மகாத்மா காந்தி பேச்சு போட்டி கட்டுரை | Mahatma Gandhi Speech in Tamil
Mahatma Gandhi Speech in Tamil: அகிம்சை மூலமாக நாட்டை வென்று நம் நாட்டை மீட்டு கொடுத்த மகாத்மா காந்தியின் உண்மையான பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. அக்டோபர் 2 குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தி மிகப்பெரிய மற்றும் சிறந்த தேசபக்தர். காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். இவரது தந்தை பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும்.
Gandhi Jayanti Speech in Tamil: இவரது மனைவியின் பெயர் கஸ்தூரிபாய் 13-ம் வயதில் மகாத்மா காந்திக்கு திருமணமானது. இவருக்கு மொத்தம் 4 ஆன் பிள்ளைகள். அவர்களது பெயர் ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். தனது பள்ளிப்படிப்பை 18 வயதில் முடித்துவிட்டு 19-ம் வயதில் பாரிஸ்டர் (Barrister) எனப்படும் வழக்கரிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். பின் அவர் பம்பாயில் சிறிது காலம் வழக்கறிகராக பணியாற்றினார்.
Mahatma Gandhi Speech in Tamil – காந்தியின் அரப்போராட்டங்கள்:
- பம்பாயில் பணிபுரிந்த காந்தியின் வழக்கறிஞர் வேலை சரியாக அமையாததால் 1893-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய சென்றார். தென்னாப்பிரிக்காவில் இன்பாகுபாடும் நிறவெறியும் அதிகமாக இருந்தது.
- தென்னாபிரிக்க நீதிமன்றத்தில் காந்தி வழக்கறிஞராக வாதாடும்போது கறுப்பின மக்கள் மற்றும் இந்தியர்கள் தலைப்பாகை அணியக்கூடாது என்ற சட்டம் அங்கு இருந்தது. மேலும் ரயில்களில் பயணம் செய்யும் பொழுது கறுப்பின மக்கள் மற்றும் இந்தியர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்ய கூடாது என்ற சட்டமும் இருந்தது. இவையெல்லாம் தான் காந்தி ஒரு விடுதலை போராட்ட வீரராக உருவாக காரணமாக இருந்தது.
- தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கொடுமைகளை கருத்தில் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டு தருவதற்காக 1894-ம் ஆண்டு உருவானதே இந்த இந்திய காங்கிரஸ் கட்சி.
- இந்திய தேசிய காங்கிரசில் 1921-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கட்சியின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பாடம் புகட்டினார். இந்தியாவில் இருந்துகொண்டே தனது போராட்டங்கள் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தை திணறடித்த பெருமைக்கு உரியவர் மகாத்மா காந்தி அவர்கள்.
Gandhi Jayanti Speech in Tamil – ஒத்துழையாமை இயக்கம்:
- காந்திஜியின் அரவழிப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம் ஒத்துழையாமை இயக்கம். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே இங்கிலாந்தில் சொல்லப்படும் எந்த ஒரு கூற்றுக்கும் செவிசாய்க்க கூடாது என்பதே ஆகும்.
- பிரிட்டிஷ் அரசில் விற்கப்படும் பொருட்கள் எதையும் வாங்க கூடாது, உபயோகப்படுத்தக்கூடாது, நீதிமன்றத்திற்கு எந்த வழக்கறிஞரும் செல்ல கூடாது என்பதே இந்த ஒத்துழையாமை இயக்கம் ஆகும்.
- அதனால் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இருந்த அந்த நாடு பொருளாதார வளர்ச்சியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. காந்திஜியின் புத்திசாலித்தனத்தை கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆச்சரியத்திற்கு உள்ளானது.
மகாத்மா காந்தி பேச்சு போட்டி- உப்பு சத்தியாகிரகம்:
- மகாத்மாவின் அடுத்த முக்கியமான போராட்டம் தண்டியாத்திரை. இந்த போராட்டத்தின் முக்கிய காரணம் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் உப்புக்கு வரி விதித்தது. அதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் உப்பு சத்தியாகிரகம் ஆகும்.
- 1930-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அகமதாபாத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு மக்கள் ஆதரவுடன் 23 நாள் நடைப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள கடல் நீரில் உப்பு காய்ச்சி அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உப்பை விநியோகம் செய்தார்.
- இதனால் அங்குள்ள அனைத்து மக்கள் மற்றும் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்திஜியின் இந்த அறப்போராட்டத்திற்கு பிறகே பிரிட்டிஷ் அரசு உப்பிற்கு விதிக்கப்பட்ட வரியை திரும்ப பெற்றது.
Mahatma Gandhi Speech in Tamil – வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
- 1942-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து “ஆகஸ்ட் புரட்சி” என்ற பெயரில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த புரட்சியில் காந்தி அவர்கள் இந்தியர்களிடம் இந்நாட்டை கொடுத்துவிட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்று எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திரத்தை பெற்று பிரிட்டிஷ் அரசாங்கத்தை இந்த நாட்டை விட்டு வெளியேற செய்தார்.
- இந்தியா விடுதலை அடைந்த பிறகு முகமது அலி ஜின்னா என்பவரின் தலைமையில் முஸ்லீம்களுக்கு தனி நாடு கோரப்பட்டது. அதன் விளைவாகவே பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. அரும்பாடு பட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தில் பாகிஸ்தான் பிரச்சனை மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
Gandhi Jayanti Speech in Tamil – காந்தி மறைவு – மகாத்மா காந்தி:
- 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் தில்லியில் வைத்து நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். அறவழியில் போராட கற்றுக்கொடுத்த காந்தி அவர்களின் உயிர் ஒரு துப்பாக்கி குண்டால் பறிபோனது. எவ்வளவு வீரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து மறைந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு தலைவர் காந்திஜி அவர்களே ஆவர்.
- இவர் மறைந்த நாளான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- அவர்களது இந்த தியாகத்தை போற்றும் விதமாக தான் இவரது பிறந்தநாள் அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி எனும் பெயரில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்க்கைக்கு பயன்படும் ரூபாய் நோட்டுகளில் இன்றும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் நம் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்கள். இவரது இந்த கொள்கை இன்று உள்ள இளைஞர்களுக்கு மட்டும் அல்ல வருங்கால சந்ததிகளுக்கும் பயன்படும்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |