புதன் கோள் பற்றிய சுவாரசியமான தகவல் தமிழில் | Mercury Planet Details in Tamil

Advertisement

புதன் கோள் தமிழ் | Mercury Planet in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் புதன் கோள் பற்றி தெரிந்து கொள்வோம். பள்ளி பருவத்தில் சமூக அறிவியல் பாடத்தில் கோள்களை பற்றி படித்திருப்போம். புவியியல் பிடித்தவர்களுக்கு கோள்களை பற்றி நன்றாக தெரிந்திருக்கும், ஆனால் ஒரு சிலருக்கு நினைவு இருக்காது. கோள்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என மொத்தம் ஒன்பது கோள்கள் உள்ளது. இந்த ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் (Mercury Planet in Tamil) கோளை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

புதன் கோள்:

பெயர் புதன்
சூரியனில் இருந்து தூரம் (சராசரி) 57.91 மில்லியன் கி.மீ
ஆரம் 2,439.7 கி.மீ
தொகுதி 6.083 × 1010 கிமீ 3
நிறை 3.285 × 1023 கிலோ
மேற்பரப்பு பகுதி 74.8 மில்லியன் கிமீ 2
ஈர்ப்பு 3.7 மீ / வி 2
அதிகபட்ச வெப்பநிலை + 840 ° F (+ 449 ° C)
குறைந்தபட்ச வெப்பநிலை – 275 ° F (- 170 ° C)
நாளின் நீளம் 58.646 பூமி நாட்கள்
ஆண்டின் நீளம் 88 பூமி ஆண்டுகள்
நிறம்  Slate Gray

புதன் கோள் பற்றிய தகவல் தமிழில்:

புதன் கொள்

  • Mercury Planet in Tamil: சூரிய குடும்பத்தில் இருக்கும் மிக சிறிய மற்றும் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் புதன். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும் போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும்.
  • பூமியை விட மூன்று மடங்கு பெரிதாக, புதனின் மேற்பரப்பில் இருந்து சூரியனை பார்க்கும் போது தெரிகிறது. சூரிய ஒளியில் இருப்பதால் ஏழு மடங்கு பிரகாசமாகவும் தெரிகிறது. ஆங்கிலத்தில் இதனை Mercury என்று அழைக்கப்படுகிறது. ரோம கடவுளின் தூதுவரான மெர்குரி (Mercury) என்ற பெயரை சூட்டியுள்ளதால் இதனை ஆங்கிலத்தில் மெர்குரி என்று அழைக்கிறார்கள்.
  • புதனுக்கு சந்திரன்கள் மற்றும் மோதிரங்கள் இல்லை. புதனை முதலில் நெருங்கிய விண்கலம் மாரினர் 10, இது புதனின் புறப்பரப்பை 45% வரை படமெடுத்தது. இரண்டாவதாக மெசஞ்சர் விண்கலம் அனுப்பப்பட்டது, இது 30% வரை படமெடுத்தது.

வெப்பநிலை:

Mercury Planet Details in Tamil

  • Mercury Planet in Tamil: இந்த கோளின் மேற்பரப்பு சூடாகவும், குளிராகவும் இருக்கும்.
  • பகலில் 800° பாரன்ஹீட் (430° செல்சியஸ்) வரை அதிகமாக இருக்கும்.
  • இரவில் -290° பாரன்ஹீட் (-180° செல்சியஸ்) ஆகக் குறைந்து இருக்கும். இரவில் வெப்பநிலை குறைவதற்கான காரணம் வெப்பத்தை சேமித்து வைத்து கொள்ள தேவையான வளிமண்டலம் இல்லை என்பதால்.

அளவு மற்றும் தூரம்:

Mercury Planet in Tamil

  • சூரியனிலிருந்து சராசரியாக 36 மில்லியன் மைல்கள் (58 மில்லியன் கிலோமீட்டர்), 0.4 வானியல் அலகுகள் (AU) தொலைவில் புதன் உள்ளது. புதனுக்கு சூரிய ஒளி கிடைப்பதற்கு 3.2 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

சுற்றுப்பாதை சுழற்சி:

Mercury Planet Details in Tamil

  • Mercury Planet in Tamil: இதன் சுற்றுப்பாதை oval வடிவத்தை கொண்டுள்ளது. புதன் 29 மில்லியன் மைல்கள் முதல் 43 மில்லியன் மைல்கள் வரை சூரியனிலிருந்து நீண்டு காணப்படுகிறது. சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும் போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது.
  • இது சூரியனை 88 நாட்களில் சுற்றி வருகிறது. 29 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது. இதன் அச்சு 2 டிகிரி சாய்ந்துள்ளது. செங்குத்தாக சுழல்வதால் மற்ற கோள்களை போல இரண்டு கிரகங்கள் புதன் கோளில் இல்லை.

அமைப்பு:

புதன் கொள்

  • Mercury Planet Details in Tamil: இந்த கோள் மற்ற கிரகங்களை போல கற்களால் ஆனது. இதில் மூன்று அடுக்குகள் உள்ளது. இதன் உலோக மையம் 1,289 மைல் 85% ஆரம் ஆகும். பூமியின் ஷெல்லை போல புதனின் ஷெல்லும் 400 கிலோமீட்டர் தடிமன் உள்ளது.

உருவான விதம்:

  • இந்த கிரகம் வாயு மற்றும் தூசியை இழுத்து, சூரியனுக்கு பக்கத்தில் சுமார் 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது.

மேற்பரப்பு:

Mercury Planet in Tamil

  • Mercury Planet Details in Tamil: இதில் விண்கற்கள் மற்றும் வாள்மீன்கள் மோதிக்கொள்வதால் பல பள்ளங்கள் உள்ளது.
  • மிகப்பெரிய பகுதியான கலோரிஸ் பிளானிட்டியா 1,550 கிலோமீட்டர் விட்டத்தையும் (960 மைல்), ராச்மானினோஃப் 306 கிலோமீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளது. இவை ஆரம்பத்தில் கோள்களின் மோதலால் உருவானவை.

வளிமண்டலம்:

மெல்லிய வெளிப்புற கோளத்தை கொண்டுள்ளது. இதில் வளிமண்டலம் கிடையாது.

  • ஆக்ஸிஜன் (42.0%)
  • சோடியம் (29.0%)
  • ஹைட்ரஜன் (22.0%)
  • ஹீலியம் (6.0%)
  • பொட்டாசியம் (0.5%)
  • மற்றவை (0.5%)

தோற்றம்:

  • Mercury in Tamil: புதன் நமது சூரிய மண்டலத்தின் முதல் கிரகமாகும்.
  • சூரியனில் இருந்து பூமிக்கு சராசரியாக 58 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • புதன் சூரியனை சுற்றும்போது வால்மீன் போல தோற்றம் அளிக்கிறது.
  • கிரகத்திலிருந்து பார்க்கும்போது புதன் மில்லியன் கணக்கான கிலோமீட்டர் தொலைவில் பரந்து மங்களான நிறத்தில் பளபளப்பாக தோற்றம் அளிக்கிறது.
கோள்கள் பற்றிய தகவல்கள் தமிழில்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement