Jio vs Vodafone Idea 249 Plan Details in Tamil
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் Jio பயனர்களாக இருக்கலாம். அதற்கு முக்கிய காரணம், Jio நிறுவனம் மலிவான விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கி இந்திய மக்களை கவர்ந்துள்ளது. இருந்தாலும் இந்த நெட்வொர்க் மட்டும் தான் நல்ல சலுகைகளை வழங்குகின்றன என்று சொல்லமுடியாது. ஜியோவை விட அதிக நன்மை தரக்கூடிய நெட்வொர்க்குகள் இந்தியாவில் உள்ளது. அவைகளில் ஒன்று தான் Vodafone Idea நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. இன்று நாம் இந்த இரண்டு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா இரண்டும் தங்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது. இதன் விலை ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் நன்மைகள் முற்றிலும் வேறுபட்டவை ஆகும். சரி வாங்க அதனை இப்பொழுது படித்தறியலாம்.
ஜியோவின் ரூ.249 திட்டம் – Jio 249 Plan Details in Tamil:
ஜியோ நிறுவனத்தின் ரூ.249 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம், வேலிடிட்டி 23 நாட்கள் வரை கிடைக்கும்.
அதனுடன் இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறமுடியும்.
23 நாட்களின் படி, இந்த திட்டத்தில் மொத்தம் 46 GB டேட்டா கிடைக்கும்.
தினசரி தரவு ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் @64 Kbps ஆக இருக்கும்.
இது தவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS ஆகியவை அடங்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
வோடபோன் ஐடியாவின் ரூ 249 திட்டம்:
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 திட்டத்தில், பயனர்களுக்கு 21 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறுகிறார்கள்.
21 நாட்களின் படி, இந்த திட்டத்தில் மொத்தம் 31.5 GB டேட்டா கிடைக்கும்.
இது தவிர, இந்த திட்டத்தில் வரம்பற்ற அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
இரண்டு நிறுவனங்களின் நன்மைகளை அறிந்த பிறகு, ஜியோ நிறுவனம் Vi ஐ விட சிறந்த பலன்களை ரூ.249 விலையில் வழங்குகிறது என்பது நன்றாக புரிகிறது.
JIO வில் தொடர்ந்து அதிரடி ஆஃபர்களை பயனர்களுக்கு அறிவித்துக்கொண்டே வருகிறது
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |