உலக அளவில் அதிகமாக Subscribers கொண்ட Youtube சேனல்ஸ்..! | Most Subscribed Youtube Channels in the World in Tamil 

Advertisement

Highest Subscribers on Youtube in World in Tamil 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் அனைவருமே Smart Phone பயன்படுத்துகின்றோம். அந்த வகையில் நமது Smart போனில் அதிகமாக பயன்படுத்தும் இணையதளத்தில் Youtube-ம் ஒன்று. இது தனது தாய் நிறுவனமான Google-க்கு அடுத்தபடியாக , இணையத்தில் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த Youtube சேனல்ஸ்களில் அதிக அளவு Subscribers கொண்ட Youtube சேனல்ஸ் பற்றி இன்றைய பதிவில் காணலாம்.

You Tube யில் Copyright சட்டம் பற்றி தெரியுமா

Most Subscribed Youtube Channels :

1. T-Series :

Highest Subscribers on Youtube in World in Tamil

T-Series என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் முதல் இடத்தில் உள்ளது. இதனின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 213 மில்லியன் ஆகும்.

இது 1983 இல் நிறுவப்பட்டது. டி-சீரிஸ் ஒரு இந்திய பதிவு லேபிள் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இது பாலிவுட் ஒலிப்பதிவுகள் மற்றும் இந்திய பாப் இசைக்கு பிரபலமானது.

இந்த Youtube சேனலில் மியூசிக் வீடியோக்கள் மற்றும் திரைப்பட டிரெய்லர்கள் உள்ளன. மேலும் இந்த சேனலின் வீடியோக்கள் ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி மற்றும் ராஜஸ்தானி ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன.

2. Cocomelon – Nursery Rhymes :

Top youtube channels in tamil

Cocomelon – Nursery Rhymes என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 133 மில்லியன் ஆகும்.

இந்த Youtube சேனல் குளியல் பாடலுக்கு (Bath Song) பிரபலமாக உள்ளது. 5 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன்(Views), பாரம்பரிய குழந்தைகளின் பாடல்கள் மற்றும் நர்சரி ரைம்ஸ்களின் 3D அனிமேஷன் வீடியோக்களை Cocomelon வழங்குகிறது.

3. SET India – Sony Entertainment Television India :

Most subscribed youtube channels in tamil

SET India என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல் அதிகம் பார்க்கப்படும் YouTube சேனல்களிலும் மூன்றாவது சேனலாக உள்ளது. இதனுடைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 131 மில்லியன் ஆகும்.

இந்த SET India Youtube சேனல் நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புகிறது.

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி தெரியுமா

4. PewDiePie :

Who has the most subscribers on youtube in tamil

PewDiePie என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சேனலில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 111 மில்லியன் ஆகும்.

இந்த PewDiePie Youtube சேனல் Felix Arvid Ulf Kjellberg என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர் இந்த Youtube சேனலின் மூலம் 28 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார்.

5. MrBeast :

Highest youtube subscribers in world in tamil

MrBeast என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதனின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 94.8 மில்லியன் ஆகும்.

இந்த MrBeast Youtube சேனல் Jimmy Donaldson என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இவர் தனது YouTube சந்தாதாரர்களுக்காக அதிக வைரல் ஸ்டண்ட் செய்துள்ளார். இதில் Netflix இன் ஹிட் தொடரான ​​Squid Game , 456 பேர் கொண்ட தொகுப்பை மீண்டும் உருவாக்கினார்.

6. Kids Diana Show :

Most subscribed youtube channel 2022 in tami

Kids Diana Show என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்ஸ்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனுடைய  சந்தாதாரர்கள் எண்ணிக்கை 93.9 மில்லியன் ஆகும்.

Kids Diana Show என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆங்கில மொழித் தொடராகும். இதில் டயானா என்ற 7 வயது சிறுமியும் அவரது சகோதரர் ரோமாவும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் சுற்றி விளையாடுகிறார்கள் மற்றும் அவர்கள் வழக்கமான குழந்தை விஷயங்களை செய்கிறார்கள்.

இது பெரியவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தி, ஜப்பானிய, ரஷ்ய, ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் போர்த்துகீசியம் ஆகிய மொழிகளில் வீடியோக்கள் டப் செய்யப்படும் அளவுக்கு இந்த சேனல் பிரபலமாகிவிட்டது.

YouTube-ல் 1 மில்லியன் Views-க்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா

7. Like Nastya :

The 10 Most-Subscribed YouTube Channels in the World 2022 in tamil

Like Nastya என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 91 மில்லியன் ஆகும்.

Like Nastya என்ற இந்த Youtube சேனலை நடத்தி  வரும் Nastya’s Anastasia Radzinskaya என்ற 8 வயதான குழந்தை தனது YouTube வீடியோக்கள் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

8. WWE :

The 10 Most-Subscribed YouTube Channels in the World 2022 tamil

WWE என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் எட்டாவது இடத்தில் உள்ளது. இதனின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 87.7 மில்லியன் ஆகும்.

இந்த WWE என்ற Youtube சேனல் மல்யுத்த விளையாட்டு ஜாம்பவான்களின் சிறப்பம்சங்கள் மற்றும் அவர்களின் நேர்காணல்கள் போன்றவற்றை பிரேத்தியோகமாக ஒளிபரப்புகிறது.

9. Zee Music Company :

Most subscribed youtube channel 2022 tamil

Zee Music Company என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனுடைய  சந்தாதாரர்கள் எண்ணிக்கை 83.3 மில்லியன் ஆகும்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு, ஜீ மியூசிக், டி-சீரிஸின் நேரடிப் போட்டியாளராக உள்ளது. இது பாலிவுட் மற்றும் பிரபல இந்திய கலைஞர்களின் ஹிட் பாடல்களை லேபிள் விநியோகம் செய்கிறது.

10. Vlad and Niki :

Highest youtube subscribers in world tamil

Vlad and Niki என்ற Youtube சேனல் உலக அளவில் அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள Youtube சேனல்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. இதனின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 80.9 மில்லியன் ஆகும்.

Vlad and Niki என்ற இந்த Youtube சேனலை நடத்தி வரும் Vladislav Vashketov மற்றும் Nikita Vashketov ஆகியோர் தங்கள் பெற்றோருடன் மியாமியில் வசிக்கின்றனர்.

இவர்கள் 21 வெவ்வேறு YouTube சேனல்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்காக 18 மொழிகளில் வீடியோக்களை உருவாக்குகின்றனர்.

 You Tubers மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement