்ணில் இருந்து 56767 என்ற எண்ணிற்கு ‘BLOCK’ என்று டைப் செய்து மெசேஜினை சென்ட் செய்யலாம். தங்களுடைய ATM காரட்டினை மிக எளிதில் ப்ளாக் செய்து கொள்ளலாம்.

TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க

Customer Care கால் செய்து உங்கள் ATM CARD நம்பரை எப்படி ப்ளாக் செய்வது?

Indian Bank ATM Card Block Customer Care Number: 1800 425 00000

உங்களுடைய ATM  கார்டை தொலைபேசி மூலம் கால் செய்து நீங்களே ப்லாக் செய்யலாம். இதற்கு இந்தியன் வங்கியின் 24 மணிநேர இலவச சேவையை தங்களுக்கு வழங்குகிறது. அதாவது 1800 425 00000 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள்.

இப்பொழுது தங்களிடம் அவர்கள் Account number, பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற முக்கிய தகவல்களை கேட்பார்கள், எனவே தாங்கள் அந்த விவரங்களை சரியாக கூறவேண்டும்.. அதன் பிறகு தங்களுடைய ATM CARD-ஐ  customer care service BLOCK செய்து தங்களுக்கு ஒரு நம்பர் கொடுப்பார்கள். அந்த நம்பரை பத்திரமாக சேவ் செய்து கொண்டு தாங்கள் ACCOUNT OPEN செய்த பேங்கில் அந்த நம்பரை கொடுத்து. மீண்டும் புதிய ATM CARD அப்ளை செய்து பெறலாம்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil