சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்முடைய முன்னோர்களின் காலத்தில் சுற்றுசூழல் பாதிப்படையாது. ஏனென்றால் அந்த காலத்தில் எல்லாம் வாகனங்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் 5 பேர் இருந்தாலும் அவர்கள் எல்லாரிடமும் வாகனங்கள் இருக்கிறது. இதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது. நாம் மற்றும் நம் சந்ததி ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது நம் சுற்று சூழல் ஆகும்.
அப்படிப்பட்ட இயற்கையை பாதுகாப்பது பற்றியும், பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுற்று சூழலை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை கட்டுரை வடிவில் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம் வாங்க.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை in Tamil:
முன்னுரை:
சுற்றுசூழல் என்பது இந்த பூமியை சுற்றியுள்ள இயற்கை மற்றும் செயற்கை பொருட்களின் ஒரு தொகுப்பே ஆகும். இப்பொழுது இருக்கும் அறிவியல் வளர்ச்சியில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.
Environment Composition in Tamil – சுற்று சூழல் மாசடைவதற்கான முக்கிய காரணிகள்:
- நில மாசு
- நீர் மாசு
- ஒலி மாசு
நில மாசு:
- நாம் இந்த பூமியில் வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தாவரங்களும், விலங்குகளும் இந்த நிலப்பரப்பில் வாழ்வது அவசியம். பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதாலும், புதைப்பதாலும் நிலம் மாசடைகிறது.
- நாம் தயாரிக்கும் ரசாயன பொருட்களிள் இருந்து வெளிவரும் ரசாயன கழிவுகள் மற்றும் தாவரங்களில் கலக்கப்படும் யூரியா, பூச்சிக்கொல்லிகள் போன்ற செயற்கை உரங்கள் நிலத்தின் தன்மையை மாசுபடுத்துவது மட்டும் இன்றி அதை உண்ணும் மனிதர்களுக்கும் பல நோய்கள் உருவாகிறது.
நீர் மாசு:
- இப்புவியில் நீரின் அளவு 1.386 billion km³ அதில் 97.5% உப்பு நீர் மற்றும் 2.5% நிலத்தடி நீர் ஆகும். நீர் மாசுபடுவதற்கான முக்கிய காரணம் நீரை சேமிப்பதற்கான வடிகால் வசதி இல்லாமல் இருப்பதே ஆகும். தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுகள் குளம், குட்டை, ஏறி போன்ற நீர் நிலைகளில் கலப்பதனாலும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரில் கிருமி நாசினிகளை பயன்படுத்துவதாலும் நீர் மாசு அடைகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை
ஒலி மாசு:
- பெரும்பாலான ஒலி மாசு மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், பேருந்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகள், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் இயந்திரங்கள், பொழுதுபோக்கு இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள் பேசும்போது வெளிப்படும் ஒளியென இப்புவி பல ஒலிகளால் மாசு கொண்டு இருக்கிறது.
- சூரியனிடமிருந்து தேவையான ஆற்றலை பூமிபெறுகிறது. கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வாயு மண்டலத்தில் பரவியுள்ளன.
- இந்த வாயுக்களை கிரீன் – ஹவுஸ் வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் வெளிப்படும் வாயுக்களை பூமி பாதி அளவு எடுத்துக்கொள்கிறது.
புவி வெப்பமயமாதல்:
- இப்பொழுதெல்லாம் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ப மழை பொழிவதில்லை அதற்கான முக்கிய காரணம் மாறிவரும் வெப்பநிலையை ஆகும்.
- வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் நில வறட்சி, கடல் மட்டம் அதிகரிப்பது, வெள்ளம், பனிக்கட்டி உருகுவது அதிகரித்துள்ளது. அதனால் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு காரணமாக உள்ளது.
- அதிக வெப்பத்தின் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்தால் நில அரிப்பு, வெள்ள அபாயம் மற்றும் நீர் நிலைகள் உவர்ப்பாவதற்கான அபாயம் உள்ளது.
ஒசோன் படலம்:
- ஒசோன் படலம் விரிசல் அடைவதற்கான முக்கிய காரணம் காற்றில் வெளிப்படும் குளோரோஃபுளோரோ கார்பன், மீத்தேன் ஆகும். இந்த வாயு குளிர்சாதனப்பெட்டி மற்றும் Automatic vending machines போன்ற இயந்திரங்களில் இருந்து வெளிப்படுகிறது.
- புற ஊதா கதிர்களில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஒசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுவதால் தோல் புற்று நோய் போன்ற நோய்கள் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.
- சுற்று சூழல் மாசடைவதற்கு மனிதர்களாகிய நாம் தான் முக்கிய காரணம். ஆதலால் இந்த பூமி மாசடையாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதோ அதை பயன்படுத்தும் நாம் சுற்று சூழல் மாசடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நீர் நிலைகள் ஆகியவற்றை நாம் பார்த்துக்கொண்டால் இயற்கை நம்மையும் நம் வருங்கால சந்ததியையும் பார்த்துக்கொள்ளும்.
- மேலும் பல நாடுகள் குளோரோஃபுளோரோ கார்பன், மீத்தேன் போன்ற வாயுக்கள் பயன்படுத்துவதை குறைத்துள்ளன.
- செப்டம்பர் 16-இல் சர்வதேச ஓசோன் தினத்தையும், ஜூலை 28-இல் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையும் மற்றும் மார்ச் 22-இல் உலக நீர் தினத்தையும் சர்வதேச அமைப்புகள் கொண்டாடுகின்றன.
முடிவுரை:
- வளர்ந்து வரும் சந்ததியிடம் மற்றும் மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியத்தை எடுத்துரைப்பது மிக அவசியம்.
- நாம் செய்யும் எந்த ஒரு செயலும் சுற்று சூழலை பாதிக்காமல் செய்து நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைப்பது நம் அனைவரின் கடமை என்பதை நினைவில் வைத்து கொள்வது அவசியம்.
- மரம் நடுவோம்! மழை பெறுவோம்! மாசு இல்லா சுற்று சூழலை உருவாக்குவோம்!
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |