மகோகனி மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா.?

mahogany tree in tamil

மகோகனி மரம் | Mahogany Tree in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மகோகனி மரத்தின் பயன்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே மரங்கள் என்றாலே வீடு கட்டுவதற்கும், அதனுடைய பழங்கள் மருத்துவக்குறிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. ஆனால்  மகோகனி மரமானது தேக்கு மரத்தை விட அதிக அளவு பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுக்கின்றன. இந்த மரங்கள் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாகவும் இருக்கிறது. மேலும் இந்த மகோகனி மரத்தின் பயன்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தேவதாரு மரம் பற்றி தெரிந்து கொள்வோமா..?

மகோகனி மரம் பயன்கள்:

இந்த மகோகனி மரங்கள் Swietenia Macrophylla என்ற ஒருவகை மரமாகும். இந்த மகோகனி மரம் மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாக கொண்டுள்ளது. இந்த மரத்தின் வெளிப்புறம் தோற்றம் மாமரத்தை போலவே இருக்கும். இவை மீலியேசி  என்னும் தாவரவியல் குடும்பத்தை சேர்ந்தவையாகும்.

நம் ஒரு சில இடங்களில் அதிகமான மரங்களை பார்த்து ரசித்திருப்போம் அந்தவகையில் இந்த மகோகனி மரமானது 100 அடி  உயரத்திற்கு மேல் வளர கூடிய மரமாகும்.

மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட இந்த மகோகனி மரம் நம் நாட்டில் வந்து 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மகோகனி மரமானது மென்மையாகவும், வலிமையாகவும் இருக்கும்.

இந்த மகோகனி மரமானது குறைந்த கிளைகளை கொண்டிருந்தாலும் இவை நெருக்கமாகவே வளரக்கூடியதாகும். மகோகனி மரமானது அமெரிக்கா மாளிகைகளில் வெகுவாக பயன்படுத்தி வருகின்றன.

தேக்கு மரத்திற்கு இணையாக இருப்பதின்னால் இவை அதிகமான விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இந்த மரம் மற்றும் பயனுள்ளதாக இல்லாமல் இதனுடைய காய், கனிகள், விதைகள்,  இலைகள் போன்றவை அனைத்தும் பல மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மகோகனி என்று சொல்லப்படும் இந்த மரமானது வீடு கட்டுவதற்கும், வீட்டில் ஜன்னல், நிலைக்கதவு, பென்சில் செய்வதற்கும், இசைக்கருவிகள் செய்வதற்கும்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இவை கப்பல் கட்டுமான பணிகளுக்கு அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த மகோகனி மரமானது வீட்டிற்கு தேவைப்படும் நாற்காலி, மேசை போன்ற மர ஜாமான்கள்  செய்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மரங்கள் அதிகமாக நிழல் தராமல் இருப்பதால் இவை விவசாயிகள் வரப்பு ஓரங்களில் வைப்பதற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி மாடி வீடுகளிலில்  வசிப்பவர்களுக்கு காற்றை அதிகமாக வடிகட்டி தருவதற்கும் உதவியாக இருக்கிறது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com