இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!

Advertisement

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா..! | Iranthavargal Kanavil Kandal

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? (Iranthavargal Kanavil Kandal Enna Palan) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம்மிடம் நெருக்கி பழகியவர்கள், நமக்கு மிகவும் பிடித்தவர்கள், நம் உறவினர்கள், நமது நண்பர்கள் யாராவது நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இறந்து விட்டால் சில சமயங்களில் நமது கனவில் வருவதுண்டு. இவ்வாறு இறந்தவர்கள் நமது கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க..

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா

  1. 1 இறந்தவர்கள் கனவில் வந்தால் அதாவது இறந்த அப்பா கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையை விரைவில் முடிப்பீர்கள் என்று பொருள்.
  2. 2 இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தமாகும்.
  3. 3 பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியவர்கள் மரணம் அடைந்து தங்கள் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசிர்வதிப்பது போன்று பலன் தருவதாகும்.
  4. 4 நமக்கு வேண்டப்பட்டவர் யாராவது இறந்து விட்டது போல் கனவு கண்டால் அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.
  5. 5 இறந்தவர்களின் சடலங்களை தங்கள் கனவில் கண்டால் தங்கள் வீட்டில் எதாவது சுபநிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தமாகும்.
  6. 6 இறந்து போனவர்களை சுமந்து தூக்கி செல்வது போல் கனவு கண்டால் நமக்கு நன்மைகள் வந்துச் சேரும் என்று அர்த்தமாகும்.
  7. 7 இறந்தவர்கள் தங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.
  8. 8 நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.
  9. 9 இறந்தவர்கள் தங்களுடன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்புகள் ஏற்படும்.
  10. 10 இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.
பல்லி விழும் பலன்..
  1.  இறந்தவர்கள் தங்களுக்கு உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள்  தடை விலகி சுபமாக நடக்கும். வழக்கு நடந்து கொண்டிருந்தால் அது தங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  2. 12 இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. அதே போல் அவர்களுக்கான பித்ரு காரியங்களை தவறாமல் மற்றும் குறை இல்லாமல் செய்ய வேண்டும்.
  3. 13 இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
  4. 14 குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.
  5. 15 இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
  6. 16 இறந்தவர்கள் கனவில் வந்து தொடர்ந்து தங்களுடைய பெயரை அழைத்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
  7. 17 இறந்து போன தாய் தந்தை அடிக்கடி நமது கனவில் வந்தால் நமக்கு வர இருக்கும் ஆபத்துகளை அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று அர்த்தமாகும்.
  8. 18 துர்மரணம் அடைந்தவர்கள் தங்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும் மற்றும் உடல் நலம் குறையலாம், விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவுகள் உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.
  9. 19 இயற்கை மரணமடைந்தவர்கள் நம் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  10. 20 தேவையில்லாத கனவுகள் வருவதை தவிர்க்க குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
  11. 21 இறந்தவர்கள் கனவில் பேசினால் அதாவது தங்களுக்கு தெரிந்தவறார்கள் அல்லது தங்களுக்கு நெருக்கமானவரக்ள் இறந்து அவர்கள் தங்கள் கனவில் பேசினால். தங்களுக்கு ஏற்படும் ஏதவது ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களுக்கு உதவியாக இருக்கப்போகிறார்கள் என்று அர்த்தமாகும்.
காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement