குறில் நெடில் வார்த்தைகள் | Kuril Nedil Eluthukkal in Tamil

Advertisement

குறில் நெடில் எழுத்துக்கள் | Kuril Nedil Words in Tamil | Kuril Nedil 50 Words in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் குறில் நெடில் வார்த்தைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக இருக்கும். இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்களுக்கு புரியும் வகையில் நாம் தான் விளையாட்டு மூலம் எடுத்துரைக்க வேண்டும். இந்த பதிவில் குறில் நெடில் வார்த்தைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

குறில் நெடில் சொற்கள் pdf

மரபு சொற்கள்

குறில் என்றால் என்ன:

ஏதேனும் ஒரு எழுத்தினை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொண்டால் அந்த எழுத்துக்கள் குறில் என்று கூறுவார்கள்.

குறில் எ.கா: அ, இ, உ, எ, ஒ

நெடில் என்றால் என்ன:

ஒரே எழுத்து ஒலிப்பதற்கு இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும்.

நெடில் எ.கா: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள 

குறில் நெடில் வார்த்தைகள் | குறில் நெடில் 50 வார்த்தைகள்:

குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்
அடை  ஆடை 
அசை  ஆசை 
அலை  ஆலை 
அறு  ஆறு 
அவி  ஆவி 
அரம்  ஆரம் 
அவல்  ஆவல் 
அப்பம்  ஆப்பம் 
உண்  ஊண் 
என்  ஏன் 
எடு  ஏடு 
கவி  காவி 
நரை  நாரை 
குண்டு  கூண்டு 
முட்டை  மூட்டை 
குடு  கூடு 
சட்டை  சாட்டை 
பனை  பானை 
படல்  பாடல் 
தடை  தாடை 
வடை  வாடை 
தனம்  தானம் 
செய்  சேய் 
மடு  மாடு 
வட்டம்  வாட்டம் 
வலி  வாலி 
பலம்  பாலம்
துக்கம்  தூக்கம் 
திட்டு  தீட்டு 
வெட்டு  வேட்டு 

 

💥குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்💥
குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்
கரம்  காரம் 
படம்  பாடம் 
மடம்  மாடம் 
சதம்  சாதம் 
மதம்  மாதம் 
மனம்  மானம் 
பதம்  பாதம் 
கல்  கால் 
பல்  பால் 
நகம்  நாகம் 
வனம்  வானம் 
குடை  கூடை 
மலை  மாலை 
நிலம்  நீலம் 
தொடு  தோடு 
கடை  காடை 
கொடு  கோடு 
பட்டு  பாட்டு 
முடி  மூடி 
சொம்பு  சோம்பு 
வரம்  வாரம் 

 

குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்
வசி வாசி
அடி ஆடி
அணி ஆணி
தடி தாடி
படி பாடி
விதி வீதி
மிதி மீதி
நிதி நீதி
நிலம் நீலம்
குடி கூடி

 

குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்
படு பாடு
நடு நாடு
விடு வீடு
சுடு சூடு
குடம் கூடம்
புட்டு பூட்டு
பட்டு பாட்டு

 

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement