திருமணமானவர்களுக்கு பால் பழம் தருவது ஏன் தெரியுமா?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். திருமணமானவர்களுக்கு பால் பழம் தருவது ஏன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நமது முன்னோர்கள் சில விஷயங்களை இப்பொழுது நாம் பின்பற்றி கொண்டு தான் வருகிறோம். அவற்றில் ஒன்று தான் திருமணம் நடந்து முடிந்த பிறகு பாலும், பலமும் தருவாங்க அது ஏன் தெரியுமா? இந்த வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. சரி வாங்க இந்த வழக்கம் ஏன் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் தர்றாங்க தெரியுமா?
ஒரு பெண் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுவிட்டு தான் மணம் முடிக்கும் ஆணின் குடும்பத்துக்கு புதுவிதமான சூழலில் வந்து வாழ வேண்டிய சூழலில் இருக்கிறாள்.
கணவன் வீட்டாரின் சூழலில் சொல்லப்படும் சில வார்த்தைகள் மற்றும் உறவினர்களின் கிண்டல்கள் ஆகியவற்ளைக் கேட்டு, புது சூழலில் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு.
ஒரு பசு மாடானது விஷத்தையே சாப்பிட்டாலும் கூட தான் தருகின்ற பாலில் துளி கூட எப்படி விஷம் இல்லாமல் சுத்தமா இருக்குமோ அது போன்று கணவன் வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்குத் தீமையே நேர்ந்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை நீ ஒரு போதும் கொட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தான் பால் கொடுக்கப்பகிறது.
அதேபோலத் தான் வாழைப்பழம் கொடுப்பதற்குப் ஒரு சிறு பின்னணி உண்டு. வாழைப்பழத்தில் எப்படி அடுத்த சந்ததியை உண்டாக்குவதற்கான விதை இல்லாமல் இருந்தாலும் மூலமரத்தைச் சார்ந்து அது அடுத்த தலைமுறை வாழைக் கன்றைத் தருகிறதோ அதுபோல கணவனைச் சார்ந்து வம்ச விருத்தியைத் தர வேண்டும் என்பதைக் குறிப்பது தான் இந்த வாழைப்பழம்.
பெண்ணுக்கு பாலும் பழமும் கொடுக்கப்படுவதற்கான காரணங்கள் தெரிந்துவிட்டது. மணமகனுக்கும் பால், பழம் கொடுக்கப்படுவது எதனால் என்ற சந்தேகம் வரத்தான் செய்யும். அதற்கும் சில காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
ஆணே இந்த பாலில் எப்படி தயிரும் நெய்யும் அடங்கியிருக்கிறதோ அதேபோல இந்த பெண்ணுக்குள்ளும் அறிவும் ஆற்றலும் நிரம்பியிருக்கிறது. அதை பக்குவமாக உறையிட்டு, பக்குவமாகக் கடைந்து வெண்ணெய், நெய்யை உருக்கி எடுக்க வேண்டுமே ஒழிய, ஒருபோதும், பாலை கெட வைத்துவிடாதே என்பதை ஆணுக்கு உணர்த்துவதற்காகத் தான் மணமகனுக்கு பால் கொடுக்கப்படுகிறது.
வாழைக்கன்றை எப்படி அதனுடைய தாய் மரத்தின் அடியில் உள்ள நிழலில் இருந்து பக்குவமாக பிரித்து எடுத்து, அதை வேறு இடத்தில் சென்று நடுகிறோமோ அதுபோல, அந்த பெண்ணை அவளுடைய வீட்டில் இருந்து பிரித்து உன்னுடைய வீட்டில் நடுகின்றோம். அதிலிருந்து பக்குவமாக வளர்த்தெடுத்து உன்னுடைய சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்வது உன்னுடைய பொறுப்பு. அது உன்னுடைய கையில்தான் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காகத் தான் இந்த வாழைப்பழம் மணமகனுக்குக் கொடுக்கப்படுகிறது.
“திருமணத்தில் பால், பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல”
“ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது”
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |