உலகின் தீரா மர்மங்கள்
உலகின் மர்மங்கள்: இன்றைய நவீன உலகில் மண்ணில் புதைத்த நமது உடலையே மீண்டும் தோண்டி எடுத்து ஆய்வு செய்யும் உலகமாக மாறிவிட்டது. இருந்தாலும் நமது உலகில் பல தீராத மர்மமான விஷயங்கள் இன்றும் உள்ளது. உலகில் சில மர்மமான விஷயங்களுக்கு உடனே விடை கிடைத்துவிடும். சில மர்மங்களுக்கு ஆய்வு செய்தும் விடை கிடைப்பது அரிதாகும். பலரும் அறிந்திராத ரகசிய மர்மமான விஷயங்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொண்டு பலருக்கு நீங்களும் தெரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட உலகின் பல ஆண்டுகளாக தீராத மர்ம விஷயத்தினை இங்கே காணலாம்..!
உலகின் மிக ஆபத்தான இடங்கள் |
உலக மர்மங்கள்
உலக மர்மத்தின் ஓக் தீவு:
கனடா நாட்டின் நோவா ஸ்கோட்டியா என்ற நாட்டின் பக்கத்தில் பல நூற்றாண்டுகளாக மர்மமான தீவு ஒன்று அமைந்துள்ளது. அந்த தீவில் கடற்கொள்ளையனாக இருந்த கேப்டன் வில்லியம்ஸ் உலகில் யாருக்கும் தெரியாத வண்ணம் அதிக விலைக்கு போகக்கூடிய ஒரு பொருளை ஓக் தீவில் மறைத்து வைத்துள்ளதாக மர்ம செய்தி வெளியாகியுள்ளது. அந்த பொருளை கண்டுபிடிக்க ஏராளமான செலவுகள் செய்து, பல மக்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.
தி சேஸ் வால்ட் சுடுகாடு:
சேஸ் வால்ட்டுக்கு நன்கு பிரபலமானவர் பார்படாஸ். இந்த இடத்தில் அமைத்திருக்கக்கூடிய சுடுகாடு நகரும் சவப்பெட்டிகளின் இடமாக மர்மம் கூறுகிறது. இந்த சுடுகாட்டில் சீல் வைத்த பின்னர் மர்ம சுடுகாட்டை ஒவ்வொரு முறையும் வால்ட் என்பவர் திறந்து பார்க்கும் போது சுடுகாட்டில் இருந்த சவப்பெட்டிகள் இருந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருப்பது மர்மமான தகவலாக வெளிவந்துள்ளது.
ஜான் எஃப் கென்னடியின் மர்மமான இறப்பு:
ஜான் எஃப் கென்னடி என்பவர் 35-வது அதிபராக அமெரிக்கா நாட்டில் இருந்தவர். இவருடைய இறப்பு உலகெங்கும் பெரும் மர்மமாக இருந்தது. ஜான் எஃப் கென்னடியை லீ ஹார்வி ஆஸ்வால்டு என்பவரால் 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி அன்று சுட்டு கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஆஸ்வால்டு காவலரால் கைது செய்யப்பட்டு இரண்டாம் நாளே ஆஸ்வால்டை யாரோ ஒரு மர்மமான நபர் சுட்டு கொன்றுவிட்டார். இப்பொழுது ஜான் எஃப் கென்னடி ஏன் சுட்டு கொல்லப்பட்டார். ஆஸ்வால்டை எந்த நபர் சுட்டு கொன்றது? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விஷயம் தீராத மர்மமாக இன்றும் இருக்கிறது. அமெரிக்க நாட்டிற்கு ஜான் எஃப் கென்னடி அதிபராக இருந்த போது தான் அமெரிக்கா நிலவிற்கு முதன் முதலாக மனிதனை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
10 உலகின் மிக ஆபத்தான நாய்கள் |
மர்மம் நிறைந்த செயின்ட் லூயிஸ் கல்லறை:
இந்த செயின்ட் லூயிஸ் கல்லறையை மர்மம் நிறைந்தது என்று கூற காரணம் இங்கு வூடு பாதிரியாரின் ஆவிகள் பல சந்தர்ப்பங்களில் துளியும் தொடர்பில்லாத நபர்களால் அடையாளம் காணப்பட்டது. பாதிரியார் தன் மகளுடன் இரவு முழுவதும் கல்லறையை சுற்றி வருவதாக மர்ம கதையில் வெளியாகியுள்ளது.
இயேசுவின் உண்மையான தோற்ற மர்மம்:
உலகம் எங்கும் பரவிய மிகப்பெரிய மதம் கிறித்தவ மதம் தான். உலகில் உள்ள அனைத்து மக்களும் கிறிஸ்தவ மதத்தில் கடவுளாக இயேசு கிறிஸ்துவையே ஏற்றுக்கொண்டனர். இயேசுவின் தோற்றத்தில் பல மர்மம் நிறைந்த தகவல்கள் உள்ளன. இயேசு கிறிஸ்து குடியிருக்கும் வீட்டினை பல ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அது பெரும் சர்ச்சையாகியது. இயேசு கிறிஸ்துவின் முக தோற்றம் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இன மக்களுக்கும் ஏற்றார் போல பல வண்ணங்களில் அவர் தோற்றம் இருந்தது. ஆனால் இன்றுவரை அவருடைய உண்மையான தோற்றம் யாருக்கும் தெரிந்ததாக மர்ம தகவலில் வெளியாகவில்லை.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |