கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal Kanavu Palangal in Tamil

Advertisement

கடலை கனவில் கண்டால் என்ன பலன் | Kadal Kanavil Vanthal

ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் உங்களுடைய ஆழ்ந்த கனவில் கடல் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். நாம் உறக்கத்தில்தூங்கும் போது நமக்கு வரும் ஒவ்வொரு கனவுகளுக்குமே ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது.

சிலருக்கு கடவுள் பற்றிய கனவுகள், இயற்கை பற்றிய கனவுகள், தாய் தந்தையர் பற்றிய கனவுகள் என்று இது மாதிரியான பல கனவுகள் வருவது இயல்பு. ஆனால் அந்த கனவுல ஒவ்வொன்றும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை தெரிவிக்கின்றன என்று அர்த்தமாகும். அந்த  வகையில் நாம் இந்த பதிவில் கடல் பகுதியை கனவில் கண்டால் என்ன பலன் என்று  தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்

கடல் கனவில் வந்தால் என்ன பலன்:

தொழில் செய்பவர்கள் உங்களுடைய ஆழ்ந்த கனவில் கடலை கண்டால் உங்களுடைய பணியும் மிகப்பெரிய வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கும் என்பதை குறிக்கிறது.

தெளிவான கடல் நீரை கனவில் கண்டால் என்ன பலன்:

கனவில் தெளிவான கடல் நீரை கண்டால் வாழ்க்கையில் மோசமான சூழல் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

கடல் நீர் கலங்கலாக இருப்பது போன்று கண்டால்:

கனவில் உங்களுக்கு கடல் நீர் கலங்கலாக இருப்பது போன்று வந்தால் ஒரு சில ஆபத்துகள் நேரப்போகிறது கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கடல் அமைதியாக இருப்பது போன்று கண்டால் என்ன பலன்:

கனவில் கடல் அமைதி நிலையில் இருப்பது போன்று கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய சில பிரச்சனைகள் கூடிய விரைவில் சுமூகமாக முடியப்போகிறது என்பதை குறிக்கிறது.

உயர்ந்த அலை ஏற்படுவது போல் கனவு கண்டால்:

உயரமான அலை ஏற்படுவதுபோல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் மிகப்பெரிய ஒரு ஆபத்திலிருந்து விரைவில் விடுபடுவீர்கள் என்பதை குறிக்கிறது.

இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

கடல் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் கடலில் பயணம் செய்வது போல் கண்டால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.

கடலில் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

உங்களுடைய ஆழ்ந்த கனவில் நீங்கள் கடலில் நீந்துவது போல் கண்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைய போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே உணர்த்துகிறது. நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் உங்களை அறியாமலையே நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடலில் சிக்குவது போல் கண்டால்:

நீங்கள் கடலில் சிக்கி தவிப்பது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

கடலில் நீந்தும் பொழுது நீல வானத்தை பார்த்துக் கொண்டே நீங்கள் நீந்துவது போல கனவு கண்டால் உங்களுடைய காதல் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

ஆழத்தில் நீந்தி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

நீங்கள் கடலில் ஆழத்தில் நீந்தி செல்வது போல் கனவு கண்டால் நெருப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

கடலில் நடப்பது போன்று கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் அமைதி நிறைந்துள்ள கடலில் நீங்கள் நடப்பது போன்று கனவு கண்டால் உங்களுடைய தற்போதைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விலகி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை உணர்த்துகிறது.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

கடலில் அசையாமல் நிற்பது போல் கண்டால்:

நீங்கள் கடலில் அசையாமல் நிற்பது போல கனவு கண்டால் விரைவில் உங்கள் அருகில் இருப்பவர் ஒருவருக்கு துரதிஷ்டம் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கிறது.

கடல் அலை உங்கள் காலில் சேர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் உங்கள் காலடியில் கடல் அலைகள் வந்து சேர்வது போல கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரபலமாக மாறப் போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement