மரபுத்தொடர்கள் | Marabu Thodargal

Marabu Thodargal

தமிழ் மரபுத்தொடர்கள் | Marabu Thodargal Meaning | மரபுத்தொடர்கள்

வணக்கம் நண்பர்களே.. இந்த பதிவில் மரபு தொடர்கள் என்றால் என்ன? மரபு சொற்களின் அர்த்தத்தினையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பொதுவாக வழங்கும் மரபுத் தொடர்கள், சமூகத்திற்கு சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல மரபுத்தொடர்கள் தமிழில் காணப்படுகிறன. வாங்க இப்போது சில தமிழ் மரபுத்தொடர்களை (marabu thodar) பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

மரபு சொற்கள்

மரபுத்தொடர்கள் என்றால் என்ன?

marabu thodar in tamil: ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேரான பொருளைக் உணர்த்தாமல் வழி வழியாக வழங்கி வரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் (marabu thodargal) எனப்படும்.

மரபுத்தொடர்கள் இணைமொழிகள்:

மரபுத்தொடர்கள் | marabu thodar tamil அதன் பொருள் 
ஆழம் பார்த்தல் ஒருவரது அறிவு செல்வம் முதலியவற்றை அளவிடுவது
ஆறப்போடுதல் பிற்போடுதல், காலம் தாழ்த்துதல்
கண் திறத்தல் அறிவு உண்டாதல்
கங்கணங்கட்டுதல் ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல்
கதை வளர்த்தல் பேச்சை விரித்தல்
கை தூக்குதல் துன்பத்திலிருந்து காப்பாற்றுதல்
தலை கவிழ்தல் வெட்கமடைதல்
தட்டிக் கழித்தல் சாக்கு போக்கு சொல்லுதல்
தாளம் போடுதல் பிறரை மகிழ்விக்க அவர் கருத்துப்படி நடத்தல்
நாக்கு புரளுதல் சொன்ன சொல் தவறுதல்

 

நட்டாற்றில் விடல் ஆபத்து வேளையில் கைவிடல்
பூசி மெழுகுதல் குற்றத்தை மறைக்கப் பார்த்தல்
முன்னுக்கு வருதல் உயர்ச்சி அடைதல்
வாயூறுதல் ஆசைப்படுத்தல்
தட்டிக்கொடுத்தல் உற்சாகப்படுத்துதல்
கானல் நீர் கிடைக்காத ஒன்று
கரையேறுதல் துன்பத்திலிருந்து மீளுதல்
பஞ்சாகப் பறத்தல் அலைந்து திரிதல்
அவசரக் குடுக்கை ஆராயாமல் செயல்படுதல், பதற்றக்காரன்
வெட்டிப் பேச்சு வீண் பேச்சு

 

ஆகாயத் தாமரை இல்லாத ஒன்று
பித்தலாட்டம் ஏமாற்று வேலை
முதலைக் கண்ணீர் பொய் அழுகை
குரங்குப் பிடி விடாப்பிடி
இமாலயத் தவறு பெரிய தவறு
அடியடியாக தலைமுறை தலைமுறையாக
அக்கரைப் பச்சை பொய்த் தோற்றம்
அடங்காப் பிடாரி எவர்க்கும் அடங்காதவன் (ள்)
அடாபிடி கொடுஞ்செயல்
அடிதடி, அடிபிடி சண்டை
பருவம் பார்த்தல் தக்க சமயம் பார்த்தல்

 

தமிழ் சொற்கள் பட்டியல்
அண்டப் புரட்டன் பெருந்தீயன்
அரைகுறை முற்றுப்பெறாமை
அரை மனிதன் மதிப்புக் குறைந்தவன்
அல்லும் பகலும் இரவும் பகலும்
அளவளாவுதல் கலந்து பேசுதல்
அள்ளியிறைத்தல் அளவுக்கு மிஞ்சி செலவிடுதல்
அறக்கப்பறக்க விரைந்து செயல்படுதல்
அறிமுகம் தெரிந்த முகம்
அறை கூவுதல் போருக்கு அழைத்தல்
இடங்கெட்ட பாவி சீரழிந்தவன்
நாக்கு நீளுதல் அளவு கடந்து பேசுதல்

 

இடை விடாமல் எப்போதும்
இலைமறைகாய் மறைபொருள்
எள்ளளவும் சிறிதளவும்
ஏட்டுக்குப்போட்டி விதண்டாவாதம்
ஏட்டுச் சுரைக்காய் அனுபவத்தோடு கூடாத கல்வியறிவு
ஏட்டுப் படிப்பு உலகப் பழக்கமில்லாத கல்வியறிவு
ஒரு காலில் நிற்றல் விடாப் பிடியாய் நிற்றல்
ஒரு கை பார்த்தல் வெல்ல முயலுதல்
ஓட்டை கை பெருஞ் செலவாளி
கண்மூடித்தனம் கவனமின்மை
எள்ளி நகையாடுத்தல் இகழ்ந்து பேசுதல், ஏளனம் செய்தல்

 

செவி சாய்த்தல் உடன்படுத்தல், இணங்குதல்
கண் வளர்த்தல் தூங்குதல்
கயிறு திரிதல் பொய் செய்தியை உண்டாக்கி விடுதல்
கருவறுதல் நிர் மூலமாக்குதல்
கரை கண்டவன் நன்கு பழகி அறிந்தவன்
கரைத்துக் குடித்தல் முற்றும் கற்றறிதல்
குழையடித்தல் ஒருவரை வசப்படுதல்
கை கொடுத்தல் உதவி செய்தல்
திண்டாட்டம் மனக்கலக்கம்
தோள் கொடுத்தல் உதவி செய்தல்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil