கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

கடுகு | Mustard in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கடுகு பற்றிய சில அற்புதமான தகவல்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே கடுகு நம் வீட்டில் சமையலில் தாளிப்பதற்காக  அதிகம் பயன்படுத்தி வந்திருப்போம். கடுகு சேர்த்து சமைக்கும் உணவுகள் சுவையாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் பல ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான்  தினமும் சாப்பிடும் உணவில் கடுகுகள் சேர்க்கிறோம். இந்த கடுகுகள் எப்படி உற்பத்தி ஆகிறது, இவை எங்கு அதிகம் விளைகிறது என்று தெரியுமா.? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்துவது கடுகு தானா என்று எப்படி தெரிந்துகொள்வது.?

கடுகு என்றால் என்ன:

கடுகு என்பது கருப்பு நிறத்தில் சிறிதான உருளை வடிவத்தை கொண்டிருக்கும். இவை ஒரு சிறிய வகை தாவரமாகும். இந்த கடுகுகளில் பல வகைகள் உள்ளன. அத்தகைய வகைகள் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு, கருங்கடுகு, வெண்கடுகு போன்றவை உள்ளன.

இந்த கடுகுகள் இந்தியா முழுவதும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. பொதுவாக கடுகு சுவைகள் கிடையாது. அவை சமையலில் தாளிக்கும் பொழுது மட்டும்தான் வாசனையாக இருக்கும். சில நாடுகளில் கடுகை முழுமையாக பயன்படுத்தி வருவார்கள், வெளிநாடுகளில் கடுகை பொடியாக செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வருகிறார்கள்.

கடுகில் நிறைந்துள்ள சத்துக்கள்:

திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களிலும் கடுகு தான் முதல் இடம் பெற்றுள்ளது. மருத்துவத்தில் முதல் இடம் கடுகுக்கு அதிகம் இருப்பதால் எல்லா வகையான குழம்புகளிலும் சேர்க்கப்பட்டு வருகிறது.

கடுகில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை பெரும்பாலும் ஆரோக்கியத்திற்காக பயன்படுகிறது. இவற்றில் நிறைந்திருக்கும் சத்துக்கள் மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,  நார்ச்சத்து, உயர்தர கால்சியம், இரும்பு, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாகவே உள்ளது.

நம் உணவில் சேர்க்கும் கடுகில் எண்ணெய்கள் பிரிக்கப்பட்டு அவையும் உணவில் சேர்க்கப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் காயங்கள், வலிகள் போன்றவற்றிக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு  வருகின்றன.

கடுகு விளையும் மாநிலம்:

கடுகு அதிகமாக விளையும் மாநிலம் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான்  போன்ற வட மாநிலங்களில் அதிகமாக பயிரிடப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement