இனியவை நாற்பது ஆசிரியர் குறிப்பு | Iniyavai Narpathu Aasiriyar kurippu
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பதினெண்கீழ்க்கணக்கு நூலகளுள் ஒன்றனை இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் குறிப்பு பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இந்த பதிவானது படிக்கும் குழந்தைகளுக்கு மற்றும் தேர்வுகளுக்கு படிக்கும் நபர்களுக்கும் மிகவும் உதவியானதாக இருக்கும். நீங்கள் பொதுநலம். காம் பதிவில் பலவகையான சங்க இலக்கியங்களின் நூல்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றி படித்து இருப்பீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவையும் படித்து பயன்பெறலாம் வாங்க நண்பர்களே..!
இனியவை நாற்பது ஆசிரியர் குறிப்பு:
இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேதனார் ஆவார்.
இவர் பாண்டிய நாட்டில் பிறந்தார். பூதஞ்சேதனாரின் சமயம் வைதீகம் என்பது ஆகும்.
அதுமட்டும் இல்லாமல் இவர் சிவன், திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய மூன்று இறைவனையும் பற்றி பாடியுள்ளார். இவரது காலம் கி.பி 725 முதல் 750 வரை ஆகும்.
நற்றிணை ஆசிரியர் குறிப்பு..! |
இனியவை நாற்பது விளக்கம்:
இந்த இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று மற்றும் நாற்பது வெண்பாக்கலை கொண்ட ஒரு நூல்.
பெண்களை பற்றி அவதூறாக பேசுவது தவறு என்று எடுத்துக்குறைக்கும் நூல் இனியவை நாற்பது.
அதுபோல நாம் வாழும் இந்த உலகில் அனைத்துமே இனிமை தான். எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்பதை இந்த நூல் கூறுகிறது.
இனியவை நாற்பதில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் இந்த உலகின் இனிமை என்ன என்பதை வெவ்வேறு வகையில் எடுத்து உரைக்கிறது.
இந்த நூலில் 1 பாடல் மட்டும் பஃறொடை வெண்பாவில் இடப்பெற்றுள்ளது மற்ற பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் இடப்பெற்றுள்ளன.
அதேபோல இந்த பாடலில் சிறப்பு என்னவென்றால் 1, 3, 4, 5 ஆகிய நூல்கள் நான்கு வகையான இனிமைகளை எடுத்துரைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் மூன்று வகையான இனிமைகளை கூறுகிறது.
இந்த நூலில் சிறப்பு திருமால், சிவன் மற்றும் பிரம்மன் ஆகிய மூன்று நபர்களையும் பற்றி கடவுள் வாழ்த்தாக பாடியுள்ளார்.
இனியவை நாற்பது வேறு பெயர்கள்:
- இனிய நாற்பது
- இனிது நாற்பது
- இனியது நாற்பது
இன்னா நாற்பது நூல் குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |