Jallikattu Rules in Tamil | ஜல்லிக்கட்டு விதிமுறைகள்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ஓவ்வொரு ஊரிலிருந்தும் நிறைய மாடுகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள். இது தமிழர்களின் பாரம்பரிய மற்றும் வீரம் பொருந்திய விளையாட்டாகும். தமிழ்நாடில் ஜல்லிக்கட்டை, சல்லிக்கட்டு, ஏறு தழுவுடல், மற்றும் மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படும், இது பாரம்பரிய காளைகளை அடக்கும் வீரம் பொருந்திய நிகழ்வாகும். ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் கிராமப்புற கலாச்சாரத்தின் அடிப்படைப் பகுதியாகும்.
ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக இளைஞர்கள் தங்கள் துணிச்சலையும் திறமையையும் வெளிப்படுத்த ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தில் மதிக்கப்படும் உயிரினங்களான மக்களுக்கும் காளைகளுக்கும் இடையே உள்ள உறவை இது மதிக்கிறது. இந்த விளையாட்டை விளையாட சில விதிமுறைகள் உள்ளது. இந்த போட்டிக்கான விதிமுறைகளை தமிழக அரசு இடைக்காலமாக வெளியிட்டது.
இந்த பதிவில் நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டி விதிகள்/ Jallitkattu Rules in Tamil என்பதை தெளிவாக கொடுத்துள்ளோம்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களுக்கான விதிமுறைகள்
நீங்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக் கட்டு போட்டியை நடத்துவதற்கு, ஒரு நபர் அல்லது குழு முதலில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் முறையான கோரிக்கையை அளிக்க வேண்டும்.
- மனுவில் போட்டியின் வகைகள் மற்றும் நிபந்தனைகளை கோடிட்டுக் காட்ட வேண்டும்.
- போட்டியில் அனுமதிக்கப்படும் காளைகள், துன்புறுத்தப்படமால் இருக்கின்றதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- விலங்குகள் வதை சட்டம் 2017ன் கீழ் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களுடன் அனைத்து ஜல்லிக் கட்டு போட்டி நடக்க வேண்டும்.
- போட்டி ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ படம் இருக்க வேண்டும்.
- அரசு ஆணையிட்ட இடத்தில் தான் போட்டியானது நடக்கவேண்டும்.
ஜல்லிக்கட்டு காளை வைத்திருப்பவர்களின் விதிமுறைகள்
- போட்டி தொடங்குவதற்குமுன் காளைகளுக்கு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்யவேண்டும்.
- ஏனென்றால் சிலர் போதைப்பொருள் அல்லது எரிச்சலூட்டும் ஏதாவது பொருட்களை கொடுக்க வாய்ப்புள்ளது.
- மைதானத்தில் காளையுடன் இருவர் மட்டுமே செல்ல முடியும்.
- போட்டிக்கு முன் காளைகளுக்கு குறைந்தது 20 நிமிடம் ஓய்வு தர வேண்டும்.
- அதற்கான ஆகாரம், குடிநீர் தேவையான அளவு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
ஜல்லிக்கட்டு மாடுபுடி வீரர்களுக்கான விதிமுறைகள்
- ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மருத்துவ சோதனைகள் நடத்தப்படும், அதன் பிறகு அவர்கள் களத்தில் இறங்குவார்கள்.
- வாடிவாசல் வழியே தான் காளைகள் சீறி பாயும் அப்பொழுது வீரர்கள் முன்னே நிற்க அனுமதி இல்லை.
- வழியை மறித்து நின்றாள் அவர்கள் வெளியேறிடுவார்கள்.
- காளைகளை கையாளும்போது வால், கொம்பு, மூக்கனாங்கயிறு போன்றவற்றை பிடிக்கக்கூடாது.
- மாடுகளின் கால்களையும் பிடிக்கக்கூடாது.
- வெறும் காளைகளின் திமிலை பிடித்தே அதனை அடக்கவேண்டும்.
- கொடுக்கப்பட்டுள்ள எல்லைவரை யார் ஒருவர் காளைகளின் திமிலை பிடித்திருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.
- அப்படி யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளையே வெற்றியாளர்.
யார் ஒருவர் விதிமுறைகளை பின்பற்றி விளையாடி காளைகளை அடக்குகின்றாரோ அவரே வெற்றியாளர்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |